என் மலர்
விருதுநகர்
- நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.
விருதுநகர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் கருணாகர பிரபு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துணை சேர்மன் செல்வமணி, விருதுநகர் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் நெசவாளர்களுக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த சர்க்கரை அளவ பரிசோதனை, நவீன இசிஜி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவைப்படுவோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன. யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 229 நெசவாளர்கள் பங்கேற்றனர். நெசவாளர்களுக்கான முத்ரா கடன் மேளா மற்றும் அரசு நல்வாழ்வு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது.
- விருதுநகரில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
- நியோமேக்ஸ் மோசடி குறித்து புகார் அளிக்கலாம்.
விருதுநகர்
தென் மாவட்டங்களில் நிேயாமேக்ஸ் மோசடி குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் தலைமை நிறுவனம், கிளை நிறுவனங்கள், நியோமேக்ஸ் உரிமையாளர், ஊழியர்கள் வீட்டில் கோர்ட்டு உத்தரவுப்படி அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நாளை (சனிக்கிழமை) விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் புகார் அளிக்கலாம் அல்லது மதுரை பொருளாதார குற்றப்பரிவு போலீசில் புகார் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தெரிவித்து உள்ளார்.
- முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரிகிறது.
- ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ராஜபாளையத்தில் வாகன கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த கருத்த பாண்டியன் என்பவர் வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரி கிறது. ஆனால் காளீஸ்வரன் அந்த பணியை முடித்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக கேட்ட போது அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்த பாண்டி ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி மோசடி தொடர்பாக காளீஸ்வரன் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செ ய்து விசாரித்து வருகிறார்.
- 4,157 தொழில் முனைவோர்களுக்கு ரூ.510 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- அமைச்்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகரில் தமிழக அரசின் பல்வேறு துறைகள், திட்டங்கள், தாட்கோ மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் கடன் வசதி எளிமையாக்கல் முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 915 தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.114.51 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கி னார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 480 வங்கி கிளைகள் மூலம் 2023-2024-ம் ஆண்டு முதல் காலாண்டில் 3242 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.396.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2023-2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டின் முதல் மாதத்தில் 915 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.114.51 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முதன்மை மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தூத்துக்குடி) நாகையா, உதவி பொது மேலாளர்(கனரா வங்கி, தூத்துக்குடி) சுரேந்திர பாபு, மண்டல மேலாளர்(பாரத் ஸ்டேட் வங்கி, தூத்துக்குடி) செந்தில்குமார், மண்டல மேலாளர்(இந்தியன் வங்கி, காரைக்குடி) தாமோதரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச் செல்வன், விருதுநகர் வர்த்தக தொழிற்சங்க தலைவர் யோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகள் காவ்யா (வயது 19). இவர் ஆமத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த காவ்யா திடீரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான என்ஜினீயரிங் மாண வியை தேடி வருகின்றனர்.
சின்னகாரியாபட்டி ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வள்ளிமுத்து (வயது 18). இவர் விருது நகரில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார். சம்ப வத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற வள்ளி முத்து திடீ ரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் செல் வராஜ் (55). மனநலம் பாதிக் கப்பட்டிருந்த இவர் சம்பவத் தன்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே தேர்தலை சந்திப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
- இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம் என்றார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர். அதனால் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்துதான் பயணிப்போம்.
என்னை பா.ஜ.க. மாநில தலைவர் நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
- வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்குப் பின் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க்க கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலர் வராததால் விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்கம் மைய அலுவல கத்தில் மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட் டம் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறை சார்பில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதி களான ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளை யம் பகுதி விவசாயிகள் வனத்துறை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வழியின்றி சிரமத்தில் இருந் தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், வனத்துறை சார்பில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் வெளி யிட்ட அரசாணையில் விவ சாயிகள் விளைநிலங்களில் மின் வேலி அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெறு வது கட்டாயம் என அறிவித் தது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்த னர்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வன துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் அடங்கிய முத் தரப்பு கூட்டம் நேற்று வன விரிவாக்க மையத்தில் நடத் தப்படும் என தெரிவித்தார். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மை யத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர். 12 மணிக்கு ஆர்.டி.ஒ விஸ்வநாதன், வட்டாட் சியர் செந்தில்குமார், உதவி வன அலுவலர் நிர்மலா உள்ளிட்டோர் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட வன அலுவலர் கூட்டத்திற்கு வராததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் மாவட்ட வன அலுவலரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலரை இடமாற் றம் செய்ய வேண்டும், வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாதம் தோறும் வனத்துறை சார் பில் கூட்டம் நடத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா கூறுகையில்:-
விளை நிலங்களில் மின் வேலி அமைப்பதற்கு வனத் துறை அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை, காட்டு மாடு, காட்டு பன்றி, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப் படுத்துவதால் விவசாயி களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து முறையிடு வதற்கும், கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் வனத் துறை அதிகாரிகளை விவ சாயிகளால் எளிதில் தொடர்பு கொள்ள முடிய வில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் வனத்துறை, வருவாய், விவசாயிகள் இணைந்த முத்தரப்பு கூட்டம் 26-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வனத்துறை அலுவலகம் வந்துள்ளோம். ஆனால் அரசு அதிகாரிகளையும் விவசாயிகளையும் மதிக்காத மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் கூட்டத்திற்கு வரவில்லை. அதை கண் டித்து விவசாயிகள் கூட்டத் திலிருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மாவட்ட வன அலுவலர் திலீப்குமார் பதவியேற்றதில் இருந்து விவசாயிகள் குறை தீர்க்க கூட்டம் நடத்த படவில்லை. விவசாயி களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட வன அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டதால், வனத் துறை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பழிக்கு பழியாக நடந்த விருதுநகர் தொழிலதிபர் கொலையில் 4 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது47). தொழிலதிபரான இவர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். மார்க்கெட்டில் ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் கடந்த மாதம் திருமங்கலம் மையிட்டான்பட்டியை சேர்ந்த அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக குமரவேலை 8பேர் கொண்ட சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் அவரது உறவினர்கள் ரூபி, ராம்குமார் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கொலை சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகரை சேர்ந்த சண்முகம் மகன் பால்பாண்டி என்ற பவர் பாண்டி (20), சிவகாசியை சேர்ந்த முத்துவிஜயன் மகன் செல்வம் (20) ஆகிய 2 பேர் சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் விருதுநகருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையான குமரவேலின் நடவடிக்கை குறித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த அல்லம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வெங்க டேஷ்வரன்(25), பாலமுத்துகுமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.
- மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து சாமிபுரம் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது22). இவரது உறவினர்கள் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தலைமலை(21), பால்பாண்டி (23) ஆகிய 2 பேர் சதீஷ்குமாரின் உறவி னர்களை அவதூறாக பேசி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை சதீஷ்குமார் கண்டித்ததால் அவர்க ளுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த தலைமலை, பால்பாண்டி ஆகியோர் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கி ளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமானது. இதுகுறித்து சதீஷ்குமார் தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.
- கூட்டுறவு சங்கம் மூலம் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
- இத்தகவலை மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 38 கிளைகள், 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 3 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாப்செட்கோ) சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ), ஆதி திராவிடர் நலக்கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கான (டாம்கோ VIRASAT) கடன்களுக்கு தனி நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு . கடனாக தனி நபர் ஒருவருக்கு ரூ.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகின்றது.
கடன் பெற விரும்பும் பயனாளிகள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமான சான்று, பிறப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம். மாற்று்த திறனாளிகளைப் பொறுத்த வரை மேற்காண் சான்றி தழ்களுடன் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அட்டை மற்றும் ஆதார் அட்டை சமர்ப்பித்து கடன் பெறலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கஙகள், நகர கூட்டுறவு வங்கிகள். நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை தொடாபு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதி வாளர்/முதன்மை வருவாய் அலுவலர் 9489927003. பொது மேலாளர் 9489927001. உதவி பொது மேலாளர் (கடன்) 9489927006 மற்றும் மேலாளர் (கடன்) 9489927177 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- ராஜபாளையம் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடந்தது.
- இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டமென பொதுமக்களின் வரவேற்பு பெற்றுவரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளின் விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தில் சரியாக பதி வேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
முகவூர் ஊராட்சி காமராஜ் திருமண மண்டபத்தி லும், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்றுவரும் முகாம்க ளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சரின் இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக் கணக்கான பெண்கள் பயன் பெற உள்ளதாக கூறினார்.
அப்போது அங்கு வந்த அழகம்மாள் என்பவர் முதல்-அமைச்சரின் திட்டத்தை குலவையிட்டு வாழ்த்தினார்.
ஆய்வின்போது ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், கனகராஜ், மாடசாமி ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






