search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெளிநாட்டு டெஸ்டில் இந்தியா வெற்றி பெற பென் ஸ்டோக்ஸ் மாதிரி வீரர் தேவை: நாசர் உசேன்
    X

    வெளிநாட்டு டெஸ்டில் இந்தியா வெற்றி பெற பென் ஸ்டோக்ஸ் மாதிரி வீரர் தேவை: நாசர் உசேன்

    • முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் இந்தியாவிடம் இல்லை.
    • பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை.

    பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் போல வீரர் இல்லாததே வெளிநாடுகளில் இந்தியா தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா சொந்த மண்ணில் மிகச் சிறந்த கலவை மற்றும் பேலன்ஸ் கொண்டிருப்பதால் அபாரமாக செயல்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 6 - 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஸ்விங் பந்துகளை வீசும் வீரர் இல்லை. அதாவது லேசாக பேட்டிங் செய்யும் பவுலர் அல்லாமல் முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் அவர்களிடம் இல்லை. அதுவே சொந்த மண்ணுக்கு வெளியே இந்தியாவை தடுமாற வைக்கிறது.

    ஏனெனில் அவர்களிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் சுப்மன் கில் போன்ற வருங்கால சூப்பர் ஸ்டார்களும் இருக்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் தான் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக மாறும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா முழுமையாக ஃபிட்டாக விளையாடியிருந்தால் அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து அசத்தியிருப்பார்.

    அதே போல ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். காயங்கள் எதுவுமில்லாத போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பவுலர். எனவே இது போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது சொந்த மண்ணில் இந்தியாவை மிகவும் வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது.

    என்று கூறினார்.

    Next Story
    ×