என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    விருதுநகர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இதையொட்டி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

    இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலை வர்கள் ராஜாசொக்கர். ரங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியா காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

    இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்.7-ந்தேதி தொடங்கி யது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கி றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போதே பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை.

    பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலக்குகளை தெளிவாகவும் விழிப்புணர்வோடும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் மாணவ, மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படை யில் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை கலெக்டர் நேரில் அழைத்து கலந்து ரையாடுகிறார்.அதன்படி 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவி களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    இலக்குகளை தேர்ந்தெடு ப்பதில் தெளி வாகவும், விழிப்புணர் வோடும் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்து படிப்பிற்கான இலக்குகளை தேர்ந்தெடு ப்பதை விட, அடுத்த 30, 40 வருடங்கள் சமூகத்தில் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து இலக்கு களை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    12-ம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உரு வாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றா லும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடின மாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொரு வருக் கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மூதாட்டியிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் குருவம்மாள்(வயது 68). இவர் அல்லம்பட்டி ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த தம்பதி திருப்பதி- நல்லதங் காள் ஆகியோருக்கு சொந்த மான நிலத்தை பேரம் பேசி வாங்கிக்கொள்ள சம்ம தித்தார். பின்னர் கடந்த டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2022 வரை ரூ.15¾ லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த தம்பதியினர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராமல் காலம் கடத்தி யுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட நிலம் குறித்து விசாரித்தபோது கடந்த 2019-ம் ஆண்டு தனியார் வங்கியிடம் அந்த நிலம் அடமானம் வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதன் பேரில் ரூ. 4 லட்சத்தை அந்த தம்பதி மூதாட்டிக்கு திரும்ப கொடுத்தனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    மூதாட்டி பணத்தை கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். மூதாட்டி அங்கு சென்றபோது பணத்தை திருப்பதித்தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மூதாட்டி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மேற்கு போலீசார் அந்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • ராமராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே.ராமராஜூ 113 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம ராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே ராம ராஜூவின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலை வளாகத்தில் ந நடைபெற்ற விழாவிற்கு இயக்குநர் என்.ஆர்.கே. ஸ்ரீ கண்டன் ராஜா தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை யின் சார்பாக ரத்ததான முகாமும், சக்தி கண் மருத்துவமனை சார்பாக கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

    முகாமில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தலைவர் மோகனரங்கன், தலைமை நிதிநிலை அதிகாரி விஜய் கோபால், தலைமை பொது மேலாளர். சந்தோஷ், பொது மேலாளர் சுந்தரராஜ் துணை பொது மேலாளர் தங்கராஜ், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    விருதுநகர்:

    அறிவியல், விஞ்ஞானம், விண்வெளி, நாகரீக வளர்ச்சி என்று நாடு முன்னேற்ற பாதையில் பயணித்தாலும், அவற்றையெல்லாம் படுபாதாளத்தில் தள்ளும் வகையிலான ஈனச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய செயல்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித கழிவுகளை கலந்து முன்னேற்றம் அடையாத சமுதாயம் என்பது முத்திரை குத்தப்பட்டது.

    உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., அறிவியல் பூர்வமான விசாரணை என்று நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அதனை நினைத்து பார்க்கக்கூடாது என்றிருந்த நிலையில் அதே சாயலில் விருதுநகர் அருகே மற்றொரு செயல் நடந்துள்ளது.

    விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பம் பட்டி கிராமத்தில் 200 பேர் கல்வி பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க அந்த ஊரைச்சேர்ந்த மாணவ, மாணவிகளே இங்கு படிக்கிறார்கள்.

    முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே இருந்த வசதியுடன் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டி ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டது.

    எந்தவித பாகுபாடும் இன்றி இதுவரை வயிறாற உணவுடன், தரமாமன கல்வியும் போதிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பூதாகரமாக புகுந்த கயவர்கள் சிலர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் அந்த தொட்டியில் இருந்து குடித்த நீரில் துர்நாற்றம் வீசியது. அதனை திறந்து பார்த்தபோது சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. சுத்தம் செய்பவர்கள் பெரிதுபடுத்தாமல் கழுவி தண்ணீர் ஏற்றினர். 3-ந்தேதியும் இதே செயல் நடந்தது.

    கிருஷ்ணஜெயந்தி விடுமுறைக்கு மறுநாளான நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தண்ணீரை பருகியபோது மீண்டும் அதில் சாணம் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரும் இதனை உறுதி செய்தனர்.

    இதுபற்றி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அங்கு திரண்டு ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளியில் உள்ளூர் மாணவர்களே படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற அசுத்தமான செயலை செய்திருக்கமாட்டார்கள். பக்கத்து ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்கு விளையாட வருவார்கள் என்று தெரிவித்தனர். அவ்வாறு வரும் மாணவர்கள் யார், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், விடுமுறை நாளில் பள்ளிக்கு விளையாட வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    சாதிய வன்கொடுமையை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (வயது 27). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கற்பகராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சிந்தப்பள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல் இருவரும் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி கற்பகராஜா விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவும் கற்பகராஜா மதுபோதையில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கற்பகராஜா, மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் டவுன் போலீசார் கற்பகராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் கற்பக ராஜாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். பின்னர் மதுவாங்கி வைத்துக் கொண்டு அவரை சமாதானம் பேச அழைத்து அவருக்கு மதுவை அதிகமாக ஊற்றிக்கொடுத்தோம். கற்பகராஜூக்கு போதை தலைக்கேறியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அதற்கு உதவியாக அவருக்கு சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அவரது கணவர் இருந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணவனை கொன்ற விஜயலட்சுமி (25), அவரது தாயார் பழனியம்மாள் (48), திருநங்கை ஸ்வீட்டி (25), இவரது கணவர் வேலாயுதம் (25) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க.வுக்கு தேர்தலில் பொதுமக்கள் பதிலளிப்பார்கள்.
    • ராஜபாளையத்தில் அண்ணாமலை பேசினார்.

    ராஜபாளையம்

    என் மண்,என் மக்கள் என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராஜபாளையத்தில் நடை பயணத்தை தொடங்கி னார். அவர் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அண்ணா மலை பேசியதாவது:-

    4 நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை வேர் அறுப்போம் எனக் கூறுகிறார். சனாதான தர்மம் என்று சொல்லி விட்டால் அவை கிறிஸ்த வர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் எதிரி கிடையாது. அரவணைத்து செல்லக் கூடியது சனாதான தர்மம். ஆன்மீக ஆட்சியில் தான் அனைவரும் நன்றாக இருப்பார்கள்.

    தி.மு.க. கடந்த சில நாட்களாக மோடி ஆட்சியை ஊழல் ஆட்சி என கூறி வருகிறது. இதற்கு 2024-ம் ஆண்டு தேர்தலின் போது பொதுமக்கள் பதிலளிப் பார்கள். தமிழக அரசுக்கு மத்திய அரசு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது குறித்து 15 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட் டுள்ளோம்.

    சந்திராயன்-3 அனுப்பப் பட்ட நிலாவில் கூட இவ்வளவு குண்டும் குழியும் இல்லை. ஆனால் ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக படு மோசமாக உள்ளது. ராஜ பாளையத்தில் சந்திராயன் விண்கலத்தை இறக்கினால் கவிழ்ந்து விழும் நிலைக்கு சாலை மோசமாக உள்ளது எனவும்

    மற்ற நகராட்சிகளை விட ராஜபாளையத்தில் சொத்து வரி மிக மிக அதிகமாக உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் அதனை தட்டிக் கேட்க வேண்டும்.தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு வந்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

    அப்போது தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டது. சமூக விரோதிகள் குடிநீரில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதனால் காலை சிற்றுண்டி செய்யும் பணி தாமதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தண்ணீரில் சாணம் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசா ருக்கும், பள்ளி உயரதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு அரசு பெண் ஊழியர் துன்புறுத்தினர்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மார்டன் தெருவை சேர்ந்தவர் விக்டோரியா, அரசு பள்ளி ஊழியர். இவருக்கும், கல்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஜான்பிரிட்டோ விருதுநகர் மாஜிதிரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எனது கணவர் தொழில் செய்வதற்காக என்னிடம் பண உதவி கேட்டார். இதற்காக 3 தவணைகளில் வங்கியில் ரூ.23 லட்சம் வரை கடன் பெற்று கொடுத்தேன். ஆனால் அதனை செலவு செய்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்டால் பணம் கொடுத்தால் என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என மிரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் கென்னடி-ஆகத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    தற்போது கூடுதலாக 9 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராணுவ வீரர்

    சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் விமலாதேவி(27). இவருக்கும், வெம்பக் கோட்டை சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் கண்ணன் என்பவருக்கும் 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் விமலாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மதுரை மாநாட்டிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    சிவகாசி

    சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடை–பெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.–வேலுமணி, தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    மதுரை மாநாட்டில் விரு துநகர் இரண்டு மாவட்ட கழகம் சார்பாக ஆயிரக்க ணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு எடப்பாடியார் நன்மதிப்பை பெற்றுள் ளோம். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த காலம் தி.மு.க.வுக்கு இறங்கு முகம், அ.தி.மு.க.வுக்கு ஏறு முகம். ஆகவே நாளை ஆட்சி நமதே, எடப்பாடியார் முதலமைச்சராக போவது உறுதி.

    தி.மு.க.வுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. வருகின்ற தேர்தல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் உருவாக்கக்கூடிய தேர்த லாக அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு தி.மு.க. வினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறு கின்றனர். ஒட்டு மொத்த தமிழகமும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சரா வதை எதிர்நோக்கி காத்தி ருக்கிறது என்றார்.

    தலைமை நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய் யாத குற்றத்திற்காக அவரை தி.மு.க. அரசு பழி வாங்கியது. கொலை குற்ற வாளி போன்று போலீசார் தேடி னர். பொய் வழக்கு போடுவ தையே தி.மு.க. தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர் களுக்கு கழகப் பொதுச்செய லாளர் எடப்பாடியார் உறு துணையாக இருப்பார்.

    விரைவில் நாடாளு மன் றத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் விருது நகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகைசூடும். முன் னாள் முதலமைச்சர் எடப் பாடியார் மீண்டும் முதல மைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெ ரிய எழுச்சியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திர பிரபா முத்தையா, சிவசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன் பத்தமிழன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானு ஜம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளி ரணி செயலாளர் சுபாஷினி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி,

    சிவகாசி ஒன்றிய முன் னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரம ணியம், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்ப சாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
    • இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில் லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை நடத்தி–யது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன.

    மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகர–ணங்களான பேனா, பென் சில் மற்றும் சமைய–லுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை கணினி பயன்பாட்டி–யல் துறை உதவி பேராசி–ரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகி–யோர் செய்திருந்தனர்.

    • முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ளது எழுவணி கிராமம். இங்கு பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் செல்ல பாண்டியன், தாமரை கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிகளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதற்கு சான்றாக உள்ளன.

    ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமா ளுக்கும் தனித்தனியே கோவில்கள் அமைத்து அதிகளவில் நிவந்தங்கள் கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்துள்ளனர்.மக்களும் கோவில்களை பாதுகாத்து வந்தனர்.

    மேலும் அதிக எண்ணிக் கையிலான கோவில்கள் கால ஓட்டத்தில் சிதைந்து காணாமல் போய்விட்டன.இருப்பினும் தற்போது அதிகளவில் சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. இதன் மூலமாக நாம் முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது.

    தற்போது கிடைத்துள்ள விநாயகர் சிற்பமானது 3½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு துதிக்கையானது இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு காட்சியளிக்கிறது.மேலும் 4 கரங்களுடன் விநாயகரின் வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும், வலது கீழ் கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தை ஊரு ஹஸ்தமாக இடது தொடையில் வைத்தவாறும் ராஜ நீலாசனத்தில் அமர்ந்த வாறு காணப்படுகிறது. ராஜ லீலாசனம் என்பது இடது காலை நன்றாக மடக்கியும் வலது காலை செங்குத்தான நிலையில் வைத்திருக்கும் அமைப்பாகும்.

    முற்கால பாண்டி யர்களின் கோவில்கள் காணாமல் போயிருந்தாலும் அவர்கள் காலத்து சிற்பங்க ளும், கல்வெட்டுகளும் அதி களவில் கிடைத்து வரு கின்றன. இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×