என் மலர்
விருதுநகர்
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். கல்லூரியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
- மாநில கூர்ந்தாய் வாளர் ரத்தினவிஜயன் ஆகி–யோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வி.பி.எம்.எம். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி–யில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஆசி–ரியை கீதாராணி தலைமை தாங்கினார். மாநில கூர்ந்த ஆய்வாளர் ரத்தின விஜயன் முன்னிலை வகித்து பேசி–னார்.
இந்த கூட்டத்தில் கல்வி வளர்ச்சி குறித்து பெற்றோர் களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்துமேலாண்மை குழு கட்டமைப்பு உறுப்பி–னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட–னர்.
அதில், பள்ளி மேலாண் மைக் குழுவின் தலைவராக ராமலட்சுமி, துணை தலை–வராக கிருஷ்ணசாமி, கல்வி–யாளராக பாலசுப்பிரமணி–யம், சுய உதவி குழு உறுப்பி–னராக செல்வலெட்சுமி தலைமையாசிரியர் கீதா ராணி, ஆசிரியர் பிரதிநிதி–யாக பரமசிவம் மற்றும் 12 உறுப்பினர்கள், தலைமை–யாசிரியை கீதாராணி மற்றும் மாநில கூர்ந்தாய் வாளர் ரத்தினவிஜயன் ஆகி–யோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- ராஜபாளையத்தில் கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம் நடந்தது.
- ஊர்வலத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் முகவூர் காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய, நகர, பேரூர், துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனா, விநாயகமூர்த்தி காளிஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை செய லாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
- போலீசார் இனிமேலாவது கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.
- தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் இருளப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சூரிய பிரகாஷ் (வயது 24). மது போதைக்கு அடிமையான இவர் கஞ்சா புகைப்பது, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கஞ்சா விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் தன்னை திருத்திக் கொள்ளும் வகையில், போலீசார் பலமுறை சூரிய பிரகாசுக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை.
இதற்கிடையே முகவூர் இருளப்பசாமி கோவில் தெரு பகுதி சேர்ந்த மற்றொரு குரூப்பாக செயல்படும் சில இளைஞர்களுக்கும், சூரியபிரகாஷ்க்கும் கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சூரியபிரகாசின் வீட்டிற்கு எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து துரத்தினர். இதுபற்றி அறிந்து அங்கு வந்த சூரிய பிரகாஷ் எதிர்தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்தார். என்ன தைரியம் இருந்தால் என்னுடைய வீட்டிற்கே வந்து மிரட்டுவீர்கள் என்று போதையில் தகராறு செய்தார். அப்போது ஒருவரை சரமாரியாக தாக்கியதோடு, அவரது கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
மேலும் மோதலில் ஈடுபட்ட அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதி கலவர பூமியாக மாறியது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரட்டினர்.
இந்த நிலையில் நேற்று இரவு சூரியபிரகாஷ் தன சித்தப்பா குருசாமி (48) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு முகவூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து, தான் குடியிருக்கும் இருளப்பசாமி கோவில் தெரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று முகமூடி அணிந்திருந்த நான்கு பேர் சூரிய பிரகாசை வழிமறித்தனர். அங்கிருந்து தப்ப நினைத்த இருவரும் வாகனத்தை திருப்பினர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சூரியபிரகாசை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு கழுத்து மற்றும் முகப்பகுதியில் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க சென்ற சூரிய பிரகாசின் சித்தப்பா குருசாமிக்கும் தோள்பட்டை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை பார்த்த பொதுமக்கள் தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்ல முயன்றனர். அப்போது சூரிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது முகவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் இனிமேலாவது கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். இது போன்ற போதைக்கு அடிமையான இளைஞர்களை காப்பாற்றவும் முயற்சி எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி பாண்டிசெல்வி(28). சம்பவத்தன்று இவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டியில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது உறவினர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் மற்றொரு உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பாண்டிசெல்வி அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது31), கட்டிடத் ெதாழி லாளி. இவரது மனைவி மஞ்சுளா(21). இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு மஞ்சுளா கணவரை அழைத்து செல்ல வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஜெயராஜ் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டார்.
சாத்தூரில் உள்ள மதுரை பஸ் நிறுத்தத்தில் மஞ்சுளா கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஜெயராஜ் மனைவி அருகில் வரும்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மஞ்சுளா கண்ணெதிரே விபத்தில் கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விருதுநகர்
இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நடக்கும் இந்த பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.
அதன்படி விருதுநகர் ரெயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் முதல்கட்டமாக ரூ. 7.73 கோடியில் 2-ம் நுழைவு வாயில், 2-ம் நுழைவு வாயிலில் புதிய ரயில் நிலையக் கட்டடம், அணுகு சாலைகள், சுற்றுச்சுவர் புனரமைப்பு, வேலிச் சுவர்கள் புனர மைப்பு, ரெயில் நிலைய வளாகத்தை அழகு படுத்துதல், உட்புறச் சீரமைப்பு, பயணிகள் தொடர்பு கொள்ளும் பகுதி, மேம்படுத்தப்பட்ட குடிநீர்வசதி, அறிவிப்பு பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலைய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் ரெயில் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
இந்த விழா பாரம்பரிய பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சியோடு தொடங்கியது.நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு " இந்திய ெரயில்வேயின் ஆகச்சிறந்த முன்னேற்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை,ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் சண்முகமுனீஸ்வரன் (வயது29). இவர் அருப்புக் கோட்டையிலுள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த வருடம் யோகிதா (26) என்பவருடன் திருமணமானது. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். இந்நிலை யில் நேற்று மாலை கரு மேகத்துடன் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
அப்போது சண்முக முனீஸ்வரன் புதியதாக கட்டிவரும் அவரது வீட்டு மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு வைத்து செட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சண்முக முனீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவி னர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சண்முக முனீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
- பழங்கள் தினவிழா நடந்தது.
- பழக்கலவை செய்து விநியோகிக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மில்கேட் பகுதியில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் பழங்கள் தினவிழா பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளால் கொண்டாடப்பட்டது. ஆரோக்கியம் எங்கே? என்ற வினாவிற்கு விடையாக கொண்டாடப்பட்ட விழாவில் பல வகையான பழங்களின் நன்மையை வண்ண ஆடையுடன் எடுத்துரைத்தனர்.
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என கேள்வி கேட்டு அவ்வை பாட்டி மூலம் செயல் வழி கல்வியை தொடங்கி வைத்தது தமிழ்கடவுள் முருகபெருமான் என எடுத்துரைக்கப்பட்டது. விழா முடிவில் மழலை மொழி பாடிய குழந்தை களுக்கு பழக்கலவை செய்து விநியோகிக்கப்பட்டது.
- அகல ெரயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
- மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர்
மதுரை- தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இந்தநிகழ்ச்சியில் பேசிய அவர் திட்டப்பணிகளை பற்றி பேசுவதை விட எதிர்கட்சிகளை பற்றி குற்றம் காட்டுவதையே நோக்கமாக கொண்டி ருந்தார்.
ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு தற்போது ரூ. 7 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்ட பணிகளை பற்றி தங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என்றும் அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக விருது நகர் ெரயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப் பணியை மத்திய ெரயில்வே அமைச்சகம் கைவிட முடிவு செய்துவிட்டது. இது பற்றி கோட்ட ெரயில்வே அதிகாரியிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என கூறுகின்றார்.
எனவே இதுகுறித்து தென் மாவட்ட எம்.பி.க்கள் அனைவரும் மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து இத்திட்டத்தை கைவிடக் கூடாது என்றும் தொடர்ந்து மேற்கொண்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முறையி டுவோம். அத்துடன் எழுத்துப்பூர்வமாகவும் மனு கொடுக்க உள்ளோம்.
ராகுல்காந்தி நாடாளு மன்ற விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். எனினும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவகுரு நாதன், மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன் ஆகி யோர் உடனிருந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம் செல்கிறார்.
- தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்குகிறார்.
இதனைதொடர்ந்து திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்கிறார்.
10-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அவர் விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் மக்களிடையே பேசுகிறார். பின்னர் மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
11-ந் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார்.
இந்த தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.
- ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.






