search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
    X

    விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மேயர், யூனியன் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் 'உடல்நலம் பேணுவோம், விருதுநகர் நலம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட நகர் மன்ற தலைவர்கள், ஊராட்சி யூனியன் தலை வர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை மைதானம் வரை சென்று மீண்டும் மருத்துவ கல்லூரி வளாகத்தை வந்தடையும் வகையில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான போட்டியில் வெம்பக் கோட்டை ஊராட்சி உறுப் பினர் முத்துமாரியப்பன் முதல் பரிசும், இடையன் குளம் பாலமுருகன், சிவ ஞானபுரம் ராமச்சந்திரன் ஆகியோர் முதல் 3 பரிசு களை வென்றனர்.

    பெண்கள் பிரிவில் இடையன்குளம் பஞ்ச வர்ணம், அத்திகுளம் முனீஸ்வரி, போல்வாரி பட்டி பஞ்சாயத்து தலைவர் பூரணம் ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

    40 வயதுக்கு மேற்பட் டோர் பிரிவில் சிந்துவம் பட்டி கடற்கரை கொம்பு சின்னம்பட்டி இறையன், நென்மேனி வெற்றிவேல் முதல் 3 இடங்களில் வந்தனர்.

    10 கி.மீ பிரிவில் வென்ற வர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×