சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள்
Published on

தாயில்பட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில் லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை நடத்தி–யது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன.

மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகர–ணங்களான பேனா, பென் சில் மற்றும் சமைய–லுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை கணினி பயன்பாட்டி–யல் துறை உதவி பேராசி–ரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகி–யோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com