என் மலர்
விருதுநகர்
- ரூ.160 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி பூங்கா திறக்கப்பட்டது.
- அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் அமைச்சர் திறந்து வைத்தார்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நூற்றாண்டு விழா 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.160 லட்சம் மதிப்பில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகர ணங்களுடன் கூடிய பூங்கா வினை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பி னர் அசோகன் மற்றும் சிவ காசி மாநகராட்சி மேயர் சங் கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச் சர் அவர்கள் தலைமையி லான தமிழக அரசு, மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமபுறங்களின் உட் கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது.
இந்த திட்டங்கள் மூலம் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்புகள், சுகா தாரம், உள்புறச் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக் கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து வரு கிறது.
அதனடிப்படையில் சிவகாசி மாநகராட்சி ஜே. நகரில் ரூ.65 லட்சம் மதிப்பி லும், புதுக்காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், 66 காலனியில் ரூ.55 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.160 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி ஆணையர் சங் கரன், மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் விவேகன் ராஜ், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
- 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரை நிகழ்ச்சியில், ஊடக வியலாளர் குணசேகரன் சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் அவர் கூறியதா வது:-
உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக் கை இந்திய அளவில் 27 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் அது 52 விழுக்காடாக இருக்கிறது என்றும், ஒட்டுமொத்த சமூக விழிப்புணர்வு அனை வருக்கும் கல்வி, அனைத்து சமூகத்தினருக்கான விழிப் புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி பெறப் பட்டது. அந்தக் காலத்தி லேயே தோள் சீலைப் போராட்டம் குறித்து கூறி அதற்கான வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாவதற்கு அரசு பெரும் முயற்சி எடுத்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருவதாக கூறினார். ஏறத்தாழ 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.பள்ளித் தேர்வுகளில் எப்போதுமே விருதுநகர் மாவட்டம், முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு கல்விக்கு இங்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் தான் காரணம். அதுபோல இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய சமூக நீதி என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தலைவர்களால் கிடைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும் படிப்பு அறிவை வழங்கியதன் மூலம் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், மனிதவள குறியீடு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தால் மட்டும்தான் முன்னிலை அடைய முடியும்.
தமிழகம் உயர்கல்வி பயில்வதில் இந்தியாவி லேயே முதன்மை இடத்தில் உள்ளது என்றால், சாதாரண மனிதருக்கும் தரமான கல்வி என்ற சமூக நீதியின் கொள்கையால் வந்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, தனி துணை கலெக்டர் (சமூக பாது காப்புத்திட்டம்) அனிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர் ஷினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ரா மசுப்பி ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மாவட்ட நூலக அலுவலர் சுப்பிர மணியன், கல்லூரி முதல்வர் குணசேகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாண வியர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது.
- எம்.பி.-அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விருதுநகர்
மதுரை கோட்டத்தில் 4-வது பெரிய ரெயில் நிலையமான விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலை யத்தை ரூ.15 கோடியில் மேம்படுத்த அம்ருத்திட்டத்தின் கீழ் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரூ.8 கோடி மதிப்பில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படு வதுடன் ரூ.17 கோடியில் ரெயில்நிலைய உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.
1-வது நடைமேடை முதல் 5-வது நடைமேடை வரை மேம்பாலம் அமைத்தல், நடைமேடை களுக்கு மேற்கூரை அமைத்தல், விப்ட் வசதி, நவீன கழிவறை வசதிகள் கிழக்கு பகுதியில் நுழை வாயில் டிஜிட்டல்போர்டு, மழை நீர் வடிகால், உணவு விடுதி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட உள்ளது. இத்திட்டம் வருகிற 5-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை மண்டல ரெயில்வே அதிகாரிகள் மாணிக்கம்தாகூர் எம்.பி.யுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். முதலில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படும் அதன் பின்னர் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. உள் கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் தாமதம் கூடாது என வலியுறுத் தினார். மேலும் ரெயில் நிலையத்தின் முன்பு வாகனங்கள் நிறுத்துமிடம் முறையாக அமைக்க வேண்டும், ரெயில் நிலை யத்தில் முறையான விசாரணை அலுவலகம், ரெயில்கள் குறித்த அறி விப்பு ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடாமல் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- மணிப்பூர் சம்பவம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
- அமித்ஷா முதல் நாள் போபால் செல்கிறார்.
விருதுநகர்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூர் பாதிப்பை கண்டறிய பிரதமர் மோடி நேரில் செல்லாத நிலையில் ராகுல்காந்தி அங்கு சென்று மக்களை சந்தித்ததுடன் கவர்னரையும் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே 85 நாட்கள் கழித்து பேச தொடங்கி 80 வினாடிகள் பேசியுள்ளார்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். இதில் தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் உள்பட 21 பேர் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ இதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.
அமித்ஷா முதல் நாள் போபால் சொல்கிறார். மறுநாள் ராமேசுவரம் வருகிறார். மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பிரதமர் இந்தியா கூட்டணி என்ற பெயர் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் பதிலளித்ததோடு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய அனைத்து கட்சி குழுவினரை காஷ்மீர் அழைத்துச் சென்றார்.
ஆனால் பிரதமர் மோடி யின் செயல்பாடு மாறுபாடாக உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்திற்கு வரும் வடமாநில தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அமித்ஷா இந்தியில் தான் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பால கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில் காமராஜர் விருது வழங்குவதற்கு சேவையாற்றிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 40 பேருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கதர் ஆடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
- விளம்பரத்திற்காக அண்ணாமலை நடைபயணம் செல்கிறார் என்று முத்தரசன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
- ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா மண்டபத்தில் 13-வது விவசாய தொழிற்சங்க மாநாடு தொடங்கியது. முன்னாள் எம்பி லிங்கம் வரவேற்றார். இந்திய விவசாயிகள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் முத்தரசன் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழிலாளர் நலவாரியம் உள்ளது. வேளாண் துறைக்கு தனி அமைச்சகமும் பட்ஜெட்டும் தாக்கல் செய்வது வரவேற்புக்குறியது.
ஆனால் ஒரு கோடிக்கும் மேல் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு என தனி துறையோ, வாரியமோ இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.
100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்துவது மாநில அரசு தான். அறுவடை முடியும் வரை வாய்க்கால் வெட்டும் பணிகளை நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரம் என்பது இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் இடம். அண்ணாமலை யாத்திரையை ராமேசு வரத்தில் தொடங்கியது மூலம் பா.ஜ.க.விற்கான முடிவுரை எழுதப்பட்டு விடும் என்பதை காட்டுகிறது. விளம்பரத்திற்காக அண்ணாமலை யாத்திரை செல்கிறார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை.
கொடநாடு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன், தங்கமணி, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
- உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் காவலர் வாய்ஸ் தன்னார்வலர்கள் குழு, யூத் அச்சீவர்ஸ்கிளப் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனோஜ்குமார்-ஸ்ரீஜா தம்பதியின் மகன் சம்ருத் (வயது7) ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியவாறு ஒரு மணி நேரத்தில் 5.5 கிமீ தூரத்தை ஓடி கடந்து உலக சாதனை படைத்தார்.
மேலும் 5 வயது சிறுமி ஆராதனா கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி இடுப்பில் உள்ள வளையத்தை 30 நிமிடங்கள் சுழற்றி சாதனை செய்தார். மேலும் யோகவீனா (14) கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா ஆகியவற்றை அற்புதமாக செய்து காண்பித்தார்.
நிகழ்ச்சியில் யூத் அச்சீவர்ஸ்கிளப் இயக்குனர் அய்யப்பன், உலக சாதனை தீர்ப்பாளர் நோபல் உலக சாதனை சி.இ.ஓ. அரவிந்த், காவலர் வாய்ஸ் தன்னார்வர்கள் குழு ஒருங்கிணைப்பார் ஞானேஸ்வரன், செயலாளர் அழகர்சாமி, மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் மனோகர் சாமுவேல், பயிற்சியாளர்கள் அசோக், அந்தோனிசாமி, ஆனந்த்பாபு, விக்னேஷ், ஆனந்த, காவலர் வாய்ஸ் மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப் பத்தை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.
இந்த உதவித்தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏற்கனவே உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. வேலை வாய்ப்பற் றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்திருந்தால் அலுவலகம் வர தேவையில்லை.
இவ்வாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் நடை பெற்று வரும் கலவரத்தைக் கட்டுபடுத்தாத பா.ஜ.க.வின் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காம ராஜர் சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிகழ்விற்கு, ஸ்ரீவில்லி புத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வன்னியராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்றத் தொகுதி பொறுப் பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பெரியசாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், லட்சுமணன், பேரூராட்சி தலைவர்கள் கே.எஸ்.சுந்தரம், ஜெயக் குமார், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
- இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.
கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான
- விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆணையின்படி கடந்த 18 முதல் 20-ந் தேதி வரை ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அதன்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதி உதவி ஆய்வர்கள் மேற்கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தெரிவித்தார்.
- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜ்(வயது35). இவர் பழைய பஸ் நிலையம் எதிரில் கடை நடத்தி வருகிறார். ராஜூம், அவரது மனைவியின் தங்கை கார்த்திகாவும் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அருப்புக் கோட்டை ஆவின் பால கத்தில் வேலை பார்க்கும் சுந்தரகோபி என்பவருடன் ராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு தெரிந்த நரிக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அவர் மூலம் கிராம நிர்வாக உதவியாளர் பணியை எளிதாக பெற்று விடலாம். அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜூ, விஜயலட்சுமியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. பணத்தை கொடுத்த பின்பும் ராஜூக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.
இதனால் பணத்தை திருப்பி தருமாறு விஜய லட்சுமி, சுந்தரகோபி, இதற்கு உடந்தையாக இவ ரது தந்தை முருகன் ஆகியோ ருடன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். மேலும் பணத்தை தர முடியாதென கூறி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜ் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி விஜயலட்சுமி, சுந்தரகோபி, முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
- நகை கடையில் நகை மற்றும் பணம் திருடு போனது.
- பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது48). இவர் வடக்கு ரத வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருமலாபுரத்தை சேர்ந்த கண்ணன், மகாலட்சுமி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று மகாலட்சுமி மட்டும் கடையில் பணியில் இருந்தார்.
அப்போது சுகுமார் அவரிடம் 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டு வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றுவிட்டார். மறுநாள் கடைக்கு வந்த சுகுமார் நகை-பணத்தை சரிபார்த்தபோது 3 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார், இதுகுறித்து மகாலட்சுமி யிடம் விசாரித்தபோது உரிய பதிலளிக்கவில்லை. இதையடுத்து நகை-பணம் திருட்டு தொடர்பாக சுகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த வர் மாரிச்சாமி(68). நேற்று யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






