என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weight abuse"

    • விருதுநகர் மாவட்டத்தில் எடை முறைகேட்டில் ஈடுபட்ட 30 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும். விருதுநகர், தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வியின் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் ஜூலை மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் திரவ எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், மோட்டல்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளிலும் 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் வருட பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    இந்த சிறப்பாய்வில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் விருதுநகர் அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    அச்சிறப்பாய்வில், 2009-ம் வருட சட்டமுறை எடை யளவு சட்டம் மற்றும் 2011-ம் வருட பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ், பொட்டலப் பொருட்களின் மேல் சட்டவிதிகளின்படி உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 13 வணிகர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்ப னை செய்த 1 வணிகர் மீதும், பொட்டலப் பொ ருட்கள் விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பொ ருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்த 2 வணிகர்கள் மீதும் ஆக மொத்தம் 16 வணிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த 2 வணிகர்கள் மீதும், எடையளவுகள் முத்திரை யிடப்பட்டதற்கான பரிசீலனைச்சான்றினை அவற்றை உபயோகப் படுத்தும் இடங்களில் வெளிக்காட்டி வைக்காத 19 வணிகர்கள் மீதும், தராசின் எடைத்திறனை சரிபார்க்க வணிகர்கள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்தி ருக்காத 6 வணிகர்கள் மீதும், எரிவாயு உருளையின் எடையினை விநியோகம் செய்யும் போது அவற்றை சரிபார்க்க தராசினை டெலிவரி மேன்கள் வைத்திருப்பதை உறுதி செய்யாத 3 ஏஜென்சிகள் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    2011-ம் வருட பொட்ட லப் பொருட்கள் விதிகளின் கீழ், முரண்பாடுகள் காணப்படும் நேர்வில் முதல் முறை ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் மற்றும் அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    எடைஅளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்க ளுக்கு 2008-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25.000 வரை அபராதமும் இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 5 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடையளவைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீற்டனையாளர்களிடம் வாங்கும் போது, எடையளவைகள் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறும். அதற்கான மறுபரிசீலனை சான்றினை கேட்டுப் பெறுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    ×