என் மலர்
விளையாட்டு

ஸ்டூவர்ட் பிராட்
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் மீண்டும் ஸ்டூவர்ட் பிராட்
மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் என மாற்றி மாற்றி பார்த்த பிறகும் இங்கிலாந்து அணிக்கு பலன் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து அணியின் நட்டசத்திர பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் (2-வது போட்டி) மட்டுமே இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நாளை அடிலெய்டில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் விளையாடி ஓலி ராபின்சன் காயம் காரணமாக 4-வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஸ்டூவர்ட் பிராட் அணியில் இடம் பிடித்துள்ளார். ராபின்சன் மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 2-வது போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 68 ரன்னில் சுருண்டாலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Next Story






