பால் விற்பனையாளர் தற்கொலை

காரியாபட்டி அருகே பால் விற்பனையாளர் தற்கொலை செய்துகொண்டார். அவர் மனவிரக்தியுடன் காணப்பட்டார்.
பால் விற்பனையாளர் தற்கொலை
Published on

விருதுநகர்

காரியாபட்டி அருகே உள்ள டி.செட்டிக்குளத்தை சேர்ந்தவர் சபரிமுருகன். தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு பால் விற்பதற்காக சென்றார்.

இந்த நிலையில் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் விடுதி அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சபரிமுருகனின் சகோதரர் முருகபாண்டி புகார் கொடுத்தார்.

அதில், கடந்த சில நாட்களாக சபரிமுருகன் ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்ததாகவும், மனவிரக்தியுடன் காணப்பட்டதாகவும் கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com