என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கே.எல். ராகுல்
    X
    கே.எல். ராகுல்

    91 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்த இந்தியா: கே.எல். ராகுல் போராட்டம்

    புஜாரா 3 ரன்களிலும், ரகானே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டிலும் வெளியேற இந்தியா 91 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

    டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடினார். 

    மயங்க் அகர்வாலின் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 37 பந்தில 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா 3 ரன்களில் வழக்கம் போல் ஏமாற்றினார்.

    3-வது விக்கெட்டுக்கு வந்த ரகானே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 49 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. என்றாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.

    ரகானே

    5-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் பதவியையும் ஏற்றிருக்கும் கே.எல். ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்தியா 41 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 42 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×