என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை கடையில் துணிகர திருட்டு
- நகை கடையில் நகை மற்றும் பணம் திருடு போனது.
- பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது48). இவர் வடக்கு ரத வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருமலாபுரத்தை சேர்ந்த கண்ணன், மகாலட்சுமி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று மகாலட்சுமி மட்டும் கடையில் பணியில் இருந்தார்.
அப்போது சுகுமார் அவரிடம் 5 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டு வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றுவிட்டார். மறுநாள் கடைக்கு வந்த சுகுமார் நகை-பணத்தை சரிபார்த்தபோது 3 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகுமார், இதுகுறித்து மகாலட்சுமி யிடம் விசாரித்தபோது உரிய பதிலளிக்கவில்லை. இதையடுத்து நகை-பணம் திருட்டு தொடர்பாக சுகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த வர் மாரிச்சாமி(68). நேற்று யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






