என் மலர்
விளையாட்டு
- 3-வது போட்டிக்கு முன்பு பாண்ட்யா அடித்த பந்து சிறுமியை தாக்கியது.
- 3-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த இக்கட்டான சூழலில் 3-வது போட்டியில் இரு அணிகளும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒரு சிறுமியை தாக்கியது. உடனே அந்த சிறுமி பிசிசிஐ-ன் மருத்துவ குழுவை அனுகினார். பின்னர் அந்த சிறுமியை போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று பாண்ட்யா கூறினார். பின்னர் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட பந்தை அவர் பரிசாக வழங்கினார். அதை வாங்கி கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.
திலக் வர்மாவை அரை சதம் அடிக்க விடாமல் செய்து விட்டதாக ஹர்திக் பாண்ட்யா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இந்த தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுமுக வீரர்களை கொண்டே இந்த தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் 2 இந்திய வீரர்களுடன் டி20-யில் ரிங்கு சிங் அறிமுக போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் முதல் வீரராக ரிங்கு சிங் உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், இதுவரை எந்த சர்வதேச ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஐபிஎல் 2023-ல் தனது அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
2-வது வீரராக பேக்அப் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் முதன்மை கீப்பராக இருப்பார். இருப்பினும், தொடரில் மூன்று ஆட்டங்கள் உள்ளதால், ஜிதேஷ் ஷர்மா ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
தொடை காயத்தில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் களம் இறங்கியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மார்ச் 2021-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
இவர்கள் மூவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளனர்.
அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.
- இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.
இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் இந்தியாவிடம் இல்லை.
- பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை.
பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் போல வீரர் இல்லாததே வெளிநாடுகளில் இந்தியா தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா சொந்த மண்ணில் மிகச் சிறந்த கலவை மற்றும் பேலன்ஸ் கொண்டிருப்பதால் அபாரமாக செயல்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 6 - 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஸ்விங் பந்துகளை வீசும் வீரர் இல்லை. அதாவது லேசாக பேட்டிங் செய்யும் பவுலர் அல்லாமல் முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் அவர்களிடம் இல்லை. அதுவே சொந்த மண்ணுக்கு வெளியே இந்தியாவை தடுமாற வைக்கிறது.
ஏனெனில் அவர்களிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் சுப்மன் கில் போன்ற வருங்கால சூப்பர் ஸ்டார்களும் இருக்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் தான் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக மாறும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா முழுமையாக ஃபிட்டாக விளையாடியிருந்தால் அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து அசத்தியிருப்பார்.
அதே போல ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். காயங்கள் எதுவுமில்லாத போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பவுலர். எனவே இது போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது சொந்த மண்ணில் இந்தியாவை மிகவும் வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது.
என்று கூறினார்.
- சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள்.
- உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.
இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 அரை சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.
நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.
- நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
- ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததன. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
லீக் முடிவில் இந்தியா 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மலேசியா 4 வெற்றி , 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்ததன. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
தென் கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் தலா 5 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியாவின் கோல் வித்தியாசம்-1 ஆகவும், ஜப்பானின் கோல் வித்தியாசம்-2 ஆகவும் இருந்தது. பாகிஸ்தான் அணியின் கோல் வித்தியாசம்-5 ஆகும்.
பாகிஸ்தான் 5-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. சீனா 1 டிரா, 4 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தை பிடித்தது.
இன்று ஓய்வு நாளாகும். அரைஇறுதி போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன. மலேசிய அணி 'லீக்' ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் எல்லா அணிகளையும் வீழ்த்தி இருந்தது. சீனாவை 7-2 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 5-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 3-2 என்ற கணக்கிலும், பாகிஸ் தான் 4-0 என்ற கணக்கி லும் வென்று இருந்தது. ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் 'டிரா' செய்து இருந்தது. இதனால் இந்திய அணி மிகவும் கவ னத்துடன் அரைஇறுதியில் விளையாட வேண்டும்.
இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளார். அவர் 7 கோல்களை அடித்து உள்ளார். இந்த 7 கோல் களையும் அவர் பெனால்டி கார்னர் மூலமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதிய 3 போட்டியில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது.
முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.
- பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
- பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.
பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.
- டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது.
புதுடெல்லி:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு காரணங்களுக்கான சில போட்டிகள் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நேற்று வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ள 9 ஆட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி நடக்கிறது. இதேபோல இந்தியா-நெதர்லாந்து அணிகள் நவம்பர் 12-ந் தேதி மோத இருந்த போட்டி நவம்பர் 11-ந் தேதியில் நடக்கிறது.
மேலும் பாகிஸ்தான்-இலங்கை, பாகிஸ்தான்-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டிகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந் தேதி தொடங்கும் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியா அல்லது மற்ற அணிகளுக்கான டிக்கெட்டுகள் அன்று முதல் விற்பனையாகிறது.
இந்தியா மோதும் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31 முதல் விற்பனையாகும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி எதிர் கொள்கிறது. அதை தொடர்ந்து 11-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும், (டெல்லி), 19-ந் தேதி வங்காளதேசத்துடனும் (புனே) மோதுகிறது. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி விற்பனையா கிறது.
இந்திய அணி அக்டோபர் 22-ந் தேதி நியூசிலாந்துடனும் (தர்மசாலா), இங்கிலாந்துடன் 29-ந் தேதியும் (லக்னோ), இலங்கையுடன் நவம்பர் 2-ந் தேதியும் (மும்பை) மோதுகின்றன. இந்த 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் நவம்பர் 5-ந் தேதி (கொல்கத்தா), நவம்பர் 12-ந் தேதி நெதர்லாந்துடன் (பெங்களூர்), மோதவுள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 2-ந் தேதி விற்பனையாகிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ந் தேதி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந் தேதி விற்பனை ஆகும்.
அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ந் தேதி விற்பனையாகிறது. இந்திய அணி திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 30-ந் தேதி விற்பனை செய்யப்படும்.
டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர்களை www.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இது டிக்கெட் வாங்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார்.
- அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.
புதுடெல்லி:
கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார். அவர் ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 3 தடவை பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கிரிக் கெட் வீரர், வீராங்கனைகள் 55 பேர் தங்களை ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
- நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
- ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வெலிங்டன்:
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்டு 30, செப்டம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 8, 10, 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. முன்னதாக நியூசிலாந்து- ஐக்கிய அரபு அமீரக அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி துபாயில் வருகிற 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியில், கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இதேபோல் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசனும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இருவரது வருகையும் நியூசிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல். போட்டியின் போது முழங்காலில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து தேறி வருகிறார். அவர் அணியினருடன் இங்கிலாந்து சென்று காயத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ள இருக்கிறார். வில்லியம்சன் ஆட முடியாததால் டாம் லாதம் கேப்டனாக தொடருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-
20 ஓவர் அணி: டிம் சவுதி (கேப்டன்), பின் ஆலென், மார்க் சாப்மேன், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் செய்பெர்ட், சோதி.
ஒருநாள் போட்டி அணி: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலென், டிரென்ட் பவுல்ட், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, வில் யங்.
- 81 பந்தில் சதம் அடித்த பிரித்வி ஷா 129 பந்தில் இரட்டை சதம்
- 28 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அவரது ஸ்கோரில் அடங்கும்
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. தொடக்க வீரரான இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 153 பந்தில் 244 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் கோப்பைக்கான (One-Day Cup) தொடரில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாடினார். சோமர்செட் அணிக்கெதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது அதிரடியால் நார்தாம்ப்டன்ஷைர் 8 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்தது.
அவரது ஸ்கோரில் 28 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் அடங்கும். 23 வயதான பிரித்வி ஷா 81 பந்தில் சதம் அடித்தார். 129 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.
ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரிக்கு எதிராக ஆட்டமிழக்கால் 227 ரன்கள் அடித்துள்ளார். இது அவரின் 2-வது இரட்டை சதமாகும்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
- உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.
ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.






