search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கான உண்மையான விடுதலை பொருளாதார சுதந்திரமாகும்-கலெக்டர் பேச்சு
    X

    விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    பெண்களுக்கான உண்மையான விடுதலை பொருளாதார சுதந்திரமாகும்-கலெக்டர் பேச்சு

    • விருதுநகரில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பெண்களுக்கான உண்மையான விடுதலை பொருளாதார சுதந்திரமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஒன்றிய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் குறித்து, எடுத்துரைக்கும் வகையில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இந்தக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சமம் என்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்து ரிமை, சமஊதியம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் குடும்பத்திலும், சமூகத்திலும், பெண்க ளுக்கான சம உரிமைகளை செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. பல்வேறு சட்ட உரிமைகள், சட்ட விழிப்புணர்வுகள் இருந்தும் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதற்காக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளை காக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பெண்களின் முன்னேற்றத் திற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், மிகவும் எளிமையான வழிமுறை கல்வியாகும். கல்வி மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய நிலையில் பெண்களுக்கான உண்மையான விடுதலை என்பது பொருளாதார சுதந்திரமாகும். பெண்கள் பொருளாதாரம் ஈட்டுவ தற்கான வழிமுறைகளை மேம்படுத்து வதோடு, அவர்கள் சம்பாதித்த பணத்தின் மீது அவர் களுக்கான உரிமை வேண்டும். தமிழக அரசின் மூலம் புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவவர் பேசினார்.

    இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தங்கலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×