search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பையில் 3-வது முறையாக சுயநல கேம்- கோலியை விமர்சித்த ஹஃபீஸ்
    X

    உலகக் கோப்பையில் 3-வது முறையாக சுயநல கேம்- கோலியை விமர்சித்த ஹஃபீஸ்

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    • விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சதம் விளாசிய விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி அணிக்காக விளையாடாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன், இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49- வது ஓவரில், அவர் தனது சொந்த சதத்தை பதிவு செய்ய ஒரு ரன் எடுக்க நினைத்தார். மேலும் அவர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    ரோகித்தும் சுயநல கிரிக்கெட்டையும் விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் தனக்காக விளையாடாமல் இந்தியாவுக்காக விளையாடுகிறார். விராட் நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் 97 ரன்களை எட்டும் வரை அழகாக பேட்டிங் செய்தார். ஆனால் கடைசியாக எடுத்த 1 ரன்கள் குறித்து நான் பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிப்பதற்குப் பதிலாக 1 ரன்னை தேடினார். அவர் 97 அல்லது 99 ரன்களில் வெளியேறினால் யார் கவலைப்படுகிறார்கள். நம் தனிப்பட்ட மைல்கல்லை விட அணிதான் எப்போதுமே மேலே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×