மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து சாமிபுரம் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது22). இவரது உறவினர்கள் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தலைமலை(21), பால்பாண்டி (23) ஆகிய 2 பேர் சதீஷ்குமாரின் உறவி னர்களை அவதூறாக பேசி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை சதீஷ்குமார் கண்டித்ததால் அவர்க ளுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த தலைமலை, பால்பாண்டி ஆகியோர் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கி ளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமானது. இதுகுறித்து சதீஷ்குமார் தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com