என் மலர்
விருதுநகர்
- சமையல் மாஸ்டர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் பால முருகன் (வயது 40). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாக லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பாலமுருகன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
- பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி இம்மானுவேல் கீழ தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது 55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சப்பாணி அந்த பகுதியில் திறந்து கிடந்த ஒரு வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கணவர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சப்பாணி தான் போலீஸ்காரர் என்றும், யாரும் என்னை மிரட்ட முடியாது என்றும் கூறிவிட்டு சென்றார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சப்பாணி மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சப்பாணியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த தினமாக கருதப்படுகிறது.
- பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த தினமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சாமி தரிசனம் செய்தவுடன் மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
- பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமி–ழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி–யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா–கும். ஆண்டுதோறும் நடை–பெறும் இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருக் கன்குடி மாரியம்மன் கோவி–லில் குவிவார்கள்.
இங்கு தென் மாவட்டங் களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்க–ணக்கான பக்தர்கள் பாத–யாத்திரையாக வந்து அம் மனை தரிசித்து, அக்கி–னிச் சட்டி, மாவிளக்கு, பறவை காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த் திக்கடன்களை செலுத்தி–னார்கள். பக்தர்களின் வச–திக்காக சிறப்புப் பேருந்து–களும் இயக்கப்பட்டன
இதையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று மாலை இருக்கன்குடி மேல–மடை குடும்புகள் தலைமை–யில் இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப் பிலை கொடி கட்டுவார் கள். இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட் டுப்பட்டி என்.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகா–தார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை விருதுநகர் அறநிலையத் துறை கோவில் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வளர் மதி, பரம்பரை அறங்கா–வலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை மருமகள் உடைத்தார்.
- உறவுக்கார பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முத்து–சாமிபுரம் காமராஜர் நக–ரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது மகன் இளங்கோ, மருமகள் மரு–மகள் பொன்னுபிரியா. திருமணத்திற்கு பிறகு தம்ப–தியினர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மாமியார், மருமகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். உறவினர் கள் சமரசம் செய்துவைத்தும் பலனில்லை. இந்த நிலை–யில் சம்பவத்தன்று செல்வி தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
மேலும் அவர் தன்னைப் பற்றி தான் செல்போனில் ஜாடையாக பேசிக்கொண்டி–ருப்பதாக மருமகள் பொன் னுபிரியா நினைத்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர் மாமியார் என்றும் பாராமல் உடைந்து கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் தலையில் பலமாக அடித்தார். இதில் செல்வி–யின் மண்டை உடைந்தது.
மேலும் அருகில் வசிக்கும் பொன்னுபிரியாவின் தாய் சுந்தரவள்ளி, உறவினர் ஜெயபிரியா ஆகியோரும் அங்கு வந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த செல்வி ராஜபா–ளையம் அரசு ஆஸ்பத்திரி–யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி–றார்.
- விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்த குமரவேல் விருதுநகர் பஜாரில் இருந்த தனது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டாபட்டியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது24), ஹரிஹரன் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ஞானசேகரன்(57), விக்ரமன்(55) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த அமிர்தசங்கர் என்பவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- காரியாபட்டி பகுதிகளில் ஊராட்சி துறை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கம்பிக்குடி கிராமத்தில், சுரங்கம் மற்றும் கனிமவள நிதியிலிருந்து ரூ.3.18 கோடி மதிப்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளையும், பாப்பனம் கிராமத்தில், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் 35000 லிட்டர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
வி.நாங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் மதிப்பிலான புதிய கிராம ஊராட்சி செயலகக் கட்டடம் கட்டும் பணிகளையும், முடுக்கன்குளம் -செக்கனேந்தல் இடையே கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.156.33 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் துலுக்கன்குளம் கிராமத்தில், இண்டஸ் வங்கி, பிரதான் அறக்கட்டளை மற்றும் மக்கள் பங்களிப்புடன் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கீழகள்ளிகுளம் கண்மாய் தூர்வாரும் மற்றும் மதகு சரிசெய்யும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, செயற் பொறியாளர் இந்துமதி, மாவட்ட ஊராட்சி செயலர்/மண்டல அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், உதவி பொறியாளர்கள் காஞ்சனாதேவி, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் எடை முறைகேட்டில் ஈடுபட்ட 30 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும். விருதுநகர், தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வியின் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் ஜூலை மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் திரவ எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், மோட்டல்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளிலும் 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் வருட பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
இந்த சிறப்பாய்வில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் விருதுநகர் அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.
அச்சிறப்பாய்வில், 2009-ம் வருட சட்டமுறை எடை யளவு சட்டம் மற்றும் 2011-ம் வருட பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப் பொருட்களின் மேல் சட்டவிதிகளின்படி உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 13 வணிகர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்ப னை செய்த 1 வணிகர் மீதும், பொட்டலப் பொ ருட்கள் விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பொ ருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்த 2 வணிகர்கள் மீதும் ஆக மொத்தம் 16 வணிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவுகள் முத்திரை யிடப்பட்டதற்கான பரிசீலனைச்சான்றினை அவற்றை உபயோகப் படுத்தும் இடங்களில் வெளிக்காட்டி வைக்காத 19 வணிகர்கள் மீதும், தராசின் எடைத்திறனை சரிபார்க்க வணிகர்கள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்தி ருக்காத 6 வணிகர்கள் மீதும், எரிவாயு உருளையின் எடையினை விநியோகம் செய்யும் போது அவற்றை சரிபார்க்க தராசினை டெலிவரி மேன்கள் வைத்திருப்பதை உறுதி செய்யாத 3 ஏஜென்சிகள் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2011-ம் வருட பொட்ட லப் பொருட்கள் விதிகளின் கீழ், முரண்பாடுகள் காணப்படும் நேர்வில் முதல் முறை ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் மற்றும் அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
எடைஅளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்க ளுக்கு 2008-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25.000 வரை அபராதமும் இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 5 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடையளவைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீற்டனையாளர்களிடம் வாங்கும் போது, எடையளவைகள் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறும். அதற்கான மறுபரிசீலனை சான்றினை கேட்டுப் பெறுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
- கேலி, கிண்டலை கண்டித்த தம்பதி மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகேயுள்ள கோட்டைநத்தம் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 10 நாட்களுக்கு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்தி–ருந்தார். அதன்படி நேற்று ஊருக்கு கணவர் வந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அழகுராஜா, தன்னை கேலி, கிண்டல் செய்துவருவதாக புகார் கூறினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் அவரிடம் நியாயம் கேட்க சென்றனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரை–யும் அழகுராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவம–னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கிய அழகுராஜாவை கைது செய்தனர்.
- சிவகாசி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல்கூடம் கட்டப்பட்டு வருவதையும், காரிசேரி கிராமத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புனரமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் மேலஆமத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பில் சேர்வைக்காரன்பட்டி கண்மாய் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.31.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப் பறை கட்டிடங்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைவில் செயல்படும்.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது,
அதனைத்தொடர்ந்து அலுவலுகம் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு அமிழ் ஹோட்டல் அருகில் இடமும் தேர்வு செய்து அதற்கான அனுமதி பெற கோப்புகள் சென்னையி லுள்ள போக்கு வரத்து துறை ஆணையகரத்திற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1-ந்தேதி போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து விரைவில் அனுமதி வழங்குமாறு மனு அளித்து வலியுறுத்தினேன், அதற்கு ஆணையர் உடனடியாக கோப்பை ஆய்வு செய்து உள்துறை செயலாளர் அமுதாவிற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை வெளியிட்டு விரைவில் ராஜபாளையம் தொகுதியில் புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகத்தை தற்காலிகமாக வாடகை கட்டித்தில் தொடங்கப்படுமென என்னிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துதல் கட்டிடப்பணி எனது கண்காணிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறுமாத காலத்தில் கட்டி டப்பணி முழுமையடைய உள்ளது. ஆகவே மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் இருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், இருதய அடைப்பு ஏற்பட்டால் உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ஆஞ்சியோ கருவி உள்பட அனைத்து மருத்து வக்கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், மருத்து வக்கருவிகளை கையாளும் மருத்துவப்பணியாளர்கள் என தலைமை மருத்துவ மனையி லுள்ள அனைத்து வசதிகளையும் ராஜபா ளையம் அரசு மருத்துவ மனையில் திறப்பு விழா விற்கு முன்னதாகவே ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அதற்கு அரசு முதன்மை செயலாளர் கண்டிப்பாக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- குடும்பத்தகராறில் மனைவி மீது கணவர் தாக்கினார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த–வர் கந்தாமி. இவரது மனைவி ராமச்சந்திரா (வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள் ளனர்.
பட்டாசு ஆலையில் ஊழி–யராக வேலை பார்த்து வரும் கந்தசாமி, தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள் ளார். பலமுறை கண்டித்தும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை.
இதையடுத்து கடந்த 31-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் ராமச்சந் திரா புகார் அளித்தார். இது–தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவும் கந்தசாமி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் மனை–வியை சரமாரியாக தாக்கி–யுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந் திரா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






