search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haris Sohail"

    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகமது ஹபீஸ் (126), இமாம்-உல்-ஹக் (76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்திருந்தது.

    ஹரிஸ் சோஹைல் 15 ரன்னுடனும், முகமது அப்பாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முகமது அப்பாஸ் நேற்று எடுத்திருந்த 1 ரன்னிலேயே வெளியேறினார்.


    80 ரன்னில் ஆட்டமிழந்த ஆசாத் ஷபிக்

    அடுத்து ஆசாத் ஷபிக் களம் இறங்கினார். ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோஹைல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


    3 விக்கெட் வீழ்த்திய பீட்டர் சிடில்

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 164.2 ஓவர்கள் விளையாடி 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பீட்டில் சிடில் 3 விக்கெட்டும், நாதன் லயன் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    ×