வங்கி கலந்துரையாடல் முகாம்

வங்கி கலந்துரையாடல் முகாம் நடந்தது. துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.
வங்கி கலந்துரையாடல் முகாம்
Published on

திருச்சுழி

திருச்சுழியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பாக விவசாயிகளுடனான மாலைநேர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சுழி ஊராட்சி மன்றத்தலைவர் பஞ்சவர்ணம் குமார் முன்னிலை வகித்தார்.கிளை மேலாளர் ஹரிஹர சுந்தர் வரவேற்றார். தூத்துக்குடி மண்டல வாணிப அலுவலகத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு மானியக்கடன் திட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.1.60 கோடி வரை கடன் வழங்குவதற்கான ஒப்புகை சான்று வழங்கப்பட்டது.

மேலும் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் முதன்மை மேலா ளர்கள் மாரியப்பன், விமல் செல்வராஜ், மேலாளர் கோவிந்தராஜ், சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத்குமார், மேலாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com