என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 3-வது டி20 போட்டி
- அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்.
ஹோபர்ட்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். அதே நேரத்தில் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் உள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






