என் மலர்
செய்திகள்

வாக்கு உரிமையை வீணாக்கக்கூடாது- புதுவை கவர்னர் கிரண்பேடி
புதுவையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த கவர்னர் கிரண்பேடி பொதுமக்கள் தங்களது வாக்கு உரிமையை வீணாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். #LoksabhaElections2019 #Kiranbedi
புதுச்சேரி:
புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #Kiranbedi

Next Story