search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk vendor"

    • காரியாபட்டி அருகே பால் விற்பனையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
    • அவர் மனவிரக்தியுடன் காணப்பட்டார்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள டி.செட்டிக்குளத்தை சேர்ந்தவர் சபரிமுருகன். தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு பால் விற்பதற்காக சென்றார்.

    இந்த நிலையில் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் விடுதி அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சபரிமுருகனின் சகோதரர் முருகபாண்டி புகார் கொடுத்தார்.

    அதில், கடந்த சில நாட்களாக சபரிமுருகன் ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்ததாகவும், மனவிரக்தியுடன் காணப்பட்டதாகவும் கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    • மகேஷ்வரிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்தது.
    • முருகன் திடீரென ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வண்டி மலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருத்தபாண்டி. இவரது மகன் முருகன்(வயது 29). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

    தற்கொலை

    இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு 2-வது குழந்தை பிறந்தது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த அந்த பிரசவத்தின்போது திடீரென மகேஷ்வரி இறந்துவிட்டார். இதனால் முருகன் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் சரிவர தொழிலையும் கவனிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று செங்கோட்டை போலீஸ் நிலையத்தின் மேல்புறம் உள்ள ஆலமரத்தில் திடீரென முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் விசாரணை

    தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்ப திவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பால் வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மைய்யா. இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 25). பால் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    பின்னர் அவரை ஓசூர் மற்றும் மாலூரில் உள்ள நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வெங்கடேசுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாபு ஆஜர் ஆனார். 
    ×