என் மலர்
உள்ளூர் செய்திகள்
வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லம்கொ ண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலகாரம் தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார்.
சம்பவத்தன்றும் அவர் வியாபாரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி(18) என்பவர் மாரியப்பனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டஜோதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது. கை விரல்கள் துண்டாகின. வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர் பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டஜோதியை கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் இருந்தது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.