என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்
- விருதுநகரில் 100 வேலைக்கு செல்லாமல் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர்.
- இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர்
நாடு முழுவதும் கிராமப் புற மக்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை அளிக்கும் விதமாக மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வந்தனர்.
இதன் மூலம் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், சாலைகள் மேம்படுத்துதல், வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் நடந்தன.
விருதுநகர் மாவட்டத்திலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே 100 நாள் வேலைக்கு செல்வோர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு:-
சாத்தூர்-ஏழாயிரம் பண்ணை ரோட்டில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இதை கண்டித்து சாத்தூர் வட்டார துணை தலைவர் முத்துவேல் தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
இதில் கட்சியினரும், அந்த பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்வோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு செல்லா மல் போராட்டத்தில் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






