என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் பலி
  X

  பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் பலியானார்.
  • நண்பர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  விருதுநகர்

  சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது20). இவர் தனது பிறந்தநாளை கொண்டாட சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர், முனீஸ்வரன், பிரபாகரன், ராஜமுகமது, செல்வகுமரன், மணிகண்டன், முத்து மாரீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகிய நண்பர்களை அழைத்தார்.

  இவர்கள் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள அட்டை மில் ஒன்றில்கார்த்தீஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடி னர். பின்னர் அவர்கள் காரில் சாத்தூர் புறப்பட்ட னர். காரை முனீஸ்வரன் ஓட்டினார். கோணம்பட்டி பகுதியில் உள்ள பாலி டெக்னிக் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் அனை வரும் காய மடைந்தனர். அங்கி ருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதில் மேல்சிகிச்சைக் காக கார்த்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கார்த்தீஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×