கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயம்

கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயமானார்.ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்ன கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது27). இவருக்கும், முகல்யா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி ஊர் திருவிழாவுக்கு மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது முகல்யா மாயமானார்.

அப்போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், "என்னை தேட வேண்டாம், மன்னித்து விடுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி, காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல், திருவள்ளு வர் காலனியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகள் லூர்து மேரி(வயது19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி குரவை குளத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com