என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகரில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பெண்களுக்கான உண்மையான விடுதலை பொருளாதார சுதந்திரமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஒன்றிய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் குறித்து, எடுத்துரைக்கும் வகையில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இந்தக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சமம் என்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்து ரிமை, சமஊதியம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் குடும்பத்திலும், சமூகத்திலும், பெண்க ளுக்கான சம உரிமைகளை செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. பல்வேறு சட்ட உரிமைகள், சட்ட விழிப்புணர்வுகள் இருந்தும் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதற்காக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளை காக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பெண்களின் முன்னேற்றத் திற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், மிகவும் எளிமையான வழிமுறை கல்வியாகும். கல்வி மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய நிலையில் பெண்களுக்கான உண்மையான விடுதலை என்பது பொருளாதார சுதந்திரமாகும். பெண்கள் பொருளாதாரம் ஈட்டுவ தற்கான வழிமுறைகளை மேம்படுத்து வதோடு, அவர்கள் சம்பாதித்த பணத்தின் மீது அவர் களுக்கான உரிமை வேண்டும். தமிழக அரசின் மூலம் புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவவர் பேசினார்.

    இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தங்கலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.
    • இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். 2 தங்கைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், கல்லூரணியை சேர்ந்த ஜெயக்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். அப்போது ஜெயக்குமார் கூறியதால் காதலி கர்ப்பத்தை கலைத்தாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (50), ஜெபமலர் (45), சகோதரி ஜான்சிமேரி (26) ஆகியோரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் எம்.ரெட்டியப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், அவரது பெற்றோர், சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.

    அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.

    • உரிமமின்றி பால் பொட்டலங்கள் விற்ற வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பால் வியாபாரிகள் தரமற்ற எடை அளவைகளை உபயோகப்படுத்துவதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந் தேதி ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பஞ்சு மார்க்கெட், ரெயில்வே பீடர் ரோடு பகுதிகளிலும், 24-ந்தேதி சூலக்கரை, முத்துராம்பட்டி அல்லம்பட்டி, பாண்டியன் நகர், மல்லாங்கிணறு ரோடு பகுதிகளிலும் கூட்டாய்வு செய்தனர்.

    இந்தக் கூட்டாய்வில் விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வர் சதாசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உதவி ஆய்வர்கள் தயாநிதி, துர்கா, பிச்சைக் கனி ஆகியோர் ஈடுபட்டனர். இதில் எடையளவுகளை

    உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த ஒரு வணிகர் மீதும், எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்ட தற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வண்ணம் வெளிக்காட்டி வைக்காத 1 வணிகர் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு. (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பால் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்ததாக ஒரு வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும் மறுமுத்திரையிடப்படாத 18 ஊற்றல் அளவைகள் பொதுப் பறிமுதல் செய்யப்பட்டது. ஊற்றல் அளவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்திரையிடப்பட வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, 2009ஆம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம். குற்றச்சாட்டிற்கு ரூ.25,000/-வரை அபராதமும், இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த சூற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் உதவி ஆணையர், 1/13 சி, ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    இந்தத் தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் சுப்பிர மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிர மணியம். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக ஆவுடையம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் மன நல பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று ஆவுடையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    ஆபத் தான நிலையில் பாளையங் கோட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடை யம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் கொலை செய்யும் படலம் நடந்து வருகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் மேலதெருவில் உள்ள குப்பையா தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 47). இவர் விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். மேலும் மருதுசேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும் இருந்தார்.

    நேற்று மாலை தேசபந்து திடல் எதிரே மாம்பழ பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் குமரவேல் கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அங்கு அவரது மனைவியின் தங்கை ரூபி (40), உறவினர் ராம்குமார் (34) ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்துக்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்குமார் அவர்களை தடுக்க முயன்றார். மேலும் அலுவலகத்தின் உள் அறையில் இருந்த குமரவேலிடமும் தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அலுவலகத்தின் கதவு, கண்ணாடி, பொருட்களை உடைத்து உள்ளே புகுந்தது.

    பின்னர் அரிவாளால் குமரவேலை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த ரூபி, ராம்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் பரிதாபமாக இறந்தார். ரூபி, ராம்குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் கொலை நடந்த இடத்தை விருதுநகர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக குமரவேல் கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

    விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்த மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர் தரப்பினருக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இதில் கடந்த மாதம் 18-ந்தேதி காரைக்குடியில் ஞான சேகரின் மகன் அறிவழகன் என்ற வினித்தை ஆதிநாராயணன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுதொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதி நாராயணன், மதுரையை சேர்ந்த தனசேகரன் மற்றும் கூலிப்படையினர் 9 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் குற்றவாளியாக கொலை செய்யப்பட்ட குமரவேலை போலீசார் சேர்த்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில் அவரது பெயர் வழக்கில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் அறிவழகன் கொலைக்கு பழிக்கு பழியாக ஞானசேகர் தரப்பினர் குமரவேலை நேற்று அலுவலகத்தில் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிகிச்சை பெற்றுவரும் ரூபி விருதுநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், விருதுநகரை சேர்ந்த பால்பாண்டி என்ற பவர் பாண்டி, அரவிந்த்ராஜ் என்ற சேகர் மற்றும் 20 வயது முதல் 25 வயதுடைய 6 பேர் என 8 பேர் கொண்ட கும்பல் நேற்று அலுவலகத்தில் புகுந்து குமரவேலை வெட்டி கொலை செய்தனர். மேலும் என்னையும், ராம் குமாரையும் அரிவாளால் வெட்டினர். குமரவேலை கொலை செய்த கும்பல், "அறிவழகனை கொலை செய்து விட்டு நீ உயிரோடு இருக்கிறாயா?" என கூறி வெட்டியது.

    மேலும் இந்த கொலைக்கு மையிட்டான் பட்டியை சேர்ந்த சேகர் என்ற சந்திர சேகர், ஞானசேகர், விக்கிரமன், அவரது மகன் ஹரிகரன், சிவப்பிரகாஷ், விருதுநகரை சேர்ந்த சகோதரர்கள் அமிர்த சங்கர், அமிர்தராஜ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க விருதுநகர் மாவட்ட தலைமையிட போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக குமரவேல் உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் கொலை செய்யும் படலம் நடந்து வருகிறது. இனிமேலாவது கொலை நடக்காமல் இருக்க போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

    • விருதுநகரில் வருகிற 27-ந்தேதி கடனுதவி முகாம் நடக்கிறது.
    • ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க மகாலில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு கடன் வசதி எளிமையாக்கல் முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடை பெற உள்ளது.இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள், மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வேளாண்மை மற்றும் உழவர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கைத்தறி துறை, தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ, கதர் கிராம தொழில் ஆணையம், கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்பு களும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற் கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்க ளும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கி உள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 27-ந்தேதி அன்றே கடனுதவி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வங்கி அமைப்புகளின் இசை வோடு விருதுநகர் மாவட்டத் திற்கென ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    எனவே குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானிய கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்.
    • திருச்சுழி அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதி–களவில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக் டர் மணிகண்டன் தலைமை–யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சத்திர புளி–யங்குளம் பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகிக் கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசா–ரணை மேற்கொண்ட–னர். இதில் அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் திருச்சுழி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசா–ரித்தனர்.

    இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகமுகுந்தங்குடி பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் ரஞ்சித் (23) மற்றும் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் சிலம்பரசன் (17) என்பதும், இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக அப்பகு–தியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மேலும் அவர்களை சோதனை மேற்கொண்டதில் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவரும் திருச்சுழி பள்ளி–மடம் அரசு டாஸ்மாக் கடை–யில் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வத்திராயிருப்பு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் முறைகேடு நடந்துள்ளது.
    • இதனை கண்டித்து அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யு.சி. மேற்கு மாவட்ட தலைவர் அண்ணா துரை தலைமை வகித்தார். அ.தி.மு.க. கிளை செயலா ளர் செல்வம் முன்னிலை வகித்தார். வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 1236 பயனாளி கள் உள்ளனர்.

    திட்டத்தின் கீழ் தம்பிபட்டி கண்மாய், நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகள் மற்றும் நீர்நிலை கள் தூர்வாரும் பணி நடை பெறுகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி நடை பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

    தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் மகா லிங்கம், காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் தவமணி, பா.ஜனதா நிர்வாகி சந்தனகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் முடங்கியார்ரோடு, பி.எஸ்.கே.மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீராசிலிங்கம் (வயது40). தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு பெட்டிக்கடையை பூட்டி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது பெட்டிக்கடை முன்புறம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தீயை அணைத்தார்.

    பின்னர் அங்கு பார்த்த போது பாட்டிலில் திரி பொருத்தப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து பெட்டிக்கடை மீது வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நீராசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×