கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்

26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
Published on

கோவை,

புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள்,டாக்டர்கள், மருத்துவதுறை சார்ந்த வர்கள், செவிலி யர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மாரத்தான் கோவில்பா ளையம் கே.எம்.சி.எச் மருத்து வமனையில் தொடங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் நிறைவுற்றது. இதில் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசும்போது, கோவையில் கேஎம்சி.எச் சார்பாக முதல் மாரத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். புற்றுநோயை குணப்படுத்துதல் தொடர்பாக இம்முறை இந்த மாராத்தான் நடைபெறுகிறது என்றார்.மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com