search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodanadu"

    • ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
    • அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.

    சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.

    2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

    கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

    அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!

    அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் தேசபந்து திடலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள், முன்னாள்

    எம்.எல்.ஏ. பாலகங்காதரன், தெய்வம், எஸ்.எஸ்.கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன், லயன் மாரிமுத்து, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்கொடி, முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மூக்கையா, தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    ×