என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியானார்.
    • திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள நத்தகுளம் பகுதியை சேர்ந்தவர் பூவணலிங்கம் என்பவரது மகன் பதினெட்டாம்படி, விவசாயி. இவர் நேற்று வீரசோழன் பகுதிக்கு சென்று விதை நெல் வாங்கிக்கொண்டு மீண்டும் தனது சொந்த ஊரான நத்தகுளம் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் ஒட்டங்குளம் சாலையில் வந்து கொண்டி ருந்ததார்.

    அப்போது வீரசோழன்-ஒட்டங்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகளுக்காக சாலையின் குறுக்கே கயிறு கட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு கயிறு கட்டியதற்கு அடை யாளமாக எந்தவொரு எச்சரிக்கை சின்னங்களும் வைக்கப்படவில்லை.

    இதனை கவனிக்காமல் வந்த பதினெட்டாம்படி சாலையின் குறுக்கே கட்டப்படிருந்த கயிற்றில் சிக்கிய நிலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாய மடைந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வீரசோழன் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பதினெட்டாம்படியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்களும், இல்லத்திற்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.

    இதில் துறை தலைவர் பெமினா, உதவி பேராசிரியர்கள் வைரமுத்து, மதுமதி மற்றும் 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    • நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கடம்பங்குளம் பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி(54). இன்று காலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி உள்ளனர். மேலும் நாகலட்சுமி சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்தார்.

    இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாத பொருளாகவே நீடிக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் ஜி-20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு குடியரசு தலைவர் அளித்த விருந்திற்கு அழைப்பு வராதது வருத்தமளிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை உள்ளதால் அது கனவாகவே நீடிக்கும்.

    வெவ்வேறு கொள்கை களை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

    அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா, பாரதம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பால கிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞான புரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மகளின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தந்தையிடம் பணம் கேட்டு வாலிபர் மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த 46 வயது நபர் எலக்ட்ரானிக் நிறுவ னம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ஒருவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் அவரது மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை மெக்கானிக்கிடம் விசாரித்தார். அப்போது அவர் அவதூறாக பேசியதுடன் மகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.

    இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை சீரமைக்க கோரி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ் சாலை பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மீண்டும் மீண்டும் குழிகள் தோண்டப் பட்டு அந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகளுக்கு அந்த சாலையில் பயணிப் பது சிரமமாக உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் அளிக்கப் பட்டும் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட வில்லை. குழிகளை மட்டும் செப்ப னிடும் பணிகளை செய்வ தால் மீண்டும் சாலை சேதமடைந்து விடுகிறது.தற்போது இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் உரிய நிதி ஒதுக்கி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலை மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திர ராஜா, மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு வாரம் தொடர்ச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • மானாசாலை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சுழி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மானாசாலை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தி லிருந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முறையான அனுமதி யுடன் குறிப்பிட்ட வழித்த டங்கள் வழியாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் விதமாக திருச்சுழி, நரிக்குடி மற்றும் மானாச்சாலை ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கண்காணிப்பு காமிராக்களின் காட்சிப் பதிவுகளின் செயல்பாடு களையும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதி யில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • நிறுவனமாக இணைந்து செயல்பட்டால் விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
    • விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:

    நாம் கடையில் சென்று வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும், குறிப்பாக உணவு பொருட்களில், அதன் மிக பெரிய முதலீடை செய்பவர்கள், அதை விளைவிக்கக் கூடிய உற்பத்தியாளர்களான விவசாயிகள். ஆனால் அந்த விலையில் விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு கூட செல்வதில்லை.

    பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாபத்தை விவசாயி களுக்கும், உற்பத்தியா ளர்களுக்கும் அதில் இருக்கக்கூடிய தொழிலா ளர்களுக்கும் தர முடியுமா என்று தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து, அதில் முக்கிய முயற்சியாக விவ சாயிகள், உற்பத்தியா ளர்கள் இணைந்து ஒரு நிறுவனமாக செயல்ப டும்போது, லாபத்தை விவசாயிகளும் உற்பத்தி யாளர்களும் பெற முடியும்.

    ஒரு பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். அதனை தனி நபரால் செய்ய முடியாது என்பதால் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, செய்வதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.உணவு தயாரிப்ப வர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ரமேஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜூலி என்ற மரியசாமி(வயது45). இவர் தனது 17 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதன் காரணமாக விரக்தியடைந்த மரியசாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கே.தொட்டிய பட்டியை சேர்ந்தவர் முருகன்,சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு நோய் பாதிப்பு இருந்ததால் வேலைக்கு செல்ல இயல வில்லை. இதில் விரக்திய டைந்த முருகன் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.

    தாயில்பட்டியை சேர்ந்தவர் சங்கேர சுவரன்(35). இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதில் விரக்தி யடைந்த சங்கரேசுவரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி கற்பகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகின்றனர்.
    • பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாயார் அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியிடம் கூறி உள்ளார். ஆனால் சிறுமி செல்ல மறுத்து அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதன் காரணமாக சிறுமி கடைக்கு செல்ல மறுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலானது.
    • ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி முன்னிலையில் சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. அதில் ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×