என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

வாக்குப்பதிவு தொடங்கியபோது கோளாறு ஏற்பட்டதால் 305 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அரைமணிநேரத்தில் மாற்றப்படும். பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம்” என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #TNElections2019 #VoterTurnout
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.
வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.
தருமபுரியில் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார். திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் வாக்களித்தார்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, காவேரிப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த நத்தம் வாக்குச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்குப்பதிவு செய்தார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் உள்ள புனித தோமையர் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார். #Vijayakanth #Loksabhaelections2019
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரடியன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.
இதேபோல வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கையாள தெரியாததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குபதிவு 45 நிமிடம் தாமதமாக 7.45 மணிக்கு தொடங்கியது. சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதாகி 6 பேர் போட்ட ஓட்டு டெலிட் ஆகிவிட்டது. பின்னர் அதில் 4 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டு அவர்கள் ஓட்டை பதிவு செய்தனர். #Loksabhaelections2019 #OSManian
கோபி, ஏப். 18-
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓட்டு போட்டார்.
காலை 7.30 மணிக்கெல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
ஓட்டுப்பதிவு 7 மணி என்றாலும் காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்கு மையத்தில் வரிசையில் நிற்க தொடங்கினர்.
சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் வரிசையில் வந்து அமைதியாக ஓட்டு போட்டு தங்ளது ஜனநாயக கடமையாற்றினர். * * * தர்மபுரி-1 * * * பெங்களூரு தெற்கு தொகுதியில் அடங்கிய கிரி நகரில் ஓட்டுபோட காலை 7 மணிக்கே காத்திருந்த வாக்காளர்கள். * * * அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டபோது எடுத்த படம். * * * ஓட்டு போட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையின் நின்ற காட்சி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குசாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதில் தாமதம் ஆகிய குறைபாடுகள் உள்ளது.
தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான அணிகள் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019
தூத்துக்குடி, ஏப். 18-
தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றம் ஆழ்வார்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் வாக்களிப்பதற்காக தூத்துக்குடி அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு எந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் காத்து நின்ற வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்களித்து சென்றார்.
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இங்குள்ள நகராட்சி 3-வது வார்டு பகுதியில் தாய் கிராமமான செவலூர், சங்கமரெட்டியபட்டி கிராமங்கள் உள்ளன.
இதில் சங்கமரெட்டியபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இங்கு வசதிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளில் ஒன்றுக்கு கூட குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
இங்கு வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழிப்பட்டிக்கு செல்லவேண்டும். அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து சாலையின் சுவடே தெரியாத அளவில் காணப்படுகிறது.
இதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தேர்தல் காலத்திலாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
இங்கு 180 வாக்குகள் உள்ளன. அவர்கள் செவலூரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. #LoksabhaElections2019
புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Kiranbedi
புதுச்சேரி, ஏப். 18-
புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில வாககுச்சாவடிகளில் கட்சி களின் பூத் ஏஜெண்டுகள் கால தாமதமாக வந்ததால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க கால தாமதமானது.
அதுபோல் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது.
புதுவை மிஷன் வீதியில் உள்ள எக்கோலாங்கிளாஸ் பள்ளி வாக்குச்சாவடி, திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடி, முத்தியால் பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடி, பாகூர் அரசு பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த நிலை உருவானது.
வாக்குச்சாவடி அதிகாரிகள் எந்திர கோளாறை சரிசெய்ய முயன்றும் இயலாததால் மாற்று எந்திரங்கள் வர வழைக்கப்பட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க சுமார் 45 நிமிடம் கால தாமதமானது. *** புதுச்சேரி, ஏப். 18-
புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக் களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர் களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்த னர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜன நாயகம் மிகவும் வலிமை யானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்து கிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.
பொதுமக்கள் அனை வரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சி யாளர்கள் என்ன செய் கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக கவர்னர் கிரண்பேடி வரிசையில் நிற்கையில், நிருபர்கள் அவரை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது கிரண்பேடி தான் மூத்த குடிமகனாக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பதையே விரும்புகிறேன். புதுவையில் முதல் முறையாக வாக்



இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார். #Loksabhaelections2019 #OPS
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்.. சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் ஆணையம் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அதிமுகதான் என்றார்.
நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். உடுமலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் சம்பத், மதுரை அண்ணா நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புதுக்கோட்டை இலுப்பூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்களித்தனர். #LokSabhaElections2019 #MKStalin
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
2-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi






