என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவன் சம்ருத்துக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை
- 5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
- உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் காவலர் வாய்ஸ் தன்னார்வலர்கள் குழு, யூத் அச்சீவர்ஸ்கிளப் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனோஜ்குமார்-ஸ்ரீஜா தம்பதியின் மகன் சம்ருத் (வயது7) ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியவாறு ஒரு மணி நேரத்தில் 5.5 கிமீ தூரத்தை ஓடி கடந்து உலக சாதனை படைத்தார்.
மேலும் 5 வயது சிறுமி ஆராதனா கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி இடுப்பில் உள்ள வளையத்தை 30 நிமிடங்கள் சுழற்றி சாதனை செய்தார். மேலும் யோகவீனா (14) கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா ஆகியவற்றை அற்புதமாக செய்து காண்பித்தார்.
நிகழ்ச்சியில் யூத் அச்சீவர்ஸ்கிளப் இயக்குனர் அய்யப்பன், உலக சாதனை தீர்ப்பாளர் நோபல் உலக சாதனை சி.இ.ஓ. அரவிந்த், காவலர் வாய்ஸ் தன்னார்வர்கள் குழு ஒருங்கிணைப்பார் ஞானேஸ்வரன், செயலாளர் அழகர்சாமி, மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் மனோகர் சாமுவேல், பயிற்சியாளர்கள் அசோக், அந்தோனிசாமி, ஆனந்த்பாபு, விக்னேஷ், ஆனந்த, காவலர் வாய்ஸ் மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






