என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கித் தருமாறு அன்புத் தொல்லை: ஹர்மன்ப்ரீத் கவுர் சொல்கிறார்
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.
ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.
"தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.






