என் மலர்
விருதுநகர்
- கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணிடம் 21 பவுன் நகைகளை கணவன்-மனைவி அபகரித்தனர்.
- கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது45). இவருக்கு மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக விளாம்பட்டியை சேர்ந்த ஜூலியட் ராணி, அவரது கணவன் சுந்தரமூர்த்தி ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் நட்பாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக மகேஸ்வரியிடம் ஜூலியட் ராணி கேட்டார். ஆனால் தற்போது பணம் இல்லை என்று மகேஸ்வரி கூறி யுள்ளார். ஆனால் ஜூலியட் ராணி வற்புறுத்தி கேட்டுள்ளார். அதன்பின்னர் தனது 3 பவுன் நகையை மகேஸ்வரி கொடுத்துள்ளார்.
இதனிடையே வீட்டு கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜூலியட் ராணியிடம் மகேஸ்வரி கூறியுள்ளார். அப்போது தாங்கள் நகையை அடகு வைத்து கடன் பெற்று தருவதாக ஜூலியட் ராணி கூறியுள்ளார்.
அதனை கேட்ட மகேஸ்வரி தான் ஏற்கனவே அடகு வைத்திருந்த 18 பவுன் நகைகளை திருப்பி ஜூலியட் ராணியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். சந்தேகமடைந்த மகேஸ்வரி அதுகுறித்து விசாரித்த போது
ஜூலியட் ராணியும், அவரது கணவரும் தங்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதும், அந்த பணத்தை மகேஸ்வரிக்கு கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜூலியட் ராணியிடம் பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நகைகளை திருப்பி கொடுக்குமாறு மகேஸ்வரி கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. நகைகளையும் கொடுக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மகேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராம லிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபோதகர் (வயது32). வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி ஜெனிட்டா (23). இவர்க ளுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வபோதகர் தனது தாய்-தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் செல்வபோதகர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மனைவி செல்போனில் அழைத்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
பின்னர் கணவரின் தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் விசாரித்த போது விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் ரெயில்வே பாலம் அருகே செல்வபோதகர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் ஜெனிட்டா புகார் கொடுத்தார்.
அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரலொட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை- அங்கன்வாடியில் கலெக்டர் ஜெயசீலன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
- அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், வரலொட்டி கிரா மத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவை களின் தரம் குறித்து கேட்ட றிந்தார்.
பின்னர் அங்குள்ள கிராம அங்கன்வாடி மையத் தில் குழந்தைகள் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் அதன் தரம் குறித்து கேட் டறிந்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்ட மைப்புகள், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், குழந் தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார்.
- ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). இவரது மனைவி குணசுந்தரி (55). இவர் நேற்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் இவரை பாம்பு கடித்துள்ளது. இதனை அறியாத அவருக்கு நேரம் செல்லச்செல்ல உடலில் விஷம் பரவி சோர்வானார்.
அதன்பிறகே தன்னை பாம்பு கடித்துள்ளதை உணர்ந்த குணசுந்தரி லேசான மயக்கமடைந்தார். இருப்பினும் அவர் சுய நினைவுடன் இருந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு மதியம் 1 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை நடந்தது.
அப்போது வரை குணசுந்தரி சுயநினைவுடன் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானது. சுமார் 1 மணி நேரமாக குணசுந்தரி காத்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல் முழுவதும் விஷம் பரவி உயிருக்கு போராடினார். பின்னர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.
சமீப காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் இல்லையென, சிகிச்சைக்காக வந்து இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில் தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்த 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பரிதாபமாக ஒரு உயிர் போய்விட்டதே என அனைவரும் ஆதங்கப்பட்டனர்.
முன்னதாக குணசுந்தரியை நரிக்குடிக்கு அழைத்து வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பாம்பு கடித்து விட்டது என்று உறவினர்கள் பதட்டத்துடன் கூறியபோது, அங்கு பணியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் உள்ள சீட்டு பதியும் இடத்தில் நோட்டு வாங்கி வா, முதலில் பெயரை பதிவு செய்ய வேண்டுமென மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொண்டதாகவும் உறவினர்கள் கூறினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருஞ்சிறை பகுதியை சேர்ந்த அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் மணிகண்டன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது இதே நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாததால் தான் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரது மனைவியும், உறவினர்கள் கோபமடைந்து மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போதும் இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து நாளைடைவில் நரிக்குடி அரசு மருத்துவமனை பக்கமே நோயாளிகள் வராமல் போகும் சூழ்நிலை கூட மிக விரைவில் ஏற்படும் என ஆவேசத்துடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட கலெக்டர் உயிருக்கு போராடும் மனித உயிர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு மருத்துவ முகாம்கள் 26-ந்தேதி வரை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தை களுக்கு மருத்துவச் சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ள உள்ளது. எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் அல்லது 04562-252068 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:-
22-ந்ேததி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யிலும், 29-ந்தேதி கல்குறிச்சி காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 3-ந்தேதி எம். ரெட்டியபட்டி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியி லும், 5-ந்தேதி அருப்புக் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 10-ந்தேதி ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13-ந்தேதி சாத்தூர் எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும், 17-ந்ேததி வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந்தேதி மகாராஜபுரம் வத்ராப் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியி லும், 26-ந்தேதி சிவகாசி நகராட்சி எ.வ.டி.உயர்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமானதாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.17 லட்சம் மதிப்பில் அம்மா பட்டி சாலையிலிருந்து கே.புதூர் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
நென்மேனி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவல கத்தினையும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் நென்மேனி-வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
முதல்-அமைச்சர் கிராம சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.13 லட்சம் மதிப்பில் வன்னி மடை முதல் பெரியகுளம் கண்மாய் வரை சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வன்னிமடை ஆதிதிராவிடர் காலனியில் ரூ.37.43 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதேபோல் சிந்து வார்பட்டி, போத்தி ரெட்டியாபட்டி, உப்பத்தூர், முள்ளிசெவல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமான தாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
- மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.
பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விநாயகர் சிலை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
- 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த 35 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் தொழில் அதிபர் குவைத் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரில் முக்கிய வீதி வழியாக சென்றது. இதில் வயல்வெளியில் விதை தூவும் விநாயகர் விவசாயி, புல்லட் பைக் ஓட்டும் விநாயகர், ஹெவி வெயிட் சாம்பியன் விநாயகர் என பல்வேறு விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.
ஊர்வலத்தில் பிரமாண்ட சோபக்கிருது விநாயகர் முன்னே சென் றது. இந்த வாகனத்தில் சாரதியாக சமூக சேவகர் ராமராஜ் இருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தன
இறுதியில் ஆகம விதி முறைப்படி ஐ.என்.டி.யூ. சி. நகர் முன்புள்ள புதியா தியார் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் படி ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3
டி.எஸ்.பி.க்கள் 10 ஆய்வா ளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக மூன்று வேலை அன்ன தானம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ஏழை எளியவர்களுக்கு சீர்வரிசைகளோடு இலவச திருமணங்கள், தொழிலாளி களுக்கு இலவச சைக்கிள் கள் வழங்கி பக்தர்கள் வியக்கும் வகையில் வீதி உலாவை நடத்திய மன்ற தலைவரும், சமூக சேவ கருமான ராமராஜூக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
- மேல்நிலை தொட்டிக்கு செல்லும் தண்ணீரை மோட்டார் வைத்து திருடும் தனிநபர்களால குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்படுகிறார்கள்.
- குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் பனைக்குடி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பல மாதங்களாக குடிநீருக்காக கடும் அவதி வருகின்றனர்.
பனைக்குடி பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை தொட்டி மட்டுமே உள்ளது.இதற்கு நாள்தோறும் குடிநீர் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் பனைக்குடி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வரும் தனி நபர்கள் சிலர் பம்பு செட்டிலிருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குடிநீரை திருடி தங்களது வீடுகளில் வைத்துள்ள சின்டெக்ஸ் டேங்குகளில் நிரப்பி வருகின்றனர்.
இதனால் கிராம மக்கள் போதிய குடிநீர் கிடைக்க வழியின்றி கடும் அல்லல் படுகின்றனர். சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீரை சேகரிப்பவர்கள் குளிப்ப தற்கும், புழங்குவதற்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சவும் என வீணாக பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்து வரு கின்றனர்.
நாள்தோறும் குடிக்கவே தண்ணீரின்றி குடங்களை தூக்கிக்கொண்டு அடுத் தடுத்த தெருவிற்கு அலைந்து வரும் சூழ்நிலையில் தனி நபர்களின் இவ்வாறான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமயங்களில் மேல் நிலை தொட்டி நிரம்பினா லும் குடிநீர் வீணாகி 24 மணி நேரமும் மின் மோட்டார் இயங்குவதுடன் குடிநீரும் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் ஆறாக ஓடுவதாகவும், இது குறித்து ஆபரேட்டரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து கண்டுகொள்வதே இல்லையெனவும் பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆகவே சம்மந்தப்பட்ட நரிக்குடி யூனியன் அலுவலக அதிகாரிகளும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் உடனடியாக பனைக்குடி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீரை வழிமறித்து அதனை சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீரை வீணாக்கி வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் குடிநீர் நீரேற்று நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கி அதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாக முக்கிய காரணமாக இருந்து வரும் குடிநீர் ஆப்ரேட்டர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி களின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்களும், சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்றார்.
- முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புதிய அறங்காவலர்களாக ராம்கோ சேர்மன் வெங்கட் ராமராஜா, ராம்குமார் வரதராஜன், உமாராணி, நளாயினி, மனோகரன் ஆகி யோரை தேர்வு செய்து தமிழக அரசின் அறநிலை யத்துறை அறிவித்தது. அதன் பிறகு அறங்காவ லர்கள் குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக்கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் இந்து அறநிலை யத்துறை இணை ஆணை யாளர் செல்லத் துரை, உதவி ஆணையாளர் வளர் மதி, நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன், இளைஞர் அணியை சேர்ந்த ஆர்.வி.கே. துரை, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காளிமுத்து, நகர் மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், துணை சேர்மன் செல்வமணி, மாவட்ட அரசு வக்கீல் திருமலையப்பன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், முனியாண்டி, மம்சாபுரம், உதயசூரியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய அறங்காவலர் குழுவினருக்கு முக்கிய பிரமுகர்கள் பொன் னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மலிங்கம் (வயது52). இவரது மனைவி முத்து லட்சுமி. யூனியன் துணைத்தலைவராக உள்ளார்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை விருதுநகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் செய்து வந்தார். அதன்படி நேற்று இரவு நோட்டீஸ் வழங்குவதற்காக சென்னல்குடி, கோட்டூர் பகுதிகளுக்கு சென்றார்.
கோட்டூரில் உள்ள அதிமுக மாணவரணி நிர்வாகி அலுவலகத்தில் தர்மலிங்கம் இருந்த போது யூனியன் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்ப னின் மகன் செந்தூர்பாண்டி அங்கு வந்தார். நிர்வாகி களை நியமனம் செய்வது தொடர்பாக தர்ம லிங்கத்துக்கும், செந்தூர் பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் தர்மலிங்கத்திற்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை காரை ஓட்ட முயன்ற கார் டிரைவர் கடம்பன் குளத்தை சேர்ந்த மகேஷ்கண்ணன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்கா ரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் பலியானார்.
- நண்பர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்
சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன்(வயது20). இவர் தனது பிறந்தநாளை கொண்டாட சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர், முனீஸ்வரன், பிரபாகரன், ராஜமுகமது, செல்வகுமரன், மணிகண்டன், முத்து மாரீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகிய நண்பர்களை அழைத்தார்.
இவர்கள் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள அட்டை மில் ஒன்றில்கார்த்தீஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடி னர். பின்னர் அவர்கள் காரில் சாத்தூர் புறப்பட்ட னர். காரை முனீஸ்வரன் ஓட்டினார். கோணம்பட்டி பகுதியில் உள்ள பாலி டெக்னிக் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் அனை வரும் காய மடைந்தனர். அங்கி ருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மேல்சிகிச்சைக் காக கார்த்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கார்த்தீஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






