என் மலர்
விருதுநகர்
- மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று முத்தரசன் பேசினார்.
- எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சேது ராமன் நினைவு திடலில் விவசாய தொழிலாளர்கள் சங்க 13-வது மாநில மாநாடு நிறைவு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார்.
இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள விவசாய தொழி லாளர்களின் சமூக பொருளாதார நிலைமை களை ஆய்வு செய்ய உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும், 100 நாள் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. பின்னர் முத்தரசன் பேசியதாவது:-
விவசாய தொழிலா ளர்கள் அமைப்பு ரீதியாக அணி திரண்டால் எத்தகைய அரசியல் சூழலையும் எதிர்கொள்ள முடியும். 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.830 உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது 260 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருகிறது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் முடிவால் விலைவாசி உயர்ந்துள்ளது. மாமன்னரிடம் குறுநில மன்னர்கள் பிச்சை கேட்பது போல அனைத்து மாநில முதல்வர்களும், பிரதமரிடம் சென்று நிதி தாருங்கள் என கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது.
இவை எல்லாவற்றையும் எதிர்த்து, நாட்டின் நலனுக் காக நாம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாளான ஆகஸ்டு 9-ந்தேதி 'மோடியே வெளியேறு' என்ற போராட் டம் தொழிற்சங்கள் சார்பில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 20-ல் இளைஞர் மற்றும் மாணவர் பெரு மன்றம் சார்பில் சென்னை யில் பேரணியும், அக்டோபர் 1, 2 தேதிகளில் மாதர் சங்க பேரணி நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவகங்கள் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், சி.பி.ஐ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராமச் சந்திரன், மாரிமுத்து, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியானார்.
- வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது42), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.
அருப்புக்கோட்டை பந்தல்குடி மெயின் ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்ப சாமி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஜீவாநகர் திருமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது40). இவர் சம்ப வத்தன்று உறவினர்களுடன் குற்றாலம் சென்று விட்டு வேனில் அருப்புக் கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் கோவில்-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது வேனின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து அருப்புக் கோட்டை போலீசார் விசா ரணை நடத்தி வேன் டிரைவர் பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம் அடைந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்க பாண்டியன்(வயது36). பள்ளி ஆசிரியரான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தற்போது கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணை யில், பக்கத்து நிலத்தில் தீ வைத்ததில் கரும்பு பயிர் களுக்கும் தீ பரவியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு அனுமதியின்றி பெண்கள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.
- மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வீரசோழன் பகு–தியில் பல முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதி–யில் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதாலும் வீரசோ–ழன் பகுதியில் நிலங்களின் மதிப்பு பல லட்சங்களை தாண்டி வரும் நிலையில் கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
வீரசோழன் பகுதியில் ஏற்கனவே வீடுகள் அனைத் தும் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் மேலும் இங்கு நிலம் வாங்கியோர் இன்னும் வீடுகளை கட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அரசு மணல் அள்ள தடை விதித் துள்ள நிலையில் வீரசோ–ழன் ஆற்றுப்பகுதியில் இர–வும், பகலுமாக பெண்கள் மூலமாக தொடர்ச்சியாக சாக்குப்பை–களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை வருவதாக சமூக ஆர்வ–லர் கள் குற்றம் சாட்டி வரு–கின்றனர்.
ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி சாக்குப்பை–களில் அள்ளப்பட்டு வரும் மணலானது வீடுகள் கட்டி வருபவர்களுக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நூறுநாள் வேலை திட்டம், விவசாய பணிகளை கைவிட்டு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பெண்கள் எந்த முதலீ–டும் இல்லாமல் நாளொன் றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சம்பாதித்து வருவதா–கவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் கள் பெண்களாக இருந்து வருவதால் ரோந்து வரும் போலீசாரும், நாள்தோறும் மணல் கொள்ளையில் ஈடுபடு–வோரை கண்கா–ணித்து வரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் கொஞ்சமும் கண்டுகொள்வ–தில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும் வீடுகள் கட்டி வருபவர்களுக்கு குறைந்த விலையில் எம்.சாண்ட், பி.சாண்ட் மணல் கிடைத்தா–லும், வீடு கட்ட ஆற்று மணல் தான் சிறந்ததாக கருதப்படு கிறது. எனினும் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்துள்ளதால் மணல் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் நீடித்து வரு–கிறது. மேலும் வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்குவதென்றால் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதால் லாரிக–ளில் இருந்து மணல் இறக்கு–மதி செய்வதற்கும் வீட்டு உரிமையாளர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவ–தில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரசோ–ழன் அற்றுப்பகுதி–யில் பெண்கள் மூலமாக சாக்கு–பை–களில் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் ஆற்று மணலுக்கு மவுசு கூடியுள்ளது.மேலும் வீரசோழன் ஆற்றுப்பகு–தியில் கொரோனா காலத் திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக இங்கு மணல் அள்ளப்பட்டு வருவ–தாகவும் மேலும் இந்த செயலில் பெண்கள் ஈடு–பட்டு வருவதாகவும் தெரி–வித்த சமூக ஆர்வலர்கள் இதனால் கனிமவளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவ–தாகவும் வேதனை தெரிவித்தனர். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக வீர–சோழன் ஆற்றுப்பகு–தியில் அள்ளப் பட்டு வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலி பத்திரப்பதிவுகளை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அடுத்த கட்டமாக முதல்வ ரின் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் கீழராஜகுலராமன் சார்பதி வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் நாராயண சாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்ப ராஜ், மாவட்ட தலைவர்கள் பாஸ்கரன், மதுரை சீனிவாச கன், சமூக ஆர்வலர் சுப்பா ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
கீழராஜகுலராமன் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திர பதிவுகள் அதிக அளவில் நடப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். போலி பத்திர பதிவுகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
ேபாலி பத்திர பதிவு களால் விவசாய நிலங்க ளுக்கு பாதுகாப்பு இல்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்கும் முறை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முதல்வ ரின் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகாதேவி (வயது 31). இவருக்கும் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 10.3.2013-ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் நகை, மணமகனுக்கு 7 பவுனில் தங்க செயின், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய புதுமண தம்பதியினரின் மணவாழ்க்கை காலப்போக்கில் கசக்க தொடங்கியது.
இதற்கிடையே ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்த ராகேஷ் சொந்தமாக தொழில் செய்ய நினைத்தார். இதற்காக மனைவியிடம் அவர்களது வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கூறினார்.
உடனடியாக செண்பகாதேவி, தான் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் தொழில் செய்வதற்காக கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட ராகேஷ் எந்தவிதமான தொழிலும் தொடங்க முன் வரவில்லை. இதுபற்றி மனைவி கேட்டபோது, அந்த நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு உருவானது. கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராகேஷ் மனைவி செண்பகாதேவியை தனி அறையில் அடைத்துவைத்து சாப்பாடு கூட தராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் இந்திரா மற்றும் சகோதரி சுதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்னர் செண்பகாதேவியை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளனர். தனது தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர். கல்லூரி மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
- 86.24 சதவீதத்தை பெற்று தமிழக அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
சிவகாசி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான நவம்பர், டிசம்பர், செமஸ்டர் தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியலில் 313 பொறியியல் கல்லூரிகளில் சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி 86.24 சதவீதத்தை பெற்று தமிழக அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவியர்களை கல்லூரி இயக்குநர் விக்னேஸ்வரி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரியானது கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. உயர்தரமான கட்டிட அமைப்புகள், சிறந்த ஆய்வக வசதிகள், கற்றல், கற்பித்தலில், புதிய முயற்சிகளை கையாளுதல், திறமையான பேராசிரியர்கள், அவர்களின் கடின உழைப்பு பன்னாட்டு நிறுவனங்களில் மாணவ-மாணவிகளை பணியில் அமர்த்துதல், மாணவர்களின் திறன் வளர்த்தல், மதிப்பெண்களை குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக பயிற்சி அளிக்கப்படுதல் போன்றவற்றால் கல்லூரி சாதனை படைத்துள்ளது என கூறினார்.
- மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
- கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூரில் இந்திரன் கிரிக்கெட் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 4-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடை பெற்றது. 10 ஓவர் கொண்ட போட்டி நாக் அவுட் முறையில் போட்டி நடந்தது.
இதில் 45 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட னர். முதல் பரிசை ராஜபாளையம் ஆக்டிவ் சோலைசேரி அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்று பரிசுக்கான தொகை ரூ.9,011, வெற்றி கோப்பை யும் தட்டி சென்றது.
2-ம் பரிசை தெற்கு வெங்காநல்லூர் இந்திரன் அணி 64 புள்ளிகள் பெற்று ரூ.6,011 வெற்றி கோப்பையை யும் வென்றது. முதல் மற்றும் 2-ம் பரிசுகள் எம்.பி. தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக வழங்கப்பட்டது. பரிசுகளை ரவிராஜா, பேராசிரியர் கந்தசாமி வழங்கி பாராட்டி பேசினர்.
3-ம் பரிசை தென்மலை 11 ஸ்டார் அணியும், 4-ம் பரிசை மீனாட்சிபுரம் 11 ஸ்டார் அணியும், 5-ம் பரிசை ராஜபாளையம் எங்ஸ்டார் அணியும் பெற்ற னர்.
ராஜபாளையம் வட் டார அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கிரிக்கெட் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.
திருச்சுழி
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலா ளராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு முதன் முறை யாக மதுரையில் முதல் மாநில மாநாடு நடைபெறு கிறது.
இந்த மாநாட்டிற்கு தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்து டன் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நரிக்குடியில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் கிழக்கு மாவட்டம் நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் நாலூர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மதுரை மாநில எழுச்சி மாநாடு குறித்த வாசகங்கள் அடங் கிய ஸ்டிக்கரை தங்களது இரு சக்கர வாக னங்களில் ஒட்டியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நரிக்குடி முக்கிய சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணிக்கு நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.
இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கூட்டுறவு சங்க தலைவர்களான மனோகரன், பனைக்குடி ராஜா, வீரமணிகண்டன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் முருகன், கிளை செயலாளர்கள் உலக்குடி பாஸ்கரன், சரவணசாத்தார், சாலை இலுப்பைக்குளம் அம்மா. பிரதீப், வீரபத்திரன், ஒட்டங்குளம் வெள்ளத் துரை, மலைராஜ், கணேசன், பெரியசாமி, தூதை முனிய சாமி, சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே ரத்ததான முகாம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது. ராஜ பாளையம் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்த னர்.
பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ரத்த தான முகாமை நடத்திய அரிசி ஆலை உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகி களை பாராட்டி னார். பின்னர் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற மக்கள் சேவையை மேற்கொள்ள வேண்டுமெனவும், தங்கள் தொழில் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சரும், நமது மாவட்ட வருவாய்த்துறை அமைச்சரும், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்ச ரும், நானும் உறு துணையாக இருப்போம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் சேர்மன் ஜெய முருகன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
- இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- வங்கி கலந்துரையாடல் முகாம் நடந்தது.
- துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.
திருச்சுழி
திருச்சுழியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பாக விவசாயிகளுடனான மாலைநேர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சுழி ஊராட்சி மன்றத்தலைவர் பஞ்சவர்ணம் குமார் முன்னிலை வகித்தார்.கிளை மேலாளர் ஹரிஹர சுந்தர் வரவேற்றார். தூத்துக்குடி மண்டல வாணிப அலுவலகத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு மானியக்கடன் திட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.1.60 கோடி வரை கடன் வழங்குவதற்கான ஒப்புகை சான்று வழங்கப்பட்டது.
மேலும் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் முதன்மை மேலா ளர்கள் மாரியப்பன், விமல் செல்வராஜ், மேலாளர் கோவிந்தராஜ், சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத்குமார், மேலாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.






