என் மலர்
நீங்கள் தேடியது "Sugarcane crops"
- ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம் அடைந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்க பாண்டியன்(வயது36). பள்ளி ஆசிரியரான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தற்போது கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணை யில், பக்கத்து நிலத்தில் தீ வைத்ததில் கரும்பு பயிர் களுக்கும் தீ பரவியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோட்டை சே ர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது விளை நிலத்தில் கரும்பு பயிர் வைத்திருந்தார். இந்நிலையில் கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதில் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேத மடைந்தது.






