search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Bowling actions"

    மூன்று முறை தனது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், ஐசிசி மீது பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஐசிசி மீது குற்றம்சாட்டியுள்ளார். #ICC
    பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ். 37 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்காக 50 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

    வலது கை ஆஃப்பிரேக் பந்து வீச்சாளரான இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக மூன்று முறை குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக ஐசிசி அங்கீகாரம் பெற்ற சென்டரில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதன்பிறகு பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தி நற்சான்றிதழ் பெற்றுள்ளார். ஐசிசியின் இதற்கான சரியான வழிமுறையை கொண்டு வர வேண்டும். பந்து வீச்சு ஆக்சன் பிரச்சனையில் நிலைத்தன்மையின் குறைபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் ‘‘சந்தேகத்திற்குரிய பந்து வீச்சு என்பதை முடிவு செய்வதில் ஏராளமான தூண்டுதல் உள்ளது. மிகவும் வலுவான கிரிக்கெட் போர்டு உடன் ஏராளமான விஷயங்கள் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட் வாரியத்தில் உள்ள வீரர்கரளை சந்தேகத்திற்குள்ளாக்க எவரும் விரும்புவதில்லை. அவர்களுடன் எளிதாக போக்கையை கையாள்கின்றனர்.

    சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரும் வீரர்களையும் இந்த சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏன் அமல்படுத்தவில்லை என்பதுதான் என் கேள்வி. இதில் என் கஷ்டம் இருக்கிறது’’ என்றார்.
    ×