என் மலர்
விருதுநகர்
- தொழிலதிபர்- டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராமலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்லூர்து சந்திரன். இவர் இ-மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வந்தார். தொழிலில் சுமார் ரூ.1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள் ளார்.
இந்த நிலையில் சம்பத்தன்று ஷோரூமில் உள்ள தனியறையில் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள் ளார். பின்னர் அங்கு வந்த அவரது மகன் கதவை தட்டி உள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது ஆல்பர்ட்லூர்து சந்திரன் தூக்கில் தொங்கிய படி பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே மேலபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டாசு ஆலை டிரைவர். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமை யானார். வேலைக்கு செல் லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன விரக்தி யடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் ரத்தினம் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை குகன்பாறை இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்திருளாண்டி(வயது70), வளையல் வியாபாரி. வியாபாரம் சரிவர இல்லாத தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது பேரன் அபினேஷ் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பரளச்சி-நல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (என்ற) கஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி முத்துநாகு (23) என்ற மனைவி இருக்கிறார்.
மேலும் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை பிறந்து இறந்து போன நிலையில் பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மணிகண்டன் நல்லாங்குளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளி அருகே வெட்டு காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் இவர் நல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிகமாக அரங்கேறி வரும் சட்ட விரோத செயல்களான மணல் கடத்தல், கள்ளத்தனமான மதுபான விற்பனை, கஞ்சா ஆகியவற்றிற்கு எதிராக சமூக ஆர்வலராக குரல் கொடுத்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்ததால் இந்த கொலை சம்பவம் நேற்று இரவு நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சம்பவம் நடந்த இடமான அரசு தொடக்கப் பள்ளி அருகேயுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உடனிருந்தார்.இதனையடுத்து முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்ட பரளச்சி போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன்-முத்துநாகு தம்பதியினருக்கு குழந்தை பிறந்து இறந்ததால் பல்வேறு குடும்ப பிரச்சினை காரணமாக அடிதடியாகி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்த நிலையில் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையேதான் மணிகண்டன் இன்று கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன் பகையால் நடந்த கொலையா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியே ஆள் வைத்து கணவரை கொலை செய்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விவாகரத்து கேட்டு மனைவியை கணவர், கள்ளக்காதலியை மிரட்டினர்.
- அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பிரிஞ்சா குளம் பகுதியை சேர்ந்தவர் வீரபிரபு. இவரது மனைவி லதா (23). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு இளம் பெண்ணை வீரபிரபு வீட்டிற்கு அழைத்து வந்தார். லதா அது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் தொட்டியங்குளத்தை சேர்ந்த பூமி(23) என்றும் அந்த பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அதனால் லதா தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஆனால் லதா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது லதா விவகாரத்து தராவிட்டால், அவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக கணவரும், பூமியும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதை யடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. பெண் கவுன்சிலர்-கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் நேருஜி நகரை சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மூர்த்தி (வயது33). இவரது மனைவி ஆஷா (31). இவர் விருதுநகர் நகராட்சியில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.
நேற்று இவரது வார்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனை ஆஷா தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும், மகேஷ்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஆஷா தங்களை தான் வீடியோ எடுப்பதாக நினைத்து மாரீஸ்வரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா, அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த 2பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்றனர். இந்த பிரச்சினையில் தானும் தாக்கப்பட்டதாக மாரீஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகர் அருகே இலங்கை தமிழர் முகாம்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
- சாவியினையும், வீட்டு உபயோக பொருட்களையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் கட்டப்பட்டுள்ள ரூ.79.70 கோடி மதிப்பில் 1591 புதிய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி செவலூரில் ரூ.3.11 கோடி மதிப்பில் 62 வீடுகள், அனுப்பன்குளம் மையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 வீடுகள், குல்லூர்சந்தை மையத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் என மொத்தம் ரூ.7.2 கோடி மதிப்பில் 140 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி சிவகாசி செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் புதிய வீடுகளை பார்வையிட்டு கலெக்டர் குத்துவிளக்கேற்றி னார். புதிய வீடுகளுக்கான சாவியினையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்க ளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திடீர் மரணமடைந்த ராஜபாளையம் போலீசார் குடும்பத்துக்கு நிதி உதவியை டி.எஸ்.பி. பிரீத்தி வழங்கினார்.
- 1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
1993-ம் ஆண்டு பேஜ் காவலர்களின் காக்கும் கரங்கள் சார்பாக உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை மரணமடைந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிவையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நாகராஜ் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தை சேர்ந்த இவ ரது மனைவி ஆண்டாள் (வயது49), ஜெயப்பிரகாஷ் (22), அபிநேஸ் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 1993 பேஜ் காவல்துறையினர் சார்பில் அனைவரும் சேர்ந்து ரூ.7லட்சத்து 4 ஆயிரத்து 500 பணத்தை திரட்டினர். இதில் அவரது தாயாருக்கு ரூ.1 லட்சமும், மீதி தொகையை அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் ராஜபாளையம் டி.எஸ்.பி பிரீத்தி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜ், மனோகரன், வடக்கு காவல் நிலையம் முத்து கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மணி கண்டன் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
- விலைவாசி, வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகாசி
சிவகாசி அருகே சாட்சி யாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மான சாராம்சத்தின் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டதிற்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலா ளருமான லட்சுமி நாரா யணன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-
கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் திறக்கப்பட அடிப்படை காரணம் தி.மு.க. தான். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மது கடை களையும் மூடவில்லை, மிகப்பெரிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை. புதிய திட்டங்க ளையும் அறிவிக்கவில்லை.
கடந்த கால எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி களில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பொற்கால ஆட்சி நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து மதத்தினர்களும் புனித யாத்திரை மேற்கொள்ள கோடிக் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு விலை யில்லா மடிக்கணினி, மிதிவண்டி அதேபோன்று மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வழங்கப்பட்டது.
நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்பதற்காக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 ஆயிரம் டாக்டர்கள் உருவாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகள், தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்ப டைந்து, விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பொது மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்ட த்தில் தலைமை கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட முன்னாள் இந்து சமய அறங்கா வலர் குழுத் தலைவர் பல ராம், மாமன்ற உறுப்பினர் கரை முருகன், சிவகாசி ஒன்றிய கழக துணை செயலாளர் இளநீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போதிய விழிப்புணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தவிர்க்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
- இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுப்பதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களி டையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நண்பர்கள் மூலமும், சூழ்நிலையின் காரணமாகவும் போதை பழக்கம் உருவாகிறது.
சரியான விழிப்பு ணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் தவிர்க்கலாம். போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல. மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
- புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
சிவகாசி
திண்டுக்கல்லில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் திண்டுக்கல் பார்வதி கல்லூரி வணிகவி யல் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.
பார்வதி கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுரு கன், வணிகவியல் துறை தலைவர் குருசாமி, திண்டுக்கல் கல்லூரி முதல்வர் சுகுமார், வணிகவியல் துறை தலைவர் வனிதா ராணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இதற்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் பாபு பிராங்க ளின் செய்திருந்தார்.
- பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் பாண்டிகாளி (வயது22). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜபாளையத்தை அடுத்துள்ள தெற்கு மலையடிப்பட்டியில் குடும்பத்துடன் வீடெடுத்து தங்கினர். இந்த நிலையில் பாண்டிகாளி அவரது தாய்மாமன் காளீஸ்வரன் ஆகியோர் மது குடித்து வந்தது அப்பகுதி மக்களிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாண்டிகாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
நேற்று ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கிற்காக ஆஜராகிவிட்டு காளீஸ்வரன், பாண்டிகாளி ஆகியோர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (22), ஈஸ்வரன் (30), சுந்தர்ராஜ் (25) ஆகிய 3 பேர் பாண்டிகாளி, காளீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் பாண்டிகாளியை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியாலும் குத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிகாளி இறந்தார். இதுகுறித்து முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.
- இந்தியாவிலேயே முதல் முறையாக உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
- அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைைம வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் மொத்தம் 2050 பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.
மகளிர் இலவச பஸ், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
குடும்பத்தை உயர்த்து வதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.
- நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இதன் மூலம் 741 நெசவாளர்கள் வரை பயன டைந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ராஜபாளை யத்தில் உள்ள தெற்கு வைத்தியநாதபுரம் தெரு சாலியர் சமுதாய கூடத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், விருதுநகர் மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, ராஜபாளையம் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மற்றும் மணிகண்டராஜா, சுகாதாரத்துறை சார்பில் ஜமீன் கொல்லங் கொண்டான், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து ஆகியோர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலுவ லர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி.இ. எக்ஸ்ரே, ரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 741 நெசவா ளர்கள் வரை பயன டைந்தனர்.
மேலும் இம்முகாமில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடும் விழா, கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகிய வையும் நடைபெற்றது.






