search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness marathon"

    • தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.
    • சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியானது கம்பம் கோம்பை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் தொடங்கி, கோம்பை ரோடு, சந்தை திடல், மெயின் ரோடு வழியாக கம்பம் அரசு மருத்துவமனையை சென்றடைந்து. அங்கிருந்து மெயின் ரோடு வழியாக கம்பம் மெட்டு ரோடு, புது பள்ளிவாசல், தங்க விநாயகர் கோயில் வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மேயர், யூனியன் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் 'உடல்நலம் பேணுவோம், விருதுநகர் நலம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் உள்பட நகர் மன்ற தலைவர்கள், ஊராட்சி யூனியன் தலை வர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர், பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக போட்டி நடந்தது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஆயுதப்படை மைதானம் வரை சென்று மீண்டும் மருத்துவ கல்லூரி வளாகத்தை வந்தடையும் வகையில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான போட்டியில் வெம்பக் கோட்டை ஊராட்சி உறுப் பினர் முத்துமாரியப்பன் முதல் பரிசும், இடையன் குளம் பாலமுருகன், சிவ ஞானபுரம் ராமச்சந்திரன் ஆகியோர் முதல் 3 பரிசு களை வென்றனர்.

    பெண்கள் பிரிவில் இடையன்குளம் பஞ்ச வர்ணம், அத்திகுளம் முனீஸ்வரி, போல்வாரி பட்டி பஞ்சாயத்து தலைவர் பூரணம் ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

    40 வயதுக்கு மேற்பட் டோர் பிரிவில் சிந்துவம் பட்டி கடற்கரை கொம்பு சின்னம்பட்டி இறையன், நென்மேனி வெற்றிவேல் முதல் 3 இடங்களில் வந்தனர்.

    10 கி.மீ பிரிவில் வென்ற வர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 5 கி.மீ. பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
    • இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந் நிலையில் கொலக்கம்பை காவல் துறையினா், மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞா் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டம் சேலாஸ் பஜாா் பகுதியில் தொடங்கி கொலக்கம்பை வரை நடைபெற்றது.

    மலையக மக்கள் அறக்கட்டளையைச் சோா்ந்த மதிவாகனம் வரவேற்றாா். குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் கோவிந்தசாமி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

    இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் சிறுவா்கள், இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா். இதில் சிறியவா்களுக்கு ஒரு கிலோ மீட்டா், நடுத்தர வயதினருக்கு நான்கு கிலோ மீட்டா், பெரியவா்களுக்கு 10 கிலோமீட்டா் வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கொலக்கம்பை காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கோவை,

    புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள்,டாக்டர்கள், மருத்துவதுறை சார்ந்த வர்கள், செவிலி யர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மாரத்தான் கோவில்பா ளையம் கே.எம்.சி.எச் மருத்து வமனையில் தொடங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் நிறைவுற்றது. இதில் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசும்போது, கோவையில் கேஎம்சி.எச் சார்பாக முதல் மாரத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். புற்றுநோயை குணப்படுத்துதல் தொடர்பாக இம்முறை இந்த மாராத்தான் நடைபெறுகிறது என்றார்.மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • திருச்சியில் இன்று போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெகடர் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புடன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்.

    இதனை நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடத்திலும் மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன் என்று பேசினார்.

    இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் (கலால்) ரெங்ஙசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, கோட்டத்தலைவர் ஜெயநிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    • மராத்தானில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் பேசும்போது போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

    நெல்லை:

    போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் வண்ணம் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமராத்தான் பாளையில் இன்று நடைபெற்றது.

    இதனை நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் துணைகமிஷனர் சீனிவாசனும் மராத்தான் ஓடினார். பாளை தனியார் கல்லூரியில் தொடங்கிய மராத்தான் அண்ணா விளையாட்டரங்கம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது.

    அப்போது பேசிய துணைகமிஷனர் சீனிவாசன் போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

    மேலும், மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் இன்ஸ்பெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×