என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார்.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக லானிங் விளையாடி வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் மகளிர் பிக்பாஷ் தொடர் (WBBL) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது. இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச அணியின் ஸ்கோராகும்.

    இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் 22 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக ஆகும்.

    இதற்கு முன்பு லிசெல் லீ (150*), மற்றும் கிரேஸ் ஹாரிஸ் (136*) மட்டுமே அதிக ரன்கள் எடுத்த முதல் இரண்டு வீராங்கனைகள் ஆவர்.

    நடந்து வரும் WBBL-ல், அவர் நான்கு போட்டிகளில் 288 ரன்கள் எடுத்து, 163 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 96 சராசரியுடன் அபாரமான ஃபார்மில் உள்ளார்.

    இதனால் நவம்பர் 27 அன்று டெல்லியில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) ஏலத்தில் இவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக லானிங் இருந்து வந்தார். அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது.

    இந்நிலையில் ஏலத்திற்கு முன்பு அணிகள் ஒரு குறிப்பிட்ட வீராங்கனைகளை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பட்சத்தில் லானிங் விடுவிக்கப்பட்டார். அவரை ஏன் விடுவித்தோம் என டெல்லி நிர்வாகம் இந்த போட்டியை பார்த்த பிறகு வருத்தப்பட்டிருக்கலாம்.  

    • முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகள் பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் நேற்று கவுதாத்திக்கு புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று கவுகாத்திக்கு சென்றடைந்தனர். மேள தாளங்கள் முழங்க அவர்கள் வரவேற்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டதில் இருந்து கவுகாத்திக்கு சென்றது வரை உள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

    • வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரஹீம் படைத்துள்ளார்.
    • 100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார்.

    அயர்லாந்து கிரிக்கெ அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.

    100-வது போட்டியில் விளையாடிய ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    அதன்படி 100-வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 11-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.

    100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வீரர்கள் விவரம்:-

    கோலின் கவுட்ரி (இங்கிலாந்து)

    ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்)

    கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)

    அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)

    இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)

    ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

    கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)

    ஹாஷிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)

    ஜோ ரூட் (இங்கிலாந்து)

    டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)

    முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்)

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ரஹீமின் 13-வது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் டெஸ்டில் ஹார்மர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
    • 2-வது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்யும்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர் முதல் டெஸ்டில் பீல்டிங் செய்த போது காயம் அடைந்தார். அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்த விவரம் மருத்துவ அறிக்கையில் மட்டுமே தெரியவரும். அதை பொறுத்து 2-வது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணி முடிவு செய்யும்.

    கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-

    உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.

    ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் இரண்டு பழங்குடி வீரர்கள் முதல் முறையாக இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகியோர் பழங்குடி வீரர்கள் ஆவர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறது. இதுவரை ஒரு பழங்குடி வீரர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு பழங்குடி (Indigenous) வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் என்ற இரண்டு பழங்குடி வீரர்கள் ஒன்றாக விளையாட உள்ளனர்.

    பழங்குடி ஆஸ்திரேலியர்கள் என்பவர்கள் அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெயிட் ஐலாண்டர் மக்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சில பழங்குடி வீரர்களே விளையாடியுள்ளனர். ஆண்களில் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ஸ்காட் போலண்ட் மட்டுமே.

    அவர்களுக்கு அடுத்து மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார். இது பழங்குடி சமூகத்தின் திறமையை அங்கீகரிப்பதும், கிரிக்கெட்டில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும் ஆகும். இது அடுத்த தலைமுறை பழங்குடி இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

    • ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • முதல் டெஸ்டில் பிரெண்டன் டாகெட் அறிமுகமாகிறார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த தொடருக்கான கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிமுகப்படுத்தினர். இதற்கான போட்டோஷூட் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பேட்டர் ஜேக் வெதரால்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர்களாக களமிறங்குகிறார்கள்.

    முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-

    உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.

    • இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
    • சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை சென்னை, மதுரையில் நடக்கிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    போட்டியை நடத்தும் இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. 28-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர் கொள்கிறது.

    உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஏற்கனவே சென்னை வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், அர்ஜென்டினா அணிகளும் வந்துள்ளன.

    இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.

    பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோகித், ஜூனியர் உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எந்தவித நெருக்கடியும் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இயல்பாகவே இருக்கிறேன். அணியில் 4 முதல் 5 சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் கடந்த காலத்தில் கேப்டனாக பணியாற்றினார்கள். நெருக்கடியை எப்படி கையாள்வது என்பதை பற்றி பயிற்சியாளர் எங்களுக்கு அறிவுறுத்துவார்.

    சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஜூனியர் உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு ரோகித் கூறி உள்ளார்.

    பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கூறும் போது, கேப்டன் ரோகித் ஒரு அற்புதமான வீரர். அணியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். 4 சீனியர் வீரர்களில் அவர் கேப்டனாக உள்ளார். அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். கேப்டனாக அவர் தேர்வானது கூட்டு முடிவு என்றார்.

    21 வயதான ரோகித் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் டப்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 2022-ம் ஆண்டு ஜூனியர் அணியில் இணைந்தார். ஆசிய கோப்பை மற்றும் சுல்தான் ஜோகா் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இதனால் டிராக்பிளிக்கரான அவர் சில சீனியர்களை விட கேப்டனாக தேர்வு பெற்றார்.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி திருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, மதுரை மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஹாக்கி திருவிழாவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.

    • கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் காயமடைந்தார்.
    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகி உள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லுக்கு ஏற்பட்ட காயம் சரியாகி வருவதாக மருத்துவர்கள் கூறினாலும் அவருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி இடம் பெற மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

    அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.

    மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
    • அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தைவானின் லீ சியா ஹோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×