என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்களை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரிலுள்ள பி.ஏ.சி.எம் மேல்நிலைப் பள்ளி பி.ஏ.சி.ஆர் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டராஜா அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சிவக்குமாரி, காளி யப்பன் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

    பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சர் மாணவ மாண விகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டங்கள் அனைத்தையும் மாணவ மாணவியர்கள் சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைந்து பள்ளிக்கும் ராஜபாளையம் தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து ராஜ பாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் மேசை, பெஞ்சுகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
    • பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.

    இந்நிலையில், நேற்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் அருகே மாலை 4 மணிக்கு கட்சியினருடன் நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து தெற்கு ரத வீதி, தேரடி, பஸ் நிலையம், சின்னக்கடை பஜார் ஆகிய பகுதிகள் வழியாக நடந்து வந்தார். வழிநெடுகிலும் அண்ணாமலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ராட்டையில் அண்ணாமலை நூல் நூற்றார். ஆண்டாள் கோவில் அருகில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் துண்டால் கண்களை கட்டிக்கொண்டு உற்சாகமாக உறி அடித்தார்.

    முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலுக்கு அண்ணாமலை வந்து தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரையும் சந்தித்துப் பேசினார்.

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள் ளையின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவ காசியில் திருத்தங்கல் வ.உ.சி. சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைப்பு செயலா ளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபு ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வேண் டுராயபுரம் சுப்பிர மணியன், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டி யன், ஷாம் என்ற ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ்.

    கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரி முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் பாண்டிய ராஜன், தலைவர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி.152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் நகர வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் சுதந்தி ரபோராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர வடக்கு செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலை மையில், தெற்கு செயலாளர் பரமசிவம் முன்னிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சுழியில் கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குரு பூஜை விழா வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வா கிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மாலையணி வித்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் விருதுந கர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தியாகி இமா னுவேல் சேகரன் நினைவி–டத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமு றைகள் மற்றும் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் வருவது குறித்த ஆலோசனைக் கூட் டம் திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் பேசும்போது, வருகிற செப் டம்பர் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரானாரின் குருபூஜை விழா நடைபெறு கிறது. இதனையொட்டி திருச் சுழி மற்றும் நரிக்குடி வழி யாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சா வடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனு மதி பெற்று அரசு வகுத் துள்ள வழித்தடங்களில் வருவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறி முறை களையும் தவறாது கடை பிடித்து அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் தங்களது ஒத்து ழைப்பை வழங்க வேண்டு மெனவும் திருச்சுழி கேட்டுக் கொண்டார்.

    மேலும் தியாகி இமானு வேல் சேகரனாரின் குரு பூஜையை முன்னிட்டு நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண் டன், நரிக்குடி சரக இன்ஸ் பெக்டர் ஜெகநாதன் ஆகி யோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் சுழி மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்க ளில் இருந்து சமுதாய தலை வர்கள், கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சுழி மற்றும் நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள், அனைத்து பிரிவுக ளின் காவலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

    • எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்கள் 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கைதட்டி சாதனை படைத்துள்ளனர்.
    • வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் துபாய் தனியார் நிறுவனம் மற்றும் எஸ்.பி.கே. கல்விக் குழுமங்கள் இணைந்து சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் படிக்கும் 5 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்த னர்.

    இந்த நிகழ்ச்சி துபாய் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீ கரிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் செல்லத் தாய் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தாசில்தார் அறிவழகன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோபியா பாய் கலந்து கொண்டனர்.

    மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் காசி கோபிநாத், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன் இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் முத்து தினகரன், எஸ்.பி.கே. தியாகராஜன் மெமோரியல் மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வி.பி.நந்தவனம் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(64). இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. தனது வீட்டின் மாடியில் இருந்து பழனிவேல் அங்கு பார்த்துள்ளார். அப்போது அந்த வீட்டின் மாடியில் இருந்து 3 மர்ம நபர்கள் கீழே குதித்து ஓடி உள்ளனர். திடீரென அவர்களின் 2 பேர் பழனிவேல் வீட்டின் ஜன்னல் கதவையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பழனிவேல் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்த லோகநாதன் (21), 114 காலனியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரஞ்சித் குமாரை தேடி வருகின்றனர்.

    • கஞ்சா புழக்கத்தை தடுக்க பள்ளிகள் அருகே போலீசார் ரோந்து தீவிரமாக நடந்து வருகிறது.
    • கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வாரத்தில் பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்தி ற்கிடமாக நின்றிருந்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சேத்தூர் மந்தை தெருவை சேர்ந்த சிவ கணேசன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் ஆவுடையாபுரம் பள்ளி அருகில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபர்க ளிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் இருந்தது. விசார ணையில் அவர்கள் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தமிழ ரசன்(33), துலுக்கப்பட்டியை சேர்ந்த குணசேகரன்(32) என்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்து வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது 150 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம் பட்டி தேவர் சந்து பகுதியை சேர்ந்த இந்திரா(60) என்பது தெரியவந்தது. டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர் கருப்பசாமி கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சின்னபேராலியை சேர்ந்த வினோத் குருநாதன் (23), 30 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பாண்டியன்நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பால சுப்பிரமணியம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த–வர் முத்துக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜய–லட்சுமி (30). இவர்கள் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களது உறவி னர் பாலசுப்பிரமணி–யம் (50).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கண வன், மனைவி இருவரும் சென்று தாங்கள் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேருமா றும், அதில் அதிக வட்டித் தொகை கிடைப்பதாகவும், அதன் மூலம் லாபம் பெற–லாம் என்றும் ஆசை வார்த் தை–களை கூறியுள்ள–னர்.

    இதனை நம்பிய பால சுப்பிரமணியம் ஏலச் சீட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பிலான சீட்டில் சேர்வதாக கூறினார். இதில் மாத தவணை யாக கடந்த 8.9.2021 முதல் 13.10.2022 வரையிலான காலத்தில் ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்தை தம்பதியினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தும் சீட்டுத் தொகையை தராமல் தம்ப தியினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். பல முறை கேட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து பாலசுப்பிர மணியம் ஓசூரில் இருந்து ராஜபாளையத்திற்கு நேரில் வந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டிக்கி டந்ததோடு, இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு நடத்து வதாக கூறி பண மோசடி யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்னர் பால சுப்பிரமணியம் ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ் பெக்டர் மோகன் ஆகியோர் முதல்கட்ட விசாரணை நடத்தி ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட முத்துக்குமார், அவரது மனைவி விஜய லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இதேபோல் வேறு எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.86 லட்சம், 225 கிராம் தங்கம் கிடைத்தது.
    • இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் நகைளை ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து எண்ணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் காணிக்கையை கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் 3 தற்காலிக உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 15 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் மதுரை கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான செல்வி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர்மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப் பட்டன.

    மேலும் கோவிலில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.86 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரொக்கமும் 225 கிராம் தங்கமும், 133 கிராம் வெள்ளியும் இருந்தது.

    இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பக்தர் சேவா சங்க உறுப்பின்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி நடந்தது.
    • மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது.

    அருப்புக்கோட்டை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த இறகுப்பந்து போட்டி அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியில் நடந்தது. இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் செல்லத்தாய் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜாக்லின் பெரியநாயகம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும், திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரிய கல்லூரி 3-வது இடத்தையும், மதுரை

    எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் முத்து தினகரன் கோப்பைகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மணிகண்டன், மாதவன் மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×