என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபனுக்கான பயிற்சி போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகியதால் அவர் போட்டியில் பங்கேற்பாரா? என்பது மர்மமாகவே இருந்தது.
    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். 

    ஆனால், நம்பர்-1 வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார். இதனால் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    ஜோகோவிச்

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தாமல் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார். 

    ஜோகோவிச் இதற்கு முன்பு சிட்னியில் நடந்த ஏடிபி கோப்பை தொடருக்கான செர்பிய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபனுக்கான பயிற்சி போட்டியில் இருந்து விலகினார். எனவே, அவர் போட்டியில் பங்கேற்பாரா? என்பது மர்மமாகவே இருந்தது. தற்போது அவர் தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற்ற தகவலை வெளியிட்டதன் மூலம் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சமநிலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் வெற்றி பெற்று, 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் சாதனையை முறியடிக்க தீவிர முயற்சி செய்வார்.
    மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் என மாற்றி மாற்றி பார்த்த பிறகும் இங்கிலாந்து அணிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்து அணியின் நட்டசத்திர பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் (2-வது போட்டி) மட்டுமே இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நாளை அடிலெய்டில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

    ஓலி ராபின்சன்

    முதல் மூன்று போட்டிகளில் விளையாடி ஓலி ராபின்சன் காயம் காரணமாக 4-வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஸ்டூவர்ட் பிராட் அணியில் இடம் பிடித்துள்ளார். ராபின்சன் மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2-வது போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 68 ரன்னில் சுருண்டாலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    அனுபவமில்லாத வீரர்களை மிடில் ஆர்டரில் களமிறக்குவது எளிதான காரியமல்ல என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியா டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, புஜாரா இருவரும் கடந்த சில போட்டிகளில் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். 
    தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸின்போது புஜாரா 33 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராஹானே ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

    இதனால் இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இருவரும் அணியில் நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    விராட் கோலி, புஜாரா, ரஹானே

    இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:-

    புஜாராவும், ரஹானேவும் கடந்த சில போட்டிகளில் சொதப்பி வருகின்றனர்.  ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களை மாற்றுவது எளிதான காரியமல்ல. அனுபவம் இல்லாத வீரர்களை அந்த இடத்தில் களமிறக்குவது சரியாக இருக்காது. புஜாரா, ரஹானே இருவரும் இந்த தொடர் முழுவதுமாவது ஆட வேண்டும். அதன்பின் என்ன செய்யலாம் என பிறகு யோசிக்கலாம்.

    இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ரன்கள் சேகரிக்க முடியாமல் திணறி வருகிறார். ஆனால் அவரை நீக்குவது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அவர் அணியின் கேப்டன் தான். புஜாரா, ரஹானேவுடன் கோலியை ஒப்பிடக்கூடாது தான். ஆனால் இருவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

    வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து 17 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகளை மட்டுமே வைத்துள்ளது.
    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுன்ட் மவுங்கானுயில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவன் கான்வே (122) சதத்தால் 328 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 458 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாய் 78 ரன்களும், ஷான்டோ 64 ரன்களும், கேப்டன் மொமினுல் ஹக் 88 ரன்களும், விக்கெட் கீப்பர் லிட்டோஸ் தாஸ் 86 ரன்களும் சேர்த்தனர்.

    130 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. வங்காளதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டாம் லாதம் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவன் கான்வே 13 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் வில் யங் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் டெய்லர் ஒரு பக்கம் நிற்க, மறுபக்கம் ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளன்டெல் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி வெளியேறினார்.

    ராஸ் டெய்லர்

    இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 147 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை நியூசிலாந்து 17 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாளைய 5-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் வங்காளதேச அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    100 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் வங்காளதேசம் சேஸிங் செய்து நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்து சாதனைப் படைக்கும்.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்தது என முன்னாள் விக்கெட் கீப்பர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா காயத்தால் விளையாடவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்படுவார் என்ற நிலையில், பும்ரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ரிஷாப் பண்ட்-ஐ துணைக் கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்திருத்தனர். சிலர் பும்ரா தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரிம், ரிஷாப் பண்ட்தான் தனது முதல் சாய்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பும்ராவை துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. ரிஷாப் பண்ட் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி வருவதால் துணைக் கேப்டனாக நியமிக்கப்படுவார் என நம்பிக் கொண்டிருந்தேன்.

    ரிஷாப் பண்ட்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவர் எப்படி போட்டியை கண்காணிக்கிறார் என்று நாம் பார்த்துக் கொண்டிருந்தார். போட்டி குறித்து அதிக அளவில் தெரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
    முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் பின்தங்கி உள்ளது
    ஜோகன்னஸ்பெர்க் :

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.  எனினும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து களம் திரும்பினர். ரஹானே ரன் எடுக்காமலும், புஜாரா 3 ரன்னுடன் வெளியேறினர்.

    உணவு இடைவேளை வரை இந்திய அணி  3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. கே. எல். ராகுல் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    அதன்பின் ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்ட் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்து வந்த இந்திய அணியின் பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.   அந்த அணி துவக்க வீரர் மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.கேப்டன் டீன் எல்கார் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    ஜோகன்னஸ்பெர்க்:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

    டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். 

    தொடக்க ஜோடியாக களமிறங்கிய கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. இதையடுத்து மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, அடுத்தடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ராகுல் 50, பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஸ்வின் நிதானமாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முகமது ஷமி 9, பும்ரா 14, சிராஜ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

    தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
    புஜாரா 3 ரன்களிலும், ரகானே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டிலும் வெளியேற இந்தியா 91 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

    டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடினார். 

    மயங்க் அகர்வாலின் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 37 பந்தில 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 3 ரன்களில் வழக்கம் போல் ஏமாற்றினார்.

    3-வது விக்கெட்டுக்கு வந்த ரகானே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 49 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. என்றாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.

    ரகானே

    5-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் பதவியையும் ஏற்றிருக்கும் கே.எல். ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்தியா 41 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 42 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயம் காரணமாக விராட் கோலி இடம் பெறாததால், கே.எல். ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    2-வது இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலிக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டன் சுண்ட வந்தார். இதனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    டாஸ் வென்ற கே.எல். ராகுல், விராட் கோலி முதுகு வலி காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. நான் கேப்டனாக செயல்பட இருக்கிறேன் என்றார். இதன்மூலம் விராட் கோலி நீக்கப்படவில்லை, காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடவில்லை என்பது உறுதியானது. இந்திய அணியில் விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.


    இந்திய அணி வீரர்கள்

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கே.எல். ராகுல் (கேப்டன்), 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா, 4. ரகானே, 5. ஹனுமா விஹாரி, 6. ரிஷாப் பண்ட், 7. அஸ்வின், 8. ஷர்துல் தாகூர், 9. முகமது ஷமி, 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.
    பாகிஸ்தான் அணிக்காக சுமார் 18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த முகமது ஹபீஸ் தற்போது ஓய்வு முடிவை அறிவித்தள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ். கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர், தற்போது ஓய்வு முடிவு அறிவித்தள்ளார்.

    2003-ம் ஆண்டு முகமது ஹபீஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பங்கேற்றார்.

    ஹபீஸ் முன்னதாக 2020 டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உலகக்கோப்பை தள்ளிப்போக அவரது ஓய்வும் தள்ளிப்போனது. தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

    முகமது ஹபீஸ்

    18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஹபீஸ் 55 டெஸ்ட், 218 ஒருநாள், 119 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 12,780 ரன்கள் அடித்துள்ளார்.

    2018-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹபீஸ், 2019 உலகக்கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முதல் டெஸ்டை வென்றது போல் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டர்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது.

    முதல் டெஸ்டை வென்றது போல் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியும், ரகானேயும் 100-வது கேட்ச் சாதனை செய்யும் ஆர்வத்தில் உள்ளனர். இந்த சாதனையை புரிய ரகானேவுக்கு ஒரு கேட்ச்சும், கோலிக்கு 2 கேட்ச்சும் எஞ்சியுள்ளன.

    ரகானே 80 டெஸ்டில் 153 இன்னிங்சில் 99 கேட்ச் பிடித்துள்ளார். அதிகபட்சமாக 5 கேட்ச் பிடித்துள்ளார். விராட்கோலி 98 டெஸ்டில் 187 இன்னிங்சில் 98 கேட்ச் பிடித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் 163 டெஸ்டில் 299 இன்னிங்சில் (1996 முதல் 2012 வரை) 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

    வி.வி.எஸ். லட்சுமண் (135), தெண்டுல்கர் (115), கவாஸ்கர் (108), அசாருதீன் (105) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
    புரோ கபடி லீக் போட்டியில் நாளை நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 3 டை, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி 36-26 என்ற கணக்கில் புனேயை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணியிடம் 30-38 என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் (40-40), மும்பை (30-30), டெல்லி (30-30) ஆகியவற்றுடன் டை செய்து இருந்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 6-வது ஆட்டத்தில் உ.பி. யோதாவுடன் நாளை மோதுகிறது. இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    உ.பி. அணி ஒரு வெற்றி, 2 டை, 2 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    நேற்று நடந்த ஆட்டங்களில் அரியானா 38-36 என்ற கணக்கில் குஜராத்தையும், பெங்களூரு புல்ஸ் 40-29 என்ற கணக்கில் புனேயையும் வீழ்த்தின.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியஸ்- ஜெய்ப்பூர் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட் டன்ஸ் -பாட்னா பைரேட்ஸ் (8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் பெங்களூரு அணி 23 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி (21 புள்ளி), மும்பை (17), பாட்னா (16) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. 
    ×