ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம்

ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம் அடைந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம்
Published on

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்க பாண்டியன்(வயது36). பள்ளி ஆசிரியரான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தற்போது கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணை யில், பக்கத்து நிலத்தில் தீ வைத்ததில் கரும்பு பயிர் களுக்கும் தீ பரவியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com