என் மலர்
விருதுநகர்
- விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மேயர், யூனியன் தலைவர்கள் பங்கேற்றனர்.
- 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் 'உடல்நலம் பேணுவோம், விருதுநகர் நலம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட நகர் மன்ற தலைவர்கள், ஊராட்சி யூனியன் தலை வர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை மைதானம் வரை சென்று மீண்டும் மருத்துவ கல்லூரி வளாகத்தை வந்தடையும் வகையில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான போட்டியில் வெம்பக் கோட்டை ஊராட்சி உறுப் பினர் முத்துமாரியப்பன் முதல் பரிசும், இடையன் குளம் பாலமுருகன், சிவ ஞானபுரம் ராமச்சந்திரன் ஆகியோர் முதல் 3 பரிசு களை வென்றனர்.
பெண்கள் பிரிவில் இடையன்குளம் பஞ்ச வர்ணம், அத்திகுளம் முனீஸ்வரி, போல்வாரி பட்டி பஞ்சாயத்து தலைவர் பூரணம் ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.
40 வயதுக்கு மேற்பட் டோர் பிரிவில் சிந்துவம் பட்டி கடற்கரை கொம்பு சின்னம்பட்டி இறையன், நென்மேனி வெற்றிவேல் முதல் 3 இடங்களில் வந்தனர்.
10 கி.மீ பிரிவில் வென்ற வர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
- வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர்.
- முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜ பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மான்ராஜ் எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது ராஜபாளை யத்திற்கு ெரயில்வே மேம்பாலம் பாதாள சாக்கடை தாமிர பரணி திட்டங்களை கொண்டு வந்தோம்.
அரசு பஸ்களில் விளம்ப ரங்களை வைத்து விளம்பர பேருந்தாக மாற்றியுள்ளனர். விளம்பரம் நிரந்தரமாகாது. தமிழக அரசு விரைவில் முடிவுக்கு வரும். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர். என்ன அறிவிப்பார் என்பது மோடிக்கு தான் தெரியும். நீட்டை ஒழிக்க முடியாதென தெரிந்தும் நீட்டை ஒழிப்போம் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.
தி.மு.க. தற்போது சனா தானம் என்ற வார்த்தையை கூறி மக்களை திசை திருப்ப தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வனராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன்,போக்குவரத்துபிரிவு குருசாமி, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகேசன், தலைமை கழக பேச்சாளர் இள முருகன் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.
- லாரி சக்கரத்தில் சிக்கிய போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 32). நரிக்குடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் இன்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்து மானாசாலை செக் போஸ்ட்டிற்கு பணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மறையூர் பாலத்தை கடந்து வளைவில் சென்ற போது ராஜேசுவரனுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ராஜேசுவரன் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலருடன் இளம்பெண் மாயமானார்.
- தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அர்ச்சனாதேவி(வயது20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் அழகர்சாமிக்கு செல்போனில் அழைத்து அர்ச்சனாதேவி தன்னுடன் இருப்பதாகவும் தேட வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்பு அர்ச்சனாதேவி போன் செய்து தன்னை தேடவேண்டாம் என கூறிவிட்டு செல்போனை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு அழகர்சாமி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழைய டெலிபோன் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் பாலசங்கீதா(25). வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் நேரு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1,182 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.
- இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி பள்ளியில் கர்ப் பிணிகள், மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி னார்.
பின்னர், அவர் பேசியதாவது:-
இரும்புப் பெண்மணி திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்ட கங்கள் வழங்கப்பட்ட2-இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் 43,755 வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப் பட்டது. ரத்தசோகை குறை பாடுள்ளவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. தீவிர ரத்தசோகை உள்ள 1,182 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருச்சுழி தொகுதியில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள், 7 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைப் போல மாவட்டத்தின் மற்ற வட்டாரங்களில் தீவிர ரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட கத்தினை பெற்றோர்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப் படும். 3-வது மாத முடிவில் மதிப்பீடு செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். எனவே இரும்பு சத்து குறைபாட்டை போக்க தற்போது வழங்கப் பட்டு வரும் மாத்திரைகள் ஊட்டச்சத்து பொருட்க ளோடு, அன்றாட உணவில் சமச்சீரான ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொண்டு வரும் பட்சத்தில் ரத்த சோகை குறைபாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேசிய கைப்பந்து போட்டி நடந்தது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நாகப்பட்டினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து நடேஷ், நிதீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகினர். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமையாசிரியர் கண்ணன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தில் ஆமத்தூர், குந்தலப்பட்டி, வள்ளியூர், பட்டம்புதூர், தம்ம நாயக்கன்பட்டி, சின்னவாடி, வி.முத்துலிங்காபுரம், தாதம்பட்டி, வச்சக்காரப்பட்டி, கன்னிசேரி புதூர், ஒண்டிப் புலிநாயக்கனூர், கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள யூனியன் தொடக் கப்பள்ளியில் உள்ள சமையலறைகளை தலா ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் மன்னார்குடி, சத்திரரெட்டியபட்டி, மற்றும் பட்டம்புதூர் கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லம்கொ ண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலகாரம் தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார்.
சம்பவத்தன்றும் அவர் வியாபாரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி(18) என்பவர் மாரியப்பனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டஜோதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது. கை விரல்கள் துண்டாகின. வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர் பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டஜோதியை கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் இருந்தது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
- இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
- அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.
இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டார்.
- போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ஊர் பிரச்சினையில் படிக்கும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி கல்வி பாதிக்கப் படுவதோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் அருகே உள்ள நத்தத்துபட்டி, பொட்டல் பச்சேரியை சேர்ந்த சிலருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஒருவரை யொருவர் தாக்குவதும், மோதிக்கொள்ளுவதும் நடந்து வருகிறது.
அதன்படி சம்பவத்தன்று பொட்டல் பச்சேரியை சேர்ந்த ரடால்ப் சர்மா என்ற கல்லூரி மாணவர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நத்தத்து பட்டியை சேர்ந்த முக்தீஸ் வரன், சஞ்சய்பாண்டி, நவீன்குமார், பிரவீன்குமார் ஆகியோர் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.
இதேபோல் சாத்தூர் சிலோன் காலனியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும், அணைக்கரைபட்டியை சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அம்மாபட்டி போலீசார் அந்த ஊரை சேர்ந்த கபிலேஷ், மாதேஷ் மீது வழக்குப்பதிவு செய்து ள்ளனர். மாணவர்கள் மோதலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
- போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிக்கப்பட்டது.
- சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் தெய்வமணி(வயது22), பட்டதாரி ஆசிரியர். இவர் கடந்த 2000 ஆண்டில் மகாராஜா நகரில் நிலம் வாங்கினார். இந்த நிலையில் தற்போது மகளின் படிப்பு செலவிற்காக வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதற்காக வில்லங்க சான்றி தழை சரிபார்த்தபோது, தெய்வமணிக்கு சொந்த மான இடம், கடந்த ஆண்டு தனலட்சுமி என்பவரிடம் இருந்து அவரது கணவர் செந்தில்குமாருக்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் அதனை அவர் மாரிக்கனி, முத்துலட்சுமி ஆகியோருக்கு விற்றுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் அந்த நிலப்பத்திரத்தை வைத்து தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கி யிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த தெய்வமணி இதுகுறித்து விசாரித்தபோது, தனலட்சுமி மகள் என போலி ஆவணத்தை தயார் செய்துள்ளார். மேலும் தெய்வமணி இறந்ததாக கூறி போலி சான்றிதழையும் தயார் செய்து அதன் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் வைரமுத்து, சிவகாசி சார்பதிவாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின் படியும் விருதுநகர், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலா ளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர்.
விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட திருமங்கலம் பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோ கப்படுத்தி வந்த மின்னணு மற்றும் விட்டத்தராசுகன் உள்ளிட்ட 97 எடையளவை கள் பறிமுதல் செய்யப்பட் டன. மேலும் தெரு வோர வியாபாரிகள் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்கள், சந்தை கள் மற்றும் கடைகள் நிறு வனங்களில் உபயோகப் படுத்தப்படும் எடையளவு களை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுமாறும், அதற்குரிய மறுபரிசீலனைச் சான்றினை ஆய்வின்போது காண்பிக்கும் வகையில் வைத்திருக்குமாறும் அறி வுறுத்தினர்.
மேலும் வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடைய ளவை களை அரசால் அங்கீ கரிக்கப்பட்ட விற்பனை யாளர்களிடம் வாங்கும் போது, எடையளவைகள் முத்திரை யிடப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்க்குமாறும், அதற்கான மறுபரிசீலனை சான்றினை கேட்டுப் பெறு மாறும் அறிவுறுத்தினர்.
எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்க ளுக்கு 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத் தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணை யர், துணை ஆய்வாளர், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.






