என் மலர்
தேர்தல் செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயபுரம் கல்மண்டப போலீஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்குகிறார்.
27-ந்தேதி புதன்கிழமை
மாலை 4 மணி- ராயபுரம், 5 மணி- காசிமேடு சிக்னல், 5.30 மணி- திருவொற்றியூர் தேரடி, 6 மணி- மாதவரம்.
இரவு 7 மணி- மீஞ்சூர், 8 மணி- பொன்னேரி பஜார், 9 மணி- கும்மிடிப்பூண்டி பஜார்.
28-ந்தேதி வியாழன்கிழமை
மாலை 3 மணி- எம்.ஜி.ஆர். மார்க்கெட், 4 மணி- கோயம்பேடு, 5 மணி- திருமங்கலம், 5.30 மணி- பாடி, 6 மணி- அம்பத்தூர் பஸ் நிலையம்.
இரவு 7 மணி- ஆவடி செக்போஸ்ட், 8 மணி- திருவள்ளூர் பஜார், 9 மணி - பூந்தமல்லி பஜார்.
29-ந்தேதி வெள்ளிக்கிழமை
மாலை 3 மணி- காவேரிப்பாக்கம், 4 மணி- வாலாஜா பேட்டை பஸ் நிலையம், 4.15 மணி- ராணிப்பேட்டை முத்துக்கடை, 4.30 மணி- ஆற்காடு அண்ணா சிலை பஸ் நிலையம், 5 மணி- விசாரம் பஸ் நிலையம், 5.30 மணி- வேலூர், 6 மணி- காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், 6.30 மணி- கே.வி.குப்பம் பஸ் நிலையம்.
இரவு 7 மணி - குடியாத்தம் பஸ் நிலையம், 7.30 மணி - பேரணாம்பட்டு பஸ் நிலையம், 8 மணி- ஆம்பூர் பஜார், 8.30 மணி- மாதனூர் பஸ் நிலையம், 9 மணி - வாணியம்பாடி பஸ் நிலையம், 9.30 மணி - பர்கூர் பஸ் நிலையம்.
30-ந்தேதி சனிகிழமை
மாலை 3 மணி- சூளகிரி பஸ் நிலையம், 3.30 மணி- ஓசூர் எம்.ஜி.ஆர். சிலை, 4.30 மணி- கிருஷ்ணகிரி கார்னேசன் திடல், 5 மணி- காவேரிப்பட்டினம் பஸ் நிலையம், 5.30 மணி- பாலக்கோடு பஸ் நிலையம், 6 மணி- பாப்பரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை, 6.30 மணி- பென்னாகரம் பஸ் நிலையம் அருகில்.
இரவு 7 மணி- இண்டூர் பஸ் நிலையம் அருகில், 7.30 மணி- தர்மபுரி நான்கு ரோடு அண்ணாசிலை, 8 மணி- செட்டிக்கரை பொறியியல் கல்லூரி அருகில், 9 மணி- ஒடசல்பட்டி கூட்ரோடு, 10 மணி - கம்பைநல்லூர்.
31-ந்தேதி ஞாயிறு
மாலை 3 மணி- அயோத்தியா பட்டினம் ராமர்கோவில், 3.30 மணி- சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் திடல், 4 மணி- மல்லூர் பேரூராட்சி, 5 மணி- ராசிபரம் பஸ் நிலையம், 5.30 மணி- நாமக்கல் பஸ் நிலையம், 6.30 மணி- திருச்செங்கோடு.
இரவு 7 மணி- சங்ககிரி மெயிரோடு, 8 மணி- எடப்பாடி பஸ் நிலையம், 9 மணி- குமாரபாளையம் மூன்றுரோடு ஜங்ஷன்.
ஏப்ரல் 1-ந்தேதி திங்கட்கிழமை
மாலை 3 மணி- குமலான்பேட்டை, நசியனூர், 3.30 மணி- விஜயமங்கலம், பெருமாநல்லூர், கணக் கம்பாளையம், 4 மணி- வாவிபாளையம், பாண்டி யன் நகர், எம்.எஸ்.நகர், 4.30 மணி- கோல்டன் நகர், 4.45 மணி- பாளையக்காடு, 5 மணி- சி.டி.சி. காங்கேயம் ரோடு, 5.30 மணி- வெள் ளியங்காடு, 6 மணி- வித்யா லயம், 6.30 மணி- முருகன் பாளையம்.
இரவு 7 மணி- செல்லம் நகர், 7.30 மணி- ஆண்டி பாளையம், 8 மணி- சிறுபூலுவபட்டி, 8.30 மணி- வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, 9 மணி - அவினாசி.
ஏப்ரல் 2-ந்தேதி செவ்வாய்கிழமை
காலை 9 மணி- ஊட்டி, மாலை 4 மணி- மேட்டுப் பாளையம், 4.45 மணி- காரமடை, 5.15 மணி- பெரியநாயக்கன்பாளையம், 5.50 மணி- துடியலூர், 6.10 மணி - கவுண்டம்பாளையம், 6.25 மணி- சாய்பாபா கோவில் தெரு, 6.50 மணி- வடவள்ளி.
இரவு 7.10 மணி- செல்வ புரம், 7.30 மணி- உக்கடம், 7.50 மணி ஆத்துப்பாலம், 8.05 மணி- போத்தனூர், 8.30 மணி- ராமநாதபுரம், 8.50 மணி சிங்காநல்லூர், 9.30 மணி- சூலூர், 9.45 மணி- பல்லடம்.
ஏப்ரல் 3-ந்தேதி புதன்கிழமை
மாலை 3 மணி- பொள்ளாச்சி, 4 மணி- உடுமலை, 5 மணி- மடத்துக்குளம், 6 மணி- பழனி ரவுண்டானா, இரவு 7 மணி- ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரில், 7.30 மணி- வேடசந்தூர் ஆத்துமேடு, 8 மணி- அரவக்குறிச்சி, 9 மணி - கரூர்.
ஏப்ரல் 4-ந்தேதி வியாழன்கிழமை
மாலை 4 மணி- கரூர், 4.30 மணி- கிருஷ்ணராயபுரம், 5 மணி- குளித்தலை, 5.30 மணி- முசிறி, 6.30 மணி- டோல்கேட், இரவு 7 மணி- ஸ்ரீரங்கம், 7,30 மணி- திருச்சி கிழக்கு, 8 மணி- திருச்சி மேற்கு.
ஏப்ரல் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை
காலை 10 மணி - விராலிமலை, 11 மணி- மணப்பாறை, மாலை 4 மணி- திண்டுக்கல், 4.30 மணி- செம்பட்டி, 5 மணி- நிலக்கோட்டை, 5.30 மணி- வத்தலக்குண்டு, 6.30 மணி- தேவதானப்பட்டி, இரவு 7 மணி- பெரியகுளம், 7.30 மணி- தேனி, 8 மணி- ஆண்டிப்பட்டி, 9.30 மணி- உசிலம்பட்டி. #LSPolls #AMMK #TTVDhinakaran

இந்நிலையில், பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
நாளை காலை ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி, உத்தரகாண்ட் மற்றும் உ.பியின் மீரட்டில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கோராபுத், தெலுங்கானாவின் மெஹ்புப் நகர், ஆந்திராவின் கர்னூல் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் மீரட் பொதுக்கூட்டத்தில் 8 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேச உள்ளார். இந்த தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #ModiCampaign
தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்கள் வர இருப்பதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக எல்லையோரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
விஜயவாடாவில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்கிறார். 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் ஜெக்ரிவால் பிரசாரம் செய்ய உள்ளார். #LokSabhaElections2019
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். சார்பில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.
சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மாண்டியா தொகுதியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்தவில்லை.
சுமலதாவுக்கு காங்கிரசார் சிலரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் அவருக்கும் நிகிலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பா.ஜனதாவின் தேர்தல் வியூகம் குறித்து முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர் டி.ஆர். சித்தராமையா கூறும் போது சுமலதாவுக்கு மாண்டியா தொகுதியில் நிறைய ரசிகர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர்.
ஆனால் அவருக்கு பூத் கமிட்டி அளவில் தொண்டர்கள் இல்லை. எனவே அதை பூர்த்தி செய்ய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் சுமலதாவுக்கு உதவ முடுக்கிவிடப்படுவார்கள் என்றார்.#sumalatha

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதில் 16 பெட்டிகளில் 150 லேப்டாப்புகள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். #LSPolls
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தில் எந்த முதல்வரும் சாதிக்க இயலாத காரியத்தை சாதித்து காட்டியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். சட்டரீதியாக போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தமிழகத்துக்காக வாங்கி தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை போன்று நடந்து சென்றும், சைக்கிள் ஓட்டியும், டீ கடையில் டீ குடிப்பது போன்றும், மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். நானே டீ கடை நடத்தியவன். டீ கடையில் டீ சாப்பிடுவது யார்? டீ சாப்பிடுவது போல் நடிப்பது யார்? என்பது எனக்கு தெரியும்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பேண்ட் போட்டுக்கொண்டு ஏர் உழுவது இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலர் கலராக பேண்ட், சட்டைகளை போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
இலங்கையில் போர் நடக்கும்போது கருணாநிதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதுபோல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது,
இலங்கை தமிழர்களுக்காக நான் மத்திய அரசிடம் பேசி சுமூகமாக போரை நிறுத்தி விட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.
ஆனால் அதேசமயத்தில் இலங்கையில் பதுங்கும் குழியில் இருந்தவர்கள் கருணாநிதியின் பேச்சை நம்பி வெளியே வந்தனர். அப்போது இலங்கை அரசு வெடிகுண்டுகளை வீசி தமிழர்களை அழித்து விட்டனர். அந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போரை நிறுத்த வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த சென்ற கனிமொழி இலங்கை தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தாமல் பரிசு மட்டும் வாங்கி வந்து விட்டார்.
தி.மு.க.வினர் பிரியாணி கடை மற்றும் பரோட்டா கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டதற்கு கடைக்காரர்கள் காசு கேட்டனர். காசு கொடுக்காமல் கடைக்காரர்களை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர்.
காலை முதல் மாலை வரை அடுப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்களை தி.மு.க.வினர் வயிற்றில் அடிக்கிறார்கள். ஓசியில் சாப்பிட்டால் செரிக்காது.
தி.மு.க.வினர் ஏற்கனவே அவர்களுடன் இருந்தவர்களுடனே கூட்டணி அமைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி பழைய சோறு ஆகும்.
அம்மா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் என்ற தமிழர்களின் பண்பாட்டின்படி பாதி சீட்டை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளோம். மீதி தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம்.
தர்மத்தின் ஆட்சி நீடிக்கவும், வலிமையான பாரதம் அமையவும், வலிமையான பிரதமர் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நமது பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்போரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு நலம்பெற உறுதியான, ஆற்றல்மிக்க பிரதமர் வேண்டும் அதற்கு மோடி தான் தகுதியானவர். சதிக்காரர்கள் இந்தியநாட்டை அழிக்க நினைத்தபோது சதியை முறியடித்த திறமையான பிரதமர் மோடி.
எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும் என்று நினைத்த அம்மா அவர்களின் கனவு நிறைவேற வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல பல நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.
ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்த ஒரே அரசு இது. ஏழை, எளியோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க- வினர் நீதிமன்றம் சென்றனர். தடையாணை கொடுக்கவில்லை அதற்குள் தேர்தல் வந்துவிட்டது.
தேர்தல் முடிந்தவுடன் இந்த பணம் வழங்கப்படும். அதேபோல் தேசியஊரக வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கு பதில் 200 நாட்கள் வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Edappadipalaniswami
வள்ளியூர்:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஸ்ரீபால், முத்துகுமார் ஜெகதீஷ் ஆகிய போலீசார் வள்ளியூர் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வள்ளியூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தினர். காரில் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் இருந்தார். காரில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 200 இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை என டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் கூறியதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ராதாபுரம் சட்ட மன்ற தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர். #LSPolls
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன முக்கிய தகவலை மோடி வெளியிட உள்ளார்? என்று பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டனர். இதனால் அரசியல் களம் பரபரப்பானது. #Modi #LSPolls
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவுரங்காபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல் சத்தாரின் (சில்லோடு தொகுதி) ஆதரவாளர்கள் சிலர், அங்கிருந்த 300 நாற்காலிகளை எடுத்து வாகனத்தில் ஏற்றினர்.

நாற்காலிகளை சத்தார் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், ஆலோசனைக் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இதுபற்றி சத்தார் கூறுகையில், “அந்த நாற்காலிகள் அனைத்தும் நான் கட்சி கூட்டங்களுக்காக வாங்கிக் கொடுத்தவை. இப்போது நான் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். அதனால் என்னுடைய நாற்காலிகளை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர், பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
கட்சியின் முன்னணி தலைவரான சத்தார், தனக்கு அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், எம்எல்சி சுபாஷ் ஜாம்பத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சத்தார், கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த வேட்பாளர் ஜாம்பத், “சத்தாருக்கு நாற்காலிகள் தேவைப்பட்டதால் எடுத்துச் சென்றிருக்கலாம். இதனால் எங்களுக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அவர் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை” என்றார். #LokSabhaElections2019
தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டுவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
கூட்டம் முடிந்த உடன் தேனி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வத்தலக்குண்டு வழியாக மு.க.ஸ்டாலின் காரில் சென்றார். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற போது காரில் இருந்து கீழே இறங்கி மு.க.ஸ்டாலின் நடந்து சென்றார். சாலையின் இரு புறமும் நின்ற மக்களிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.
மேலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்களுக்கும் கை குலுக்கி வாக்கு சேகரித்தார். கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
தன்னை காண காத்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஸ்டாலின் காரில் இருந்து கீழே இறங்கி சந்தித்து பேசியது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #LSPolls #DMK #MKStalin






