என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் முனீஸ்வ–ரன் (வயது 34). இவரது மனைவி இசக்கியம்மாள் (30). கூலி வேலை பார்த்து வரும் முனீஸ்வரன், திரும–ணமான நாள் முதல் தின–மும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    2 குழந்தைகள் பிறந்த நிலையிலும் அவர் குடிப்ப–ழக்கத்தை மறக்கவில்லை. இதற்கிடையே தனது உற–வுக்கார பெண் ஒருவருடன் முனீஸ்வரனுக்கு ெதாடர்பு இருப்பது மனைவி இசக்கி–யம்மாளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இத–னால் கணவன், மனைவிக்கி–டையே மேலும் பிரச்சினை முற்றியது.

    இதையடுத்து இசக்கியம்மாள் குழந்தைகளை அழைத் துக்கொண்டு, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அவ்வப்போது முனீஸ்வரன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று காலை மனைவி, பிள்ளைகளை பார்த்து தான் வாங்கிச்சென்ற பல–கா–ரங்களை கொடுத்து–விட்டு வந்தார். பின்னர் அதேநாளில் இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு சென்றார். அப்போது மனைவி அவரை கண்டித் தார். இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், உன்னையும், உன் தாய் கூடம்மாளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி கத்தரிக்கோலால் அவர்களை குத்தி காயப்ப–டுத்தி உள்ளார்.

    உடனே அங்கு சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்ட–னர். இதையடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசா–ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், முனீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கம்மாள் (வயது 18). இவர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபரை தீவிரமாக காதலித்து வந் தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்தனர். இதனை அறிந்த ஜக்கம்மாள் கடந்த 23.5.2023 அன்று காதலன் பிரவீன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே–றினார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு–பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதி–மன்றத்திலும் வழக்கு நிலு–வையில் இருந்தது. இதற்கி–டையே மாயமான ஜக்கம் மாள் 7 மாத கர்ப்பிணியா–னார். மேலும் கோர்ட்டில் நடந்த வழக்கில் காதலன் பிரவீன்குமார் விடுதலையா–னார்.கர்ப்பிணியாக இருந்த ஜக்கம்மாள் தனது பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி ஜக்கம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு நாளில் அந்த குழந்தைக்கு மூச்சு, பேச்சு இல்லாமல் போனது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுதொடர்பாக ஜக்கம் மாள் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஜயநகர பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தினர் கூறினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பிள்ளை யார்குளம் கிராமத்தில் பழமை யான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான கவுதம், மலைமுத்து, பால கிருஷ்ணன், காளிமுத்து, தர்மராஜா போன்றோர் கண்டறிந்து கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப்பேரா சிரியர்களான தாமரைக்கண்ணன், ராஜபாண்டி ஆகியோருக்கு கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவியுடன் நேரில் சென்று கள மேற்பரப்பாய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிலைகள் 500 வருடங்களுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

    அடுக்கு நிலைநடுகல்: இந்த வகை நடுகற்கள் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் தியாகத்தைப் போற்றி அவர்கள் எந்த படைப்பிரிவினை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்ற விபர குறிப்போடு எடுக்கப்படும் ஒரு நடுகல் மரபாகும். இந்த அடுக்கு நிலை நடு கற்களை கொய்சாளர்கள் பின்பற்றும் கலைப் பணியாகும். தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு காலம் தொடங்கிய போது இந்த கலைபாணியும் வந்திருக்க வேண்டும். தற்போது நாங்கள் கண்டறிந்த அடுக்கு நிலை நடுகற்கள் பிள்ளை யார்குளம் கிராமத்தில் மூன்று கற்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு சதிகல்லும், வில்வீரன் சிற்பமும் இடம்பெற்றுள்ளன.

    அடுக்குநிலை நடுகல் ஒன்று: இங்கு காணப்படும் அடுக்கு நிலை நடுகல் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் முக்கால் அடி தடிமனும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செக்கப்பட்டுள்ளது.

    இந்த கல்லில் 3 புறம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பக்கத்தில் பல்லக்கில் ஒருவர் வணங்கியபடி அமர்ந்துள்ளார். இரு பல்லக்குத்தூக்கிகள் பல்லக்கை சுமந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இவர் அரசருக்கு இணையானவராக கருதலாம். இதற்கு கீழ் அடுக்கில் ஒருவர் காளை மீது அமர்ந்து முரசுகொட்டும்படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காளைமீது அமர்ந்து முரசு ஒலிக்கும் சிற்பம் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். காளையின் கழுத்தில் மணிகள் இடம்பெற்றுள்ளது. நன்கு நீண்ட வளைந்த கொம்புகளும் காணப்படு கிறது. காளையின் முன்பாக இருவர் எக்காளம் கொண்டு ஒலி எழுப்பியவாறு செல்லும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் இரண்டாவது பக்கத்தில் மேலிருந்து கீழாக 5 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் வில்வீரன் ஒருவன் வில்லில் அம்பை வைத்து எய்யுமாறு செதுக்கப்பட்டுள்ளது. வில்லிற்க்கு மேலும் கீழுமாக இரண்டு மாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது இவ்வீரன் வாழ்ந்த காலத்தில் எதிரி நாட்டினர் தனது நாட்டு ஆநிரைகளை கவர்ந்து சென்றிருக்க வேண்டும் அதனை மீட்க சென்ற வில்வீரன் அப்போரில் இறந்திருக்க வேண்டும்.

    இதன் காரணமாக நடுகல் எடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம். இதற்கு கீழ் உள்ள அடுக்கில் குதிரை வீரன் குதிரையில் வாளேந்தியபடி வடிக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கிற்கு கீழ் மூன்று அடுக்குகள் இடம் பெறுகின்றன. அவற்றில் கீழே வீரர்கள் ஊன்றிய வாளை பிடித்தபடியும் அருகில் அவர்களது மனைவிகள் நின்றபடியும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பக்கம் 5 அடுக்குகளாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் குதிரைவீரன் வாளேந்தியபடியும் அதற்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் மூவரின் காலடியில் வாள்கள் ஊன்றியபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

    2-வது அடுக்கில் ஒரு யானையில் அங்கு சத்துடன் ஒருவர் அமர்ந்திருக்க பின்னால் ஒருவர் வாளேந்தியபடி அமர்ந்திருக்கிறார். யானைக்கு முன்பு மூன்று வீரர்கள் வணங்கியபடியும் வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடுக்கில் இருந்து ஐந்தாவது அடுக்கு வரை குதிரைவீரர்கள் வாளேந்தியபடியும் அவர்க ளுக்கு முன்பாக 3 வீரர்கள் வணங்கியபடி நிற்க போர்வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றைப் பார்க்கும் போது குதிரைப்படையிலும், யானைப்படையிலும் உள்ள வீரர்கள் இறந்ததன் காரணமாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    அடுக்கு நிலை நடுகல் இரண்டு: இந்த கல்லில் இரண்டு அடுக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கல் நான்கு அடி உயரமும் இரண்டடி அகலமும் ஒரு அடி தடிமனும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. முதல் பக்கத்தில் முதல் அடுக்கில் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க இரு மாடுகள் இசையில் மயங்கி அருகில் நிற்கும்படியும் கிருஷ்ணரின் மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் இடம்பெற்றுள்ளது. அடுத்த கீழ் அடுக்கில் இரு ஆண்கள் வழங்கியபடியும் ஒரு பெண் அருகில் நிற்கும்படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பக்கத்தில் மேலடுக்கில் கருடன் நின்ற கோளத்தில் பாம்பை பிடித்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அடுக்கில் இருவர் வழங்கியபடி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

    அடுக்கு நிலை நடுகல் மூன்று: இந்த நடுகல் நான்கடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வீரர்களில் ஒருவரை தவிர அனைவரும் வணங்கியபடி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வாளேந்தியபடி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லும் போரில் இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவு அடுக்கு நிலை நடுகல்லாகும்.

    வில்வீரன்சிற்பம்: இந்த சிற்பம் இரண்டரை அடி உயரத்துடன் காணப்படுகிறது. வீரன் ஒருவன் இடதுபுறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் ஆபரணங்களுடனும் முதுகுப்புறம் அம்புரான் கூட்டினை தாங்கியபடியும் இடது கையில் வில்லினை பிடித்தபடியும் வலது கையில் அம்பினை எய்யும் நிலையில் இருக்கும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சதிகல்: இங்கு ஒரு சதிகல்லும் காணப்படுகிறது. இந்த கல் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் சற்றே மேல் நோக்கிய கொண்டையுடன் நீண்ட காதுகளில் காதணியும், மார்பில் ஆபரணங்களும், கைகளில் வளைகாப்புகளும், இடையில் இடைக்கச்சையும் காலில் வீரக்கழலையும் அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் வணங்கியபடி செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் இடையில் போர்வாள் மேல் நோக்கி செதுக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது மனைவி மலர் செண்டுடன் நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. தனது கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் கணவனின் சுதையில் தனது உயிரை துச்சமென எண்ணி உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

    செங்கல் கட்டுமானம்: மேற்கண்ட சிற்பங்கள் காணப்படும் இடத்தில் ஒரு பழமையான செங்கல் கட்டுமானம் காணப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மேற்கண்ட நடு கற்கள் எடுத்து வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக கட்டுமான சுவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு காணப்படும் சிற்பங்க ளைப் பார்க்கும்போது விஜயநகர பேரரசு காலத்தில் இந்த பகுதியில் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் படைப் பிரிவு களில் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர் என்று அவர்கள் கூறினார்.

    • கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்க ளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ-மாணவி களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்ப டையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 7,699 மாண வர்களுக்கும், 9,982 மாணவி களுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ்(சாத்தூர்) உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிகள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமேனிநாதர் சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.

    10-ம் நாள் தபசு நிகழ்ச்சி யானது நேற்று திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரி சையாக நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்ட பத்தில் தவம் மேற்கொண்ட தாகவும், அப்போது திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை விளக்கும் வகையில் குண்டாற்றில் ஆடித்தபசு திருவிழா நடந்தது. அப்போது திருமேனி நாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சுவாமியை 3 முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப் பட்டது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு கோவிலைச் சென்றடைந்தனர். திருவிழா வைக் காண திருச்சுழி, அருப்புக் கோட்டை, நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.

    திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் தேசபந்து திடலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள், முன்னாள்

    எம்.எல்.ஏ. பாலகங்காதரன், தெய்வம், எஸ்.எஸ்.கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர்கள் முருகையா பாண்டியன், லயன் மாரிமுத்து, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்கொடி, முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மூக்கையா, தொழிற்சங்க செயலாளர் ஆறுமுகம், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெரிய ஓடைப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). இவர் சம்பவத் தன்று வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த காளியப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்தவர் ராஜசேகரன்(61). இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகனை பார்க்க சென்று விட்டார். வீடு பூட்டியி ருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு தாட்கோ காலனியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்தன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தினமும் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

    இந்த கோவிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். அத்துடன் இங்கு திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மோதிக் கொள்ளும் சூழலும் உருவானது. இதையடுத்து ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கோவிலில் யாரும் எந்தவிதமான பிரச்சினையும் செய்யக்கூடாது, கோவிலுக்கு வழிபாடு நடத்த வருகை தருபவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது என்று உறுதியேற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இதுதொடர்பாக தீர்மானமும் போட்டு அதில் பிரச்சினைக்கு காரணமான இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ஒரு சில நபர்கள் சந்தன காளியம்மன் கோவிலை கடப்பாறை, இரும்புக்கம்பிகள் உதவியுடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனகன் ராஜா, அவரது உதவியாளர் மற்றும் சிலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கோவிலை இடித்துக்கொண்டிருந்த நபர்களை தடுத்து எச்சரித்ததோடு கண்டித்தும் அனுப்பினார். ஆனால் அவர்கள் கோவிலின் பெரும்பாலான பகுதியை இடித்துவிட்டனர். பின்னர் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினையில் கோவில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சோழர், பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவிலாங்குளம் கோவில்கள் தொல்லியல் சின்னமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தொல்லியல் சின்னமாக பாதுகாத்து பராமரிக்க தொல்லியல் ஆய்வு மாணவி சிவரஞ்சனி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் உள்ள கி.பி.12-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோவிலையும், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோவிலையும் தொல்லியல் சின்னமாக பாதுகாத்து பராமரிக்க தொல்லியல் ஆய்வு மாணவி சிவரஞ்சனி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு வழிகாட்டு தலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். கோவிலாங்குளத்தில் உள்ள தொல்லியல் தடயங்களை ஆய்வு செய்தபின் மாணவி சிவரஞ்சனி கூறியதாவது:-

    தற்போது கோவிலாங்குளம் என அழைக்கப்படும் இவ்வூர் வெண்பு வளநாட்டு செங்காட்டிருக்கை கும்பனூரான குணகணாபரண நல்லூர் என கல்வெட்டில் சொல்லப்படுகிறது.

    அம்பலப்பசாமி கோவில்

    ஊரின் தெற்கில் கோவில் போன்ற அமைப்பில் கருவறையும் அர்த்தமண்டபமும் உள்ள பெரிய மேடை போன்ற இடத்தில் அமர்ந்த நிலையில் 3 சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கில் முக்குடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கரரும், நடுவில் சுருள்முடியுடன் ஒரு தீர்த்தங்கர ரும் உள்ளனர். இதை அம்பலப்பசாமி கோவில் என்கிறார்கள்.

    இங்கு கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனின் 3 கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று முக்குடையோரான ஜைனர்களுக்கு 'திருமண்டபம், செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோவில் அமைத்ததாக' சொல்கிறது. இதன் பராமரிப்புக்காக நிலங்களும், கிணறும், நறுந்தண்ணீர் பந்தலும் அமைத்துக் கொடுத்துள்ளனர். மற்ற இரு கல்வெட்டுகளில் சில ஊர் பெயர்களும், அதிகாரிகள் பெயர்களும் வருணனையுடன் வருகிறது. இது கி.பி.12-ம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிய உதவுகிறது. இவ்வூருக்கு அருகில் புல்லூர், தொப்பலாக்கரை, குறண்டி ஆகிய ஊர்களில் சமணப்பள்ளி இருந்துள்ளது. ஆனால் இங்கு பள்ளி என்ற சொல்லே கல்வெட்டில் வராததும் திருக்கோவில் என அழைக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமாக உள்ளது.

    எங்கும் அழகிய பெருமாள் கோவில்

    இங்குள்ள எங்கும் அழகிய பெருமாள் கோவிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இதில், 3 குலசேகர பாண்டியனுடையது. வரமண்ண வீரர் குறி நம்பிள்ளை, நாரணன், சாணாடனான கன்னி நாட்டரையன் ஆகியோர் இவ்வூர் கோவிலுக்கு கொடையாக பசு, நூறு குழி நிலம் வழங்கியதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோவில் விமானம் பிரஸ்தரம் வரை கருங்கற்களாலும், அதன் மேல்பகுதி சுதை மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஸ்தூபி சேதமடைந்துள்ளது.

    பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட இக்கோவில், புல் பூண்டு முளைத்து ஆங்காங்கே கற்களெல்லாம் இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. கருவறையும் அர்த்தமண்டமும் தான் சேதமடைந்த நிலையில் மிஞ்சியுள்ளது. மகாமண்டபத்தில் அடித்தளத்தை மட்டுமே காணமுடிகிறது. சிற்பங்களோடு உள்ள தூண்கள் கோவிலருகில் உடைந்து கிடக்கின்றன. கோவில் கிணறு குப்பை போடும் இடமாக உள்ளது.

    சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு ஆதாரத்துடன் நீண்டதொரு வரலாற்றையும் தனக்குள் கொண்டுள்ள, கோவிலாங்குளத்தின் சமண, வைணவ கோவில்களை தொல்லியல் துறையினர் புணரமைத்து தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேல்நிலை கல்வியை தடையில்லாமல் படிக்க சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
    • செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    கிராமப்புரங்களில் ஏழ்மையில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு மேல்நிலைக்கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    அனைத்து தரப்பு மாண வர்களும் மேல்நிலைக் கல்வியை தடைபெறாமல் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இந்த விலையில்லா சைக்கிள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 2023-24ம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 699 மாணவர்களுக்கும், 9 ஆயிரத்து 982 மாணவிக ளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    முதற்கட்டமாக மல்லாங்கிணர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 161 மாணவர்களுக்கும், செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துக்கழுவன், மல்லாங்கி ணர் பேரூராட்சி தலை வர்கள் துளசிதாஸ், செந்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயமானார்.
    • ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்ன கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது27). இவருக்கும், முகல்யா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி ஊர் திருவிழாவுக்கு மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது முகல்யா மாயமானார்.

    அப்போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், "என்னை தேட வேண்டாம், மன்னித்து விடுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி, காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல், திருவள்ளு வர் காலனியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகள் லூர்து மேரி(வயது19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி குரவை குளத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×