என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
    • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    விருதுநகர்

    மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்படும் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி www.tncuicm.com மூலம் 13.9.2023 முதல் 22.9.2023 வரை பெறப்படுகிறது.

    விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள் 22.9.2023 பிற்பகல் 5 மணி வரை ஆகும். மாணவர் சேர்க்கைக் கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண் டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழு நேரம்), பயிற்சி காலம் ஓராண்டு (இரண்டு பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். இதர தகவல்களை அறிந்து கொள்ள www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல் வர் (பொறுப்பு) அலை பேசி எண்: 88071 59088 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • விருதுநகர் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாலா. இவரது மகன் அவினாஷ்(வயது 21). கேட்டரிங் படித்துள்ள இவர் சிவகாசியில் ராதா கிருஷ்ணன் என்பவரின் ஓட்டலில் பணியாற்றி வந்தார். பெரும்பாலும் இவர் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டல் மாடி அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று மாடியில் இருந்த அவினாஷ் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு வரவில்லை.

    இதையடுத்து ராதாகி ருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவினாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவினாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் 100 வேலைக்கு செல்லாமல் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர்.
    • இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    நாடு முழுவதும் கிராமப் புற மக்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை அளிக்கும் விதமாக மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வந்தனர்.

    இதன் மூலம் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், சாலைகள் மேம்படுத்துதல், வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டத்திலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று சாத்தூர் அருகே 100 நாள் வேலைக்கு செல்வோர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு:-

    சாத்தூர்-ஏழாயிரம் பண்ணை ரோட்டில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இதை கண்டித்து சாத்தூர் வட்டார துணை தலைவர் முத்துவேல் தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் கட்சியினரும், அந்த பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்வோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு செல்லா மல் போராட்டத்தில் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • நடத்தை சந்தேகத்தில் மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டினார்.
    • சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது.

    இதற்கிடையே கூலி வேலைக்கு சென்று வரும் அய்யாச்சாமி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சண்டை போட்டு தகராறிலும் ஈடுபட்டு வந் தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த மகாலட் சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித் துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதையறிந்த அய்யாச்சாமி நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை யாக மாலையில் தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அய்யாச்சாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சேத்தூர் புறக்காவல் நிலைய போலீ சார் வழக்குப்பதிவு செய்து அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான அய்யாச்சாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலரை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதன் நிர்வாக அறங்காவலர் ஆனந்த் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தி யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு குத்தகை விடப்பட்டது. ஆனால் அவர்கள் நிலத்தை குத்தகை காலம் முடிந்து ஒப்ப டைக்காமல் விற்பனை செய்துள்ளனர். அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் ஆனந்தை நீக்கி அதற்கு பதிலாக வேறு நபரை இந்து சமய அறநிலை நியமித்தது. இதற்கு தடை விதிக்க கோரி ஆனந்த் மதுரை ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி தனது உத்தரவில் மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் புதிதாக நிர்வாகிகளை நியமித்து குழப்பி வருகிறார்கள்.

    எனவே நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கோவில் அறங்காவலராக புதிய நபரை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது என தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

    • மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன்(23). இவருக்கும் வீரலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் பெண்ணின் உடலை எரித்தனர். இது தொடர்பாக சவுந்தரபாண்டியன் மற்றும் உறவினர்கள் மீது சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் தனது சகோதரி வீட்டின் மாடி அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத் தன்று நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து சகோதரி அங்கு சென்று பார்த்த போது சவுந்தரபாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் சவுந்தர பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகரில் உள்ள பாண்டியன்நகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(20). இவர் கடந்த சில மாதங்க ளாக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் ரமேஷ் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை வாபஸ் பெறுமாறு ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னர் அந்த பெண்ணிடம் வலியுறுத்தினர். ஆனால அவர் மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன்ந கர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • விருதுநகரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்ப டையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 36 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தே கங்களை அகற்றி, வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    • கண்டக்டர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஆலங்குளம் அருகே உள்ள பி.கரிசல்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது42). பள்ளி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்தார். இவ ருக்கு மது பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் அவரது தாய் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே போடப் பட்டிருந்த செட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி முத்துமாரி ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் கரும்புலி ஆண்டவர்(28), கூலித் தொழிலாளி. மது பழக்கத் திற்கு அடிமையான இவர் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி குருவுதாய் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காருக்குள் பேராசிரியர் இறந்து கிடந்தார்.
    • கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணன்(வயது44). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி சசிகலா மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். கண்ணனுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்வத்தன்று காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றார். மனைவி 10 மணியளிவில் செல் போனில் அழைத்தபோது உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து கொண்டிருப்ப தாகவும் கூறி உள்ளார். மாலையில் மனைவி மற்றும் மகன் வீட்டிற்கு வந்தபோது கணவர் வீட்டில் இல்லை.

    ஆனால் செட்டில் கார் நின்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த மனைவி அருகில் சென்று பார்த்தபோது முன்கதவு பூட்டப்படாமல் சாத்தி யிருந்தது. கண்ணன் ஸ்டேரிங்கில் சாய்ந்தபடி கிடந்தார். சாவி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. ஏ.சி.யும் ஓடிக்கொண்டு இருந்தது. பதட்டமடைந்த மனைவி கணவரை எழுப்பி பார்த்தார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தனர். அங்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை உள்ளது. அவரது நினைவு தினத்தை யொட்டி இந்த சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்-அமைச்ச ருக்கு ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் நன்றிகள் தெரிவித்து கொள்வதாக அப்போது எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் நகர செய லாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் மலர் மன்னன், குமார், மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அதில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன், தலைமை நடந்தது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்ப டைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

    முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டும னைப்பட்டாக்களை யும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்ட ரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார்.
    • ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரனின் பெரியப்பா மகன் மாரியப்பன்.

    மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார். இந்த பிரிவுக்கு மகேந்திரனே காரணம் என்று மாரியப்பன் குற்றம்சாட்டினார். மேலும் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினையும் இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பொது கிணற்றில் மகேந்திரன் குளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட மகேந்திரனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மகேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

    ×