search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி
    X
    இந்தியா-தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் போட்டி

    ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட் கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள்

    முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் பின்தங்கி உள்ளது
    ஜோகன்னஸ்பெர்க் :

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.  எனினும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து களம் திரும்பினர். ரஹானே ரன் எடுக்காமலும், புஜாரா 3 ரன்னுடன் வெளியேறினர்.

    உணவு இடைவேளை வரை இந்திய அணி  3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. கே. எல். ராகுல் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    அதன்பின் ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்ட் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்து வந்த இந்திய அணியின் பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.   அந்த அணி துவக்க வீரர் மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.கேப்டன் டீன் எல்கார் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா அணி 167 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×