search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Hafeez"

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    • விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சதம் விளாசிய விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி அணிக்காக விளையாடாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன், இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49- வது ஓவரில், அவர் தனது சொந்த சதத்தை பதிவு செய்ய ஒரு ரன் எடுக்க நினைத்தார். மேலும் அவர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    ரோகித்தும் சுயநல கிரிக்கெட்டையும் விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் தனக்காக விளையாடாமல் இந்தியாவுக்காக விளையாடுகிறார். விராட் நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் 97 ரன்களை எட்டும் வரை அழகாக பேட்டிங் செய்தார். ஆனால் கடைசியாக எடுத்த 1 ரன்கள் குறித்து நான் பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிப்பதற்குப் பதிலாக 1 ரன்னை தேடினார். அவர் 97 அல்லது 99 ரன்களில் வெளியேறினால் யார் கவலைப்படுகிறார்கள். நம் தனிப்பட்ட மைல்கல்லை விட அணிதான் எப்போதுமே மேலே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இடம் பெற்று இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பீடுவதற்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம், துணை கேப்டன் ஷதாப்கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது.
    • ரோகித்சர்மா பலவீனமாகவும், பயத்துடனும் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.

    ஆசிய கோப்பை போட்டியில் ரோகித்சர்மாவின் பேட்டிங் குறித்தும், கேப்டன் பதவி குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை போட்டியில் பார்க்கும் போது பலவீனமாக தெரிந்தார். அவர் பயத்துடன் இருக்கிறார். குழப்பமாகவும் காணப்படுகிறார்.

    இதற்கு முன்பு நான் அவரை இப்படி பார்த்ததில்லை. கேப்டன் பதவி ரோகித்சர்மாவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்று நினைக்கிறேன். அவர் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்.

    ரோகித் சர்மாவின் பேட்டிங் நிலை சரிவில் இருக்கிறது. ஐ.பி.எல்.லில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. கேப்டன் பதவியில் இந்திய அணிக்காக ஆடும் போது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

    அவர் பல விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவருக்கு அது சரியாக அமையவில்லை. பேசுவது எளிது. ஆனால் செய்வது கடினமானது. இது எனது கணிப்பு அல்ல. ரோகித் சர்மா முன்னோக்கி செல்வது கடினம் என்பது எனது கருத்தாகும்.


    கேப்டன் பதவியில் அவரால் நீண்ட காலம் நிலைத்து இருக்க முடியாது.

    ரோகித் சர்மா ரசித்து வெளிப்படுத்தும் ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது மாதிரியான ஆட்டத்தை அவரால் தற்போது வெளிப்படுத்த இயலவில்லை. பல விஷயங்களை அவர் தவற விட்டுள்ளார். நான் அவருக்காக வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ இந்திய சிந்தனையாளர் குழுவோ முடிவு செய்யும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

    ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்தில் 12 ரன்னும், ஆங்காங்குக்கு எதிராக 13 பந்தில் 21 ரன்னும் எடுத்தார்.

    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகமது ஹபீஸ் (126), இமாம்-உல்-ஹக் (76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்திருந்தது.

    ஹரிஸ் சோஹைல் 15 ரன்னுடனும், முகமது அப்பாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முகமது அப்பாஸ் நேற்று எடுத்திருந்த 1 ரன்னிலேயே வெளியேறினார்.


    80 ரன்னில் ஆட்டமிழந்த ஆசாத் ஷபிக்

    அடுத்து ஆசாத் ஷபிக் களம் இறங்கினார். ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோஹைல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


    3 விக்கெட் வீழ்த்திய பீட்டர் சிடில்

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 164.2 ஓவர்கள் விளையாடி 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பீட்டில் சிடில் 3 விக்கெட்டும், நாதன் லயன் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அனுபவ ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    இதில் அனுபவ வீரரான முகமது ஹபீஸ்க்கு இடம் கிடைத்துள்ளது. 37 வயதாகும் ஹபீஸ் 2016-ம் ஆண்டு தனது 50-வது டெஸ்டில் விளையாடினார். அதன்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.

    சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம் பெறவில்லை. பாகிஸ்தான் அணியில் பெரும்பாலான இளைஞர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு போதுமான அளவு அனுபவம் இல்லாததால், முகமது ஹபீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அசார் அலி, 2. இமாம்-உல்-ஹக், 3. பகர் சமான், 4. பாபர் ஆசம், 5. ஆசாத் ஷபிக், 6. ஹரிஸ் சோஹைல், 7. உஸ்மான் சலாஹுதீன், 8. சர்பிராஸ் அஹமது. 9. முகமது ரிஸ்வான், 10. பஹீம் அஷ்ரப், 11. சதாப் கான், 12. பிலால் ஆஷிப், 13. யாசிர் ஷா, 14. முகமது அப்பாஸ், 15. வஹாப் ரியாஸ், 16. ஹசன் அலி, 17. மிர் ஹம்சா, 18. முகமது ஹபீஸ்.
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ், இமாத் வாசிம் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. #AsiaCup #PCB
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் உள்பட ஆறு அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதற்கான இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் முகமது ஹபீஸ், இமாத் வாசிம் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.


    இமாத் வாசிம்

    ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள 16 வீரர்கள் விவரம்:-

    1. பகர் சமான், 2. இமாம்-உல்-ஹக், 3. ஷான் மசூத், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. சர்பிராஸ் அஹமது, 7. ஹாரிஸ் சோஹைல், 8. ஆசிஃப் அலி, 9. முகமது நவாஸ், 10. பஹீம் அஷ்ரஃப், 11. ஷதாப் கான், 12. முகமது ஆமிர், 13. ஹசன் அலி, 14. ஜுனைத் கான், 15, உஸ்மான் கான், 16. ஷஹீன் அஃப்ரிடி.
    மூன்று முறை தனது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், ஐசிசி மீது பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஐசிசி மீது குற்றம்சாட்டியுள்ளார். #ICC
    பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ். 37 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 50 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

    வலது கை ஆஃப்பிரேக் பந்து வீச்சாளரான இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக மூன்று முறை குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக ஐசிசி அங்கீகாரம் பெற்ற சென்டரில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதன்பிறகு பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தி நற்சான்றிதழ் பெற்றுள்ளார். ஐசிசியின் இதற்கான சரியான வழிமுறையை கொண்டு வர வேண்டும். பந்து வீச்சு ஆக்சன் பிரச்சனையில் நிலைத்தன்மையின் குறைபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் ‘‘சந்தேகத்திற்குரிய பந்து வீச்சு என்பதை முடிவு செய்வதில் ஏராளமான தூண்டுதல் உள்ளது. மிகவும் வலுவான கிரிக்கெட் போர்டு உடன் ஏராளமான விஷயங்கள் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட் வாரியத்தில் உள்ள வீரர்கரளை சந்தேகத்திற்குள்ளாக்க எவரும் விரும்புவதில்லை. அவர்களுடன் எளிதாக போக்கையை கையாள்கின்றனர்.

    சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரும் வீரர்களையும் இந்த சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏன் அமல்படுத்தவில்லை என்பதுதான் என் கேள்வி. இதில் என் கஷ்டம் இருக்கிறது’’ என்றார்.
    ×