என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிக்பாஷ் டி20: 137 ரன்கள் விளாசிய மெக் லானிங்- வருந்தும் டெல்லி கேபிடல்ஸ்
- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார்.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக லானிங் விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் மகளிர் பிக்பாஷ் தொடர் (WBBL) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது. இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச அணியின் ஸ்கோராகும்.
இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய லானிங் 74 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் 22 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இது WBBL வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக ஆகும்.
இதற்கு முன்பு லிசெல் லீ (150*), மற்றும் கிரேஸ் ஹாரிஸ் (136*) மட்டுமே அதிக ரன்கள் எடுத்த முதல் இரண்டு வீராங்கனைகள் ஆவர்.
நடந்து வரும் WBBL-ல், அவர் நான்கு போட்டிகளில் 288 ரன்கள் எடுத்து, 163 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 96 சராசரியுடன் அபாரமான ஃபார்மில் உள்ளார்.
இதனால் நவம்பர் 27 அன்று டெல்லியில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) ஏலத்தில் இவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக லானிங் இருந்து வந்தார். அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது.
இந்நிலையில் ஏலத்திற்கு முன்பு அணிகள் ஒரு குறிப்பிட்ட வீராங்கனைகளை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பட்சத்தில் லானிங் விடுவிக்கப்பட்டார். அவரை ஏன் விடுவித்தோம் என டெல்லி நிர்வாகம் இந்த போட்டியை பார்த்த பிறகு வருத்தப்பட்டிருக்கலாம்.






